பொது செய்தி

இந்தியா

உருகி மிரட்டும் பனிப்பாறைகள்

Added : செப் 07, 2012 | கருத்துகள் (1)
Advertisement
உருகி மிரட்டும் பனிப்பாறைகள்

ஆர்க்டிக் கடல் பகுதியில் உள்ள பிரமாண்ட பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாக, நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். துருவ பகுதியில் உள்ள பனிப்பாறைகள், உலக தட்பவெப்பத்தை நிர்ணயிப்பதிலும், கடல் மட்டத்தை அளவாக வைத்திருப்பதிலும், முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, 1979ம் ஆண்டிலிருந்து, பனி உருகும் தன்மை செயற்கோள்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. தற்போது, பூமி வெப்பமடைதலின் காரணமாக, பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.


ஆர்க்டிக் கடலில், குறிப்பிட்ட பகுதியில் 2007ம் ஆண்டு 4.17 சதுர கி.மீட்டராக இருந்த பனிப்பாறையின் அளவு, தற்போது 4.1 சதுர கி.மீ., ஆக குறைந்துள்ளது. பொதுவாக, குளிர்காலத்தில் பனியின் உருகும் தன்மை குறைவாக இருக்கும். ஆனால், கோடை காலத்தில் உருகும் தன்மை ஆண்டுதோறும், 13 சதவீதம் அதிகரிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், 2016ம் ஆண்டு ஆர்க்டிக் கடல், பனிப்பாறைகள் இல்லாததாக மாறிவிடும் என்கின்றனர். இதனால், காலநிலையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. பனிப்பாறைகள் உருகுவதால், கடல் நீரின் அடர்த்தி குறைகிறது. நீர்மட்டம் அதிகரித்து கடல்வாழ் உயிரினங்கள், வன விலங்குகள், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இப்பிரச்னைக்கு அதிகரித்து வரும் வெப்பநிலை, காடுகள் அழிப்பு, இயற்கைக்கு எதிராக மனிதர்களின் செயல்கள் போன்றவை காரணம். எனவே, இயற்கை சமநிலையை பேண வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANITHAN - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-செப்-201215:05:57 IST Report Abuse
MANITHAN கமெண்ட் கண்மணிகள் இதற்கு கமென்ட் ஒன்றும் எழுதவில்லையே?ஏன் இதற்கும் கலைஞர், ஜெயா,காங்கிரஸ் தான் காரணமென்று கருத்து எழுதவேண்டியது தானே. ஏனென்றால்,நமக்கு அடுத்தவர்களை குறை கூறமட்டுமே தெரியும், நம் குறை தெரிவதில்லை.போங்க போயி மரம் வளர்த்து உலகை காக்கும் வழியை பார்ப்போம்.முதலில் நம் குறையை களைவோம்,அடுத்த தலைமுறைக்கு கொஞ்சமாவது தண்ணீரை சேமிப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X