வீராங்கனை உயிருக்கு ஆபத்து

டோக்கியோ: பெலாரஸ் தடகள வீராங்கனை கிறிஸ்ட்சினா 24. இவர், 100 மீ., ஓட்டத்தில் 34 வது இடம் பெற்றார். 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்க இருந்த இவரை, 4*400 மீ., தொடர் ஓட்ட அணியில் பயிற்சியாளர் மோய்செவிச் சேர்த்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிறிஸ்ட்சினாவை, பெலாரஸ் ஒலிம்பிக் கமிட்டி, அணியில் இருந்து நீக்கியது.

தவிர, கிறிஸ்ட்சினா உடனடியாக பெலாரஸ் செல்ல வேண்டும் என மோய்செவிச் வற்புறுத்தினார். இதனால் ஜப்பான் போலீஸ் உதவியை நாடினார் கிறிஸ்ட்சினா. தவிர 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட்ட போதும், பலன் கிடைக்கவில்லை.

இதன் பின் டோக்கியோவில் உள்ள போலந்து துாதரகம் சென்ற அவர்,'பெலாரஸ் சென்றால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும்,' என முறையிட, மனிதாபிமான அடிப்படையில் போலந்து செல்ல விசா கிடைத்தது.Advertisement