தங்கம் வென்றும் கைகூடாத திருமணம்

உக்ரைனில் பிறந்தவர் இஸ்ரேலிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் ஆர்டம் டோல்கோப்யட் 24. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆர்ட்டிஸ்ட் பிரிவில் தங்கம் வென்றார். ஒலிம்பிக் அரங்கில் இஸ்ரேல் வென்ற இரண்டாவது தங்கம் இது. இதற்காக ஆர்டம், ஹீரோவாக கொண்டாடப்பட்டார். ஆனால், நாடு திரும்பி தனது நீண்ட நாள் காதலியை மண முடிக்க முடியாத சோகத்தில் உள்ளார். இங்குள்ள விதிப்படி, ஆர்டம் தந்தை இஸ்ரேலை சேர்ந்தவராக இருந்தாலும், அவரது தாயார் அப்படி இல்லையாம். இதனால் ஆர்டம், இஸ்ரேல் பெண்களை திருமணம் செய்ய முடியாதாம்.

ஆர்டம் அம்மா ஏஞ்சலா கூறுகையில்,''ஆர்டம் தனது தோழியுடன் மூன்று ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளார். ஆனால் திருமணம் செய்ய முடியாது. இதற்காக அவர்கள் வெளிநாடு தான் செல்ல வேண்டும். எனினும் விளையாட்டு வீரர் என்பதால் அதற்கும் அனுமதிக்க மறுக்கின்றனர்,'' புலம்பினார்.

பதக்கம் பெற்ற போது ஆர்டம் கூறுகையில்,''இஸ்ரேலுக்காக பதக்கம் வென்று, நாட்டின் தேசிய கீதத்தை இசைக்கச் செய்தேன். ஆனால் நான் அங்கு சென்று திருமணம் செய்ய முடியாது. இதை தாங்க முடியவில்லை. இந்நிலை தொடரக் கூடாது, மாற்றத்திற்காக போராடுவோம்,'' என்றார்.Advertisement