அரசியல் செய்தி

தமிழ்நாடு

'துரோகிகள் கையில் இரட்டை இலை'

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

ஆம்பூர் : ''இரட்டை இலை, துரோகிகள் கையில் உள்ளது,'' என, அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன் பேசினார்.ஆம்பூர் சட்டசபை இடைத்தேர்தல், அ.ம.மு.க., வேட்பாளர் பாலசுப்பிரமணியனை ஆதரித்து, நேற்று அவர் பேசியதாவது:பிரதமர் வேட்பாளர் என, ராகுலும் கூறவில்லை; காங்., கட்சியும் அறிவிக்கவில்லை. ஆனால், 'பிரதமர் வேட்பாளர்' என, ஸ்டாலின் கூறுகிறார். இதன் மூலம், சிறுபான்மை, முஸ்லிம் சமுதாய மக்களை ஸ்டாலின் குழப்புகிறார்.தமிழகத்தில், காங்., கட்சியுடன் கூட்டணியில் உள்ள, கம்யூ., கட்சிகள், கேரளா வயநாட்டில், 'ராகுலை தோற்கடித்தே தீருவோம்' என, பிரசாரம் செய்கின்றன. கர்நாடகா, காங்., தேர்தல் அறிக்கையில், 'காவிரி மேலாண்மை வாரியம் ஒழிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழகம் வந்த ராகுல், ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தேசிய கட்சிகளுக்கு, தமிழ கத்தில் பெரும்பான்மை கிடைக்காது. இரட்டை இலை, துரோகிகள் கையில் உள்ளது. ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டவர், வேலுாரில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார்.அ.தி.மு.க., டெண்டர்களின் கட்சியாக உள்ளது. 90 சதவீதம் தொண்டர்கள், அ.ம.மு.க.,வில் உள்ளனர். ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், யாருக்கு ஓட்டு போடுவது என, மக்களுக்கு தெரியும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
15-ஏப்-201915:03:20 IST Report Abuse
Sridhar Rengarajan அதிகபட்சம் டிடிவி தினகரனின் அரசியல் ஆயுட்காலம் மேமாதம் 23 ந்தேதி வரை. அதோடு கூடாரம் காலியாகிவிடும். இருக்குற ஒரு சிலரும் வந்து அதிமுகவில் ஐக்கியமாகிவிடுவார்கள். அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை இரட்டை இலை எங்கிருக்கிறதோ அதுதான் அவர்கள் கட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை இவைதான் அவர்களின் அடையாளம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X