துர்க்கை அம்மன் கோயிலில் சிந்து

விஜயவாடா: ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சிந்து, துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். டோக்கியோ ஒலிம்பிக் பாட்மின்டனில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் சிந்து. கடந்த முறை வெள்ளி (ரியோ, 2016) வென்ற இவர், ஒலிம்பிக் தனிநபர் போட்டியில் இரு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் நேற்று விஜயவாடாவில் உள்ள காட்டு துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்றார். ஒலிம்பிக் செல்லும் முன் இங்கு வந்த சிந்து, பதக்கம் வெல்ல வேண்டிக் கொண்டார். சிந்து குடும்பத்தினர் சார்பில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோயில் நிர்வாகத்தினர் சார்பில் சிந்துவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement