வெள்ளி நாயகன் ரத்தோர்: ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 6

கிரீஸ் தலைநகர் ஏதென்சில் (2004, ஆக., 13-29) 28வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. 201 நாடுகளை சேர்ந்த 10,625 விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்றனர். 2001 செப்., 11ல் அமெரிக்கா மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின் நடந்த ஒலிம்பிக் என்பதால், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 70 ஆயிரம் போலீசார், ஏதென்ஸ் நகர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
துப்பாக்கி சுடுதல் 'டபுள் டிராப்' பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவின் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். இதன்மூலம் 104 ஆண்டுகளுக்கு பின், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். ராணுவத்தில் 'மேஜர்' அந்தஸ்தில் பணியாற்றியவர்.
பெல்ப்ஸ் சாதனை: நீச்சலில் அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் பெல்ப்ஸ் அசத்தினார். 100 மீ., பட்டர்பிளை, 200 மீ., தனிநபர் மெட்லே, 400 மீ., தனிநபர் மெட்லே, 4*200 மீ., பிரிஸ்டைல் ரிலே, 4*100 மீ., மெட்லே ரிலே பிரிவுகளில் தங்கம் வென்றார். 200 மீ., பிரீஸ்டைல், 4*100 மீ., பிரீஸ்டைல் ரிலே பிரிவுகளில் தலா ஒரு வெண்கலம் வென்றார். 6 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்ற இவர் ஒரே ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற ரஷ்யாவின் அலெக்சாண்டர் டிட்யாட்டின் (1980, ஜிம்னாஸ்டிக்சில் 8 பதக்கம்) சாதனையை சமன் செய்தார்.
மேலும் வரலாறு
பதக்கப் பட்டியல்
Country | Gold | Silver | Bronze | Total |
---|---|---|---|---|
United States (USA) |
- | - | - | - |
Great Britain (GBR) |
- | - | - | - |
China (CHN) |
- | - | - | - |
Russian Federation |
- | - | - | - |
Germany |
- | - | - | - |
