‘பீனிக்ஸ்’ பறவைகள்...

சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவை போல டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் நட்சத்திரங்கள். சோனம் மாலிக்

ஹரியானாவின் சோனேபட்டை சேர்ந்தவர் மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக் 19. தனது 12 வயதில் மல்யுத்தத்தில் களமிறங்கினார். 2017ல் வலது தோள்பட்டை நரம்பு தொடர்பான பிரச்னையால் வலது கை செயலிழந்தது. தந்தையின் குறைந்த வருமானம் காரணமாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்து, 6 மாதத்தில் மீண்டார். 2018 ஆசிய கேடட் பிரிவில் வெண்கலம் வென்றார். அடுத்து 'கேடட்' பிரிவில் இரு முறை உலக சாம்பியன் ஆனார்.

2020ல் சீனியர் அரங்கில் கால்பதித்த சோனம் மாலிக், தேசிய பயிற்சி முகாமில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்சி மாலிக்கை பல முறை சாய்த்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற இவர், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.ரேவதி

மதுரை, சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் ரேவதி 23. சிறு வயதில் பெற்றோரை இழந்தார். செங்கல் சூளை, பண்ணையில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்த இவரது பாட்டி ஆரம்மாள், ரேவதியை பள்ளிக்கு அனுப்பினார். வெற்றுக்கால்களில் ஓடத்துவங்கிய இவர், இன்று டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்று, மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.பிரவின் ஜாதவ்

மகாராஷ்டிராவின் சடாரா கிராமத்தை சேர்ந்தவர் பிரவின் ஜாதவ். துவக்கத்தில் 800 மீ., ஓட்டத்தில் பங்கேற்றார். வறுமை காரணமாக போதிய உணவு, ஊட்டச்சத்து பற்றாக்குறை நோயால் பாதிக்கப்பட்ட இவர், வில்வித்தைக்கு மாறினார். கடந்த 2019 உலக சாம்பியன்ஷிப் வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார்.பவானி தேவி

சென்னையை சேர்ந்தவர் பவானி தேவி. பள்ளி நாட்களில் வேறு வழியில்லாமல் வாள் சண்டையை தேர்வு செய்தார். செலவு அதிகம் என்பதால் துவக்கத்தில் மூங்கிலால் ஆன குச்சிகளை கொண்டு பயிற்சி செய்தார். ஒரு கட்டத்தில் தனது நகைகளை அடகு வைத்து மகளின் பயிற்சிக்கு உதவினார் பவானி தேவியின் அம்மா. தற்போது ஒலிம்பிக் வாள்சண்டையில் பங்கேற்கும் முதல் இந்தியர் என வரலாறு படைத்துள்ளார்.

Advertisement