ஒலிம்பிக் மைதானம்

ஜப்பான் தேசிய மைதானம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தேசிய மைதானத்தில் நடக்கிறது. இங்கு, 1964ல் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது. தவிர, 2019ல் ரக்பி உலக கோப்பை இங்கு நடந்தது. கடந்த 2016ல் கட்டப்பணிகள் துவங்கின. மொத்தம் 71 ஏக்கரில் கட்டப்பட்ட இம்மைதானம் மூன்று ஆண்டுக்குப் பின் 2019, டிச. 21ல் திறக்கப்பட்டது.
* இங்கு கால்பந்து, ரக்பி, தடகள போட்டிகள் நடக்கவுள்ளன.
80,000 இருக்கைகள்
துவக்கவிழா நடக்கும் மைதானத்தில் 68,000 ரசிகர்கள் வரை அமர்ந்து ரசிக்கலாம். தற்காலிக இருக்கைகளை சேர்த்து 80,000 பேர் வரை நேரில் பார்க்கலாம். ஆனால் கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. போட்டிகளை 'டிவிக்களில்' மட்டுமே காணலாம்.
ஒலிம்பிக் கிராமம்
டோக்கியோ வளைகுடாவில் 44 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது ஒலிம்பிக் கிராமம்.
* 21 அபார்ட்மென்ட் கட்டப்பட்டுள்ளன.
*'டைனிங் ஹாலில்' ஒரே நேரத்தில் 3000 பேர் அமர்ந்து சாப்பிடலாம். ஜிம், பார்க் வசதிகளும் உள்ளன.
* ஒலிம்பிக் கிராமத்தில் தங்கும் நட்சத்திரங்கள் போட்டி முடிந்த 48 மணி நேரத்தில் கிளம்பி விட வேண்டும்.
* மொத்தம் 18,000 பேர் தங்கலாம்.
* தினமும் 20,000 கொரோனா சோதனை நடக்கவுள்ளன.
* போட்டி முடிந்த பின் அனைத்து அறைகளும் விற்கப்படும். கடந்த ஆண்டு ஒவ்வொன்றும் ரூ. 11.2 லட்சம் என 900 அறைகள் விற்று விட்டன.
மேலும் மைதானங்கள்
பதக்கப் பட்டியல்
Country | Gold | Silver | Bronze | Total |
---|---|---|---|---|
United States (USA) |
- | - | - | - |
Great Britain (GBR) |
- | - | - | - |
China (CHN) |
- | - | - | - |
Russian Federation |
- | - | - | - |
Germany |
- | - | - | - |
