‘கோல்டன் ஸ்லாம்’ நோக்கி ஜோகோவிச்: ஒலிம்பிக் போட்டிக்கு ‘ரெடி’

பெல்கிரேடு: செர்பியாவின் ஜோகோவிச், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் 34. அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் (20) வென்றுள்ள வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெடரர், நடாலுடன் பகிர்ந்து கொண்டுள்ள இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் 'கோல்டன் ஸ்லாம்' (ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் ஒலிம்பிக் தங்கம்) வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.

'சூப்பர் பார்மில்' உள்ள உலகின் 'நம்பர்-1' ஜோகோவிச், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் கோப்பை வென்றார். அடுத்து நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், யு.எஸ்., ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றால் 'கோல்டன் ஸ்லாம்' கைபற்றிய முதல் வீரர் என்ற சாதனை படைக்கலாம். இதுவரை, ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப் (1988) மட்டுமே 'கோல்டன் ஸ்லாம்' வென்றுள்ளார்.

இதுகுறித்து ஜோகோவிச் 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில், ''டோக்கியோ செல்வதற்கு விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்துவிட்டேன். ஒலிம்பிக் போட்டிக்காக செர்பிய அணியில் இணைவதில் பெருமை அடைகிறேன்,'' என, தெரிவித்திருந்தார்.ஆஸி., வீரர் விலகல்

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் அலெக்ஸ் டி மினாருக்கு 'கொரோனா' தொற்று உறுதியானதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகினார். சமீபத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் நிக் கியரியாஸ் சுகாதார பாதுகாப்பு, கடுமையான கட்டுப்பாடு காரணமாக விலகினார்.Advertisement