ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: இந்தியாவுக்கு குடியரசு கட்சி எதிர்ப்பு

Updated : செப் 02, 2012 | Added : ஆக 31, 2012 | கருத்துகள் (11)
Share
Advertisement
 ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: இந்தியாவுக்கு குடியரசு கட்சி எதிர்ப்பு.India should cut down on its import fr

தாம்பா:"ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்க, இந்தியா, கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என, அமெரிக்க குடியரசுக் கட்சி வலியுறுத்திஉள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும், நவம்பர் மாதம் 6ம் தேதி, நடக்க உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, குடியரசுக் கட்சி வேட்பாளராக, மிட் ரோம்னி, 65, களமிறங்குகிறார்.ரோம்னியை தேர்வு செய்து, அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்க, புளோரிடா மாகா ணத்தில் உள்ள தாம்பாவில், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு நடந்தது.

பெரும்பான்மை உறுப்பினர்களால் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட ரோம்னி பேசியதாவது:எரிசக்தித் தேவையில் முற்றிலும் சுயசார்பு நாடாக அமெரிக்காவை மாற்றுவேன். நிதிப் பற்றாக்குறையை போக்கி, 1.20 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். பிரச்னையில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை வெற்றிகரமாக மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.வெளியுறவு விவகாரங்களை பொறுத்தவரை, உலக நாடுகளுடன் அமெரிக்கா நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருப்பதை உறுதி செய்வோம்.

ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை, ஒபாமா தலைமையிலான அரசு தடுக்காமல் விட்டது, ஒவ்வொரு அமெரிக்கரையும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிட்டது.சர்வதேச அளவில், ஈரானையும், சீனாவையும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு கடுமையாக கையாளத் தவறிவிட்டது. உள்நாட்டிலும், ஒபாமா வின் கொள்கைகள், நடுத்தர மக்களுக்கும், வேலையற்ற மக்களுக்கும் உதவவில்லை.சிறுதொழிலுக்கான வரியை உயர்த்தியது, வேலையின்மையை உருவாக்கிவிட்டது. நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் துறையில் குளறுபடி செய்ததால், எரிபொருள் மற்றும் உற்பத்தித் துறை வேலைவாய்ப்புகள், சீனாவுக்கு மாறிவிட்டன.இவ்வாறு ரோம்னி பேசினார்.

மாநாட்டு நிகழ்ச்சிகளின் இடையே, குடியரசுக் கட்சியின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு பொறுப்பு வகிக்கும் ரிச்சர் கிரினெல், நிருபர்களிடம் கூறியதாவது: ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க, இந்தியா சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், மிக முக்கியமான இப்பிரச்னையில் இந்தியா இன்னும் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க, இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். ஆனால், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த, இந்தியா இன்னும் சற்று கூடுதலாக முயல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
01-செப்-201211:43:23 IST Report Abuse
periya gundoosi இவன் ஒரு வீணாப் போனவன், சீட்டில வந்து உட்காரும் முன்னமேயே அமெரிக்கன் என்றால் இப்படித்தான் என்று நிரூபிக்கிறான். இவன் பேச்சைக் கேட்டுக்கொண்டு இந்தியா ஈரானைப் பகைத்தால் பெட்ரோல் லிட்டர் ரூ200க்கு வாங்கும்படியாச் செய்துவிடுவார்கள். இவனுங்களுக்கு ஒவ்வொரு ஆட்சி மாறும் பொழுதும் எந்த முஸ்லிம் நாட்டையாவது அடிச்சி நாசமாக்கி துவம்சம் பண்ணனும், 7 வருஷம், 8 அங்கே அடிமேல் அடிவாங்கிக்கிட்டு திரும்ப ஓடனும். வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தானில் வாங்கிய, வாங்கிக்கிட்டுக்கிற அடி இவனுங்களுக்கு பத்தாது. இதுக்கு முன்னே ஒபாமாவும் இப்படித்தான் வாய் சவடால் விட்டார், ஒன்னும் முடியலை. இப்ப இவரு விடுறார்.
Rate this:
Cancel
Unmai - Jeddah,இந்தியா
01-செப்-201211:20:11 IST Report Abuse
Unmai ஆக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தினால் தான் ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க, இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று சொல்றீங்க... அதான என்னைக்கு மற்ற நாடுகளுக்கு பிரதிபலன் பார்க்கம உதவி இருக்கீங்க... ஏற்கனவே இங்க பெட்ரோல் விலை தாறுமாறா இருக்கு. இப்போ ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்து மக்களை கஷ்டத்தில் ஆழ்த்த விரும்புறீங்க.. உனக்கு எப்படி ஒவ்வொரு அமெரிக்கனும் முக்கியமோ அது போலதான் எல்லா நாடுகளுக்கும்.... மற்ற நாடுகள் விசயத்தில் தலையிடாமல் இருந்தாலே நீ உலகத்துக்கு செய்ற நன்மைதான்......
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-செப்-201207:49:30 IST Report Abuse
Kasimani Baskaran கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்தால் ஈரான் என்ன - எண்ணையே வேண்டாம் என்று சொல்ல நம்மிடம் அறிவார்ந்த அரசியல் வாதிகள் இருக்கும் பொழுது யாரை சொல்லி என்ன பயன்? இலங்கையை கண்டே பயப்படும் நம் ஆட்கள் அமெரிக்காவை கண்டால் பேய் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X