பொது செய்தி

தமிழ்நாடு

தென்னைநார்க்கழிவு தொழுஉரம் மூலம் வறட்சி காலத்தில் அதிக மகசூல்:வேளாண் அதிகாரி தகவல்

Added : ஆக 27, 2010
Advertisement

திருநெல்வேலி:தென்னை நார்க்கழிவிலிருந்து தயாரிக்கப்படும் தொழு உரத்தை பயன்படுத்துவதன் மூலம் பயிர்கள் வறட்சியை தாக்குபிடித்து அதிக மகசூலை தருவதாக நெல்லை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.இது குறித்து நெல்லை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்பிரமணியன் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:சராசரியாக 10 ஆயிரம் தேங்காய் மட்டைகளில் இருந்து ஒரு டன் நார்க்கழிவு கிடைக்கும். இதனை மக்க வைக்க 5கிலோ யூரியா மற்றும் 5 புட்டிகள் புளுரோட்டஸ் காளான் வித்துக்கள் அவசியமாகும்.


நிழலில் 100கிலோ தென்னை நார்க்கழிவை சீராக பரப்பி அதன் மீது ஒரு புட்டி காளான் வித்தை தூவ வேண்டும். இதன் மேல் பகுதியில் மேலும் 100 கிலோ தென்னை நார்க்கழிவை சீராக பரப்பி அதன் மீது ஒரு புட்டி காளான் வித்தை தூவ வேண்டும். இதேபோல அடுத்தடுத்து 10 அடுக்குகள் அமைக்க வேண்டும். இந்த தென்னை நார்க்கழிவுகளை கையில் எடுக்கும் போது ஈரம் இருக்கும் வகையில் தண்ணீர் தெளித்து 40நாட்கள் வரை மக்க வைக்க வேண்டும். மக்கிய தென்னை நார்க்கழிவு கருப்பு நிறமாவதோடு, பாதியாக குறைந்து விடும். இதனை சேமித்துவைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.


நார்க்கழிவில் உள்ள லிக்னின் மண்ணில் சேர்ந்து மண்ணின் வளத்திற்கு அடிப்படை பொருளான மண் மக்கு அமைய வழி ஏற்படுகிறது. மேலும் மண்ணில் காற்றோட்டம், நீர் ஊடுறுவும் திறன், நீர் பிடிப்பு திறன் மேம்பட்டு பயிரின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.மானாவாரி நிலங்களில் பருவமழைகாலங்களில் அதிகளவில் மழை நீரை உறிஞ்சி மண்ணின் ஈரத்தன்மையை அதிகப்படுத்துவதால் பயிருக்கு நீண்ட நாட்கள் நீர் கிடைக்கிறது.தென்னை நார்க்கழிவு தனது எடையைப்போல 2 மடங்கு எடை நீரைப் பிடித்து வைப்பதால் பயிர்கள் வறட்சியை தாக்குப்பிடிப்பதோடு, அதிக மகசூலும் கிடைக்கிறது.இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X