பசுமை நிறைந்த நினைவுகளே... பழகிக் களித்த வீரர்களே * பிரதமர் மோடி உடன் இனிய அனுபவம்

புதுடில்லி: ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய தருணம் இனிமையானது. ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா7 பதக்கங்கள்வென்றது. இந்தியக் குழுவினர் அனைவருக்கும் பிரதமர் மோடி, தன்வீட்டில் காலைவிருந்துகொடுத்துகவுரவித்தார்.

விருப்ப உணவு:

வழக்கமாக பிரதமர் வீட்டில் நடக்கும் விருந்தில் முதலில் உரை நிகழ்த்துவர். பின் 'குரூப்' போட்டோ எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை முடித்துவிடுவர். இந்த நடைமுறையை மோடி துணிச்சலாக மாற்றினார். ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளிடமும் தனித்தனியாக பேசினார். இரண்டரை மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் அனைவரிடமும் சகஜமாக பழகினார். பாட்மின்டனில் வெண்கலம் வென்ற சிந்துவுக்கு 'ஐஸ்கிரீம்', ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ராவுக்கு 'சுர்மா' என அவரவருக்கு பிடித்த உணவு வகைகள் வழங்கப்பட்டன.

நீச்சல் வீராங்கனை மானா படேலின் 'மைக்' வேலை செய்யாத போது, ''நீங்கள் ஒரு அரசியல்வாதியின் பக்கத்தில் நிற்கிறீர்கள். அதனால் தான் உங்கள் 'மைக்' அமைதியாக உள்ளது,'' என மைக்கிற்கும் அரசியல்வாதிக்கும் உள்ள 'நெருங்கிய' தொடர்பை கூறி நகைச்சுவையால் இடத்தை கலகலக்க வைத்தார் மோடி. வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியின் 'மைக்' பழுதாக, அவர் பேசி முடிக்கும் வரை இன்னொரு மைக்கை பெருந்தன்மையாக பிடித்தார்.

வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவிடம் மோடி பேசுகையில்,''இந்தியாவில் விளையாட்டு கட்டமைப்பு, பயிற்சி மையங்கள் உலகத் தரத்தில் இருக்க வேண்டும்,''என ஆலோசனை கூறினார்.

ஹாக்கி உணர்வு:

அரையிறுதியில் தோற்ற போது மோடி அழைத்து ஆறுதல் கூறியதை ஆண்கள் ஹாக்கி அணியினர் நினைவுகூர்ந்தனர். இதுவே வெண்கலம் வெல்ல உத்வேகம் அளித்ததாக குறிப்பிட்டனர். இவர்களிடம் மோடி பேசுகையில்,''இந்தியாவில் ஹாக்கி என்பது உணர்வுபூர்வமானது. பதக்கம் வென்றது 'ஸ்பெஷல்' அனுபவம். சிறப்பான ஆட்டத்தின் மூலம் மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தயான்சந்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள்,''என்றார்.

பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பாலிடம் பேசுகையில்,''பதக்கம் வெல்ல தவறியதை நினைத்து கவலைப்படாதீர். கனவுகள் தகர்வதில்லை. கடினமான காலத்திலும் சிறப்பாக விளையாடினீர்கள்,'' என்றார்.

பின் பிரதமர் மோடி பேசுகையில்,''டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் எழுச்சி காரணமாக, பெற்றோர் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இனி விளையாட்டை தேர்வு செய்யும்படி தங்களது குழந்தைகளுக்கு ஊக்கம் அளிப்பர்.

நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், நீங்கள் ஒவ்வொருவரும் 2023, ஆக. 15க்குள் குறைந்தது 75 பள்ளிகளுக்கு சென்று விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடி, தேசப்பற்றை வளர்க்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு பற்றி பேசி, அதை போக்குவதற்கான வழிகளை சொல்ல வேண்டும். இந்தியாவில் விளையாட்டு வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை பலப்படுத்துவது தொடர்பாக எனக்கு கடிதம் எழுதலாம்,''என்றார்.

இப்படி ஒரு எளிமையான பிரதமர் கிடைத்ததற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வீரர், வீராங்கனைகள் விடைபெற்றனர்.பஜ்ரங் மகிழ்ச்சி

வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,'பிரதமர் மோடியை சந்தித்தது எனது அதிர்ஷ்டம். எங்களுக்கு ஆதரவாக உள்ளார். இது தொடரும்பட்சத்தில் இந்தியாவுக்காக அதிக பதக்கங்களை வெல்வோம்,'என குறிப்பிட்டார்.

Advertisement