பாரிஸ் ஒலிம்பிக் எப்போது

டோக்கியோ: அடுத்த ஒலிம்பிக் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வரும் 2024ல் நடக்கவுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது. அடுத்து, வரும் 2024ல் 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கவுள்ளது. பாரிசில், 3வது முறையாக ஒலிம்பிக் நடக்கவுள்ளது. இதற்கு முன், 1900, 1924ல் நடத்தப்பட்டது. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியை மூன்றாவது முறையாக நடத்தும் 2வது நகரம் என்ற பெருமை பெற உள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தின் லண்டனில் 3 முறை (1908, 1948, 2012) நடத்தப்பட்டது. தவிர இது, பிரான்சில் நடக்கவுள்ள 6வது ஒலிம்பிக். இதுவரை 2 ஒலிம்பிக், 3 குளிர்கால ஒலிம்பிக் (1924, 1968, 1992) நடந்துள்ளன.

இதற்கான போட்டிகள், 2024ல் ஜூலை 26 முதல் ஆக. 11 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement