பெல்ப்ஸ் சாதனை

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா மொத்தம் 28 பதக்கங்கள் வென்றுள்ளது. ஆனால் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ஸ் (2004-2016) தனி ஆளாக 28 பதக்கம் (23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்) வென்றுள்ளார். இவரே ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற சாதனையாளர். அடுத்த இடத்தில் சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லாரிசா லத்தினினா (9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம், 15 பதக்கம்) உள்ளார். அமெரிக்கா ஆதிக்கம்

ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை பங்கேற்ற 27 ஒலிம்பிக்கில், 1027 தங்கம், 800 வெள்ளி, 704 வெண்கலம் என, 2531 பதக்கங்களை அள்ளியது.

நான்கு முறை

அதிக முறை ஒலிம்பிக் போட்டியை நடத்திய நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. இதுவரை அமெரிக்காவில் நான்கு முறை (1904, 1932, 1984, 1996) ஒலிம்பிக் நடத்தப்பட்டது.

* இங்கிலாந்தில் மூன்று முறை (1908, 1948, 2012) நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியா (1956, 2000), பிரான்ஸ் (1900, 1924), ஜெர்மனி (1936, 1972), கிரீஸ் (1896, 2004) நாடுகள் தலா 2 முறை நடத்தின.

* சுவீடன் (1912), பெல்ஜியம் (1920), நெதர்லாந்து (1928), பின்லாந்து (1952), இத்தாலி (1960), ஜப்பான் (1964), மெக்சிகோ (1968), கனடா (1976), சோவியத் யூனியன் ரஷ்யா (1980), தென் கொரியா (1988), ஸ்பெயின் (1992), சீனா (2008), பிரேசில் (2016) நாடுகள் தலா ஒரு முறை நடத்தின.ஐந்து நாடுகள்

இங்கிலாந்து, கிரீஸ், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து என, ஐந்து நாடுகள் மட்டும் இதுவரை நடந்த அனைத்து ஒலிம்பிக் போட்டியிலும் (28) பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் குறைந்தபட்சம் ஒரு தங்கப் பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.

ஹரியானா அதிகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 127 பேர் பங்கேற்கின்றனர். இதில் ஹரியானா மாநிலத்தில் இருந்து அதிகபட்சமாக 31 பேர் (24.4%) பங்கேற்கின்றனர். இதனையடுத்து பஞ்சாப் 19 (15%), தமிழகம் 11 (8.7%), கேரளா 8 (6.3%), உ.பி., 8 (6.3%) பேர் களமிறங்குகின்றனர்.Advertisement