பொது செய்தி

இந்தியா

'என்னை சாகச் சொல்கின்றனர்' சபரிமலை புகழ் பிந்து புகார்

Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (17)
Advertisement
 'என்னை சாகச் சொல்கின்றனர்'  சபரிமலை புகழ் பிந்து புகார்


பட்டம்பி, ''நான் சாக வேண்டும் என, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., ஆட்கள் கடுமையாக திட்டினர்,'' என, சபரிமலைக்கு செல்ல முயன்றதால் புகழ் பெற்ற, கேரளாவைச் சேர்ந்த, பிந்து தங்கம் கல்யாணி, குற்றஞ்சாட்டியுள்ளார்.அனைத்து வயது பெண்களும், சபரிமலைக்கு செல்லலாம் என, உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு, தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, கேரளாவைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியையான பிந்து, 2018, அக்டோபரில் சபரிமலை செல்ல முயன்றார். ஆனால், பத்தனம் திட்டா மாவட்டம், எருமேலி யில், அவர் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் அவர், ஊடகங்களில் பிரபலமானார்.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், கேரளாவில் நடைபெற்ற, லோக்சபா தேர்தலையொட்டி, பட்டம்பியில் உள்ள சமஸ்கிருத கல்லுாரி யில், கூடுதல் தேர்தல் அதிகாரியாக, பிந்து பணியாற்றினார்.அப்போது நடந்த சம்பவம் குறித்து, பிந்து, முகநுாலில் கூறியிருப்பதாவது:நான் பட்டம்பியில் தேர்தல் பணியில் இருந்த போது, வாக்குப் பதிவு செய்ய வந்த சிலர், என்னை சுட்டிக் காட்டி, முணுமுணுத்தபடி இருந்தனர்.நான் பணி முடிந்து, வெளியில் வந்த உடன், அவர்கள் என்னை வழிமறித்து, தரக்குறைவான வார்த்தைகளால், வசைமாரி பொழிந்தனர். ஒருவர், 'நீ இன்னும் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்; செத்து தொலையலாமே...' என திட்டினார்.

அவர்கள், சபரிமலைக்கு, பெண்கள் போவதை விரும்பாத, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆட்கள் என்பதை, தெரிந்து கொண்டேன்.உடனடியாக திரும்பி, நடந்த சம்பவம் குறித்து, உதவி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தேன்.ஒரு தேர்தல் அதிகாரி மீதான தாக்குதல், இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகும். உடனடியாக, இந்த சம்பவத்தில் தொடர்புடையோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சினேக் பாபு - நாகமலை,இந்தியா
30-ஏப்-201907:26:58 IST Report Abuse
சினேக் பாபு சாகுறதுக்கும் கோர்ட் உத்தரவு வேணுமா அம்மணிக்கு???
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
30-ஏப்-201905:17:05 IST Report Abuse
Pannadai Pandian 'நீ இன்னும் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் செத்து தொலையலாமே...' - நான் RSS காரன் இல்ல, பொது ஜனம்…...
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
30-ஏப்-201904:08:05 IST Report Abuse
 nicolethomson ஏம்மா உங்க கேரளத்தில் இருந்து வரும் கோட்டா ஸ்டைலை சொல்லித்தரணுமா? எல்லாத்துக்கும் கொலை தான் தீர்வு என்று இருக்கும் ஒரு உலகம் தழுவிய மதமும் , அதனை வெளிப்படுத்தும் கருவியாக ஒரு கட்சியும் இருக்கே அந்த ஸ்டைலில் உன்னை செய்யாமல் உன்னை பார்த்து திட்டிவிட்டு மட்டும் சென்றுள்ளனர் சே என்ன ஒரு மனிதர்களோ அவர்கள்? அது சரி அவர்களின் முகத்தினை மாத்திரம் வைத்து நீ எப்படி RSS பாஜக என்று சொல்ல முடிந்தது? கொடுத்த வேலையை செய்யாமல் என்னத்துக்கு அவங்க பின்னாடி போயி வம்பு வளர்த்துக்கொண்டு உள்ளாய்? நீ உள்ளேயே இருந்திருந்தா அவங்களால பேசியிருக்கவே முடியாதே ? சிகரெட் அடிக்க வெளியே போனாயா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X