தங்கம் ‘சுட்ட’ அபினவ் பிந்த்ரா * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 5

சீனாவின் பீஜிங் நகரில் (2008, ஆக., 8-24) 29வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. முக்கிய போட்டிகள் நடந்த பீஜிங் தேசிய மைதானம் பறவை கூடு போல அழகாக வடிவமைக்கப்பட்டது. 'டன்' கணக்கில் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த 'பேர்ட்ஸ் நெஸ்ட்' மைதானம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சீன ஜிம்னாஸ்டிக் வீரரான லீ நிங், அரங்கத்தின் உயரமான பகுதியில் இருந்து கயிறு மூலம் பறந்து வந்து ஜோதியை ஏற்றினார். சீனா 51 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்தையும், அமெரிக்கா 36 தங்கத்துடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
அபினவ் அசத்தல்
ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் சுஷில் குமார் ('பிரீஸ்டைல்' 66 கி.கி.,), குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங் ('மிடில்வெயிட்' 75 கி.கி.,) வெண்கலம் வென்றனர். பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெண்கலம் வென்று 50வது இடம் பிடித்தது.
மேலும் வரலாறு
பதக்கப் பட்டியல்
Country | Gold | Silver | Bronze | Total |
---|---|---|---|---|
United States (USA) |
- | - | - | - |
Great Britain (GBR) |
- | - | - | - |
China (CHN) |
- | - | - | - |
Russian Federation |
- | - | - | - |
Germany |
- | - | - | - |
