வாழ்த்து மழையில் நீரஜ் சோப்ரா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இது, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். இவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. நீரஜ் சோப்ராவின் வெற்றி அபூர்வமானது. உங்களது தங்கம் தடையை உடைத்து வரலாறு படைத்திருக்கிறது. ஒலிம்பிக் தடகளத்தில் முதல் தங்கத்தை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளீர்கள். உங்கள் சாதனை இளைஞர்களை ஊக்குவிக்கும். இந்தியா மகிழ்கிறது. வாழ்த்துக்கள். - ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி.டோக்கியோவில் வரலாறு எழுதப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ராவின் இன்றைய சாதனை எப்போதும் நினைவில் இருக்கும். இளம் நீரஜ் தனித்தன்மையுடன் சிறப்பாக விளையாடினார். மறக்கமுடியாத இணையற்ற உறுதியுடன் திறமை வெளிப்படுத்தினீர்கள். தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்.

- மோடி, பிரதமர்

நம்பமுடியாத சாதனை. ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ், இந்தியாவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளார். இவரது சாதனை தடகளத்தில் இந்தியாவின் நீண்டநாள் தங்க கனவை நிறைவேற்றியுள்ளது.

- வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி.ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கத்தை வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள். உங்களது சாதனை இன்னும் மறக்கமுடியாத நிகழ்வாகி விட்டது. வருங்காலத்திலும் சாதிக்க வாழ்த்துக்கள். இந்த சிறப்புமிக்க வெற்றி வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

- அபினவ் பிந்த்ரா, துப்பாக்கி சுடுதல் வீரர்.நீரஜ் சோப்ராவின் வெற்றி ராணுவத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. ஒலிம்பிக்கில் உண்மையான ராணுவ வீரனை போல ஒலிம்பிக்கில் பங்கேற்றார். இந்தியா ராணுவம் உட்பட மொத்த இந்தியாவுக்கும் வரலாற்று மற்றும் மகிழ்ச்சியான தருணம். வாழ்த்துகள்.

- ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சர்.இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா. இந்தியாவின் ஒலிம்பிக் வரலாறு எழுதப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்களது பெயர் வரலாற்று புத்தகத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

- அனுராக் தாக்கூர், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்.இந்திய விளையாட்டு வரலாற்றில் மறக்க முடியாத நாள். தடகளத்தில் தங்கம் வென்று 120 ஆண்டுகால கனவை நனவாக்கிய நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். நீங்கள் உண்மையான தேசிய ஹீரோ.

- ஸ்டாலின், தமிழக முதல்வர்.37 ஆண்டுகளுக்குப்பின் என் நிறைவேறாத கனவு நனவாகியுள்ளது. நன்றி மகனே நீரஜ் சோப்ரா.

- பி.டி.உஷா, தடகள வீராங்கனை.ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வெல்லும் 125 ஆண்டுகால காத்திருப்பு, இந்திய தடகள கூட்டமைப்பின் 75வது ஆண்டு விழாவில் முடிவுக்கு வந்தது.

- இந்திய தடகள கூட்டமைப்பு.கோடிக்கணக்கான கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. இது போன்ற நாட்கள் எளிதில் வருவதில்லை. தடகளத்தில் முதல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள்.

- சேவக், முன்னாள் கிரிக்கெட் வீரர்பரிசு மழைஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்தன. பதக்கம் வென்று சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தங்கம் வென்று சாதித்த நீரஜ் சோப்ராவுக்கு ரூ. ஒரு கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி வென்ற மீராபாய் சானு (பளுதுாக்குதல்), ரவிக்குமார் தாஹியா (மல்யுத்தம்) ஆகியோருக்கு தலா ரூ. 50 லட்சம், வெண்கலம் கைப்பற்றிய சிந்து (பாட்மின்டன்), லவ்லினா (குத்துச்சண்டை), பஜ்ரங் புனியா (மல்யுத்தம்) ஆகியோருக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. ஹாக்கியில் வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் அணிக்கு ரூ. 1.25 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ரூ. 6 கோடி

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் கைப்பற்றிய நீரஜ் சோப்ராவுக்கு, ஹரியானா மாநில அரசு சார்பில் ரூ. 6 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, 'கிளாஸ்-1' பிரிவு அரசு வேலை, குறைந்த விலையில் 'பிளாட்' வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநில அரசு சார்பில் நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 2 கோடி சிறப்பு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.Advertisement