போலந்துக்காக பெலாரஸ் வீராங்கனை

வார்சா: பெலாரஸ் வீராங்கனை கிறிஸ்ட்சினா, போலந்துக்காக ஓடப்போவதாக தெரிவித்துள்ளார்.
பெலாரஸ் தடகள வீராங்கனை கிறிஸ்ட்சினா சிமானுஸ்காயா 24. இவர், சமீபத்தில் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் 34வது இடம் பிடித்தார். பின், 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்க இருந்த இவர், 4*400 மீ., தொடர் ஓட்ட அணியில் சேர்க்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இவரை, பெலாரஸ் ஒலிம்பிக் கமிட்டி, அணியில் இருந்து நீக்கியது. தவிர இவர், உடனடியாக நாடு திரும்ப வலியுறுத்தப்பட்டார்.
இதனால் ஜப்பான் போலீஸ் உதவியை நாடினார் கிறிஸ்ட்சினா. தவிர 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட்ட போதும், பலன் கிடைக்கவில்லை. இதன் பின் டோக்கியோவில் உள்ள போலந்து துாதரகம் சென்ற அவர், 'பெலாரஸ் சென்றால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும்,' என முறையிட, மனிதாபிமான அடிப்படையில் போலந்து செல்ல விசா கிடைத்தது.
சமீபத்தில் போலந்து சென்ற கிறிஸ்ட்சினா, போலந்துக்காக போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். இதற்காக, விளையாட்டு குடியுரிமை பெற விண்ணப்பம் செய்ய உள்ளார். இதற்கு, மூன்று ஆண்டுகள் தேவைப்படும். இவருக்கு குடியுரிமை கிடைக்கும் பட்சத்தில் பாரிஸ் ஒலிம்பிக்கில், போலந்துக்காக பங்கேற்கலாம்.
இதுகுறித்து கிறிஸ்ட்சினா கூறுகையில், ''நான் போலந்தில் தங்கி, போலந்து தேசிய அணிக்காக போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். இதற்காக எனது விளையாட்டு குடியுரிமையை மாற்ற உள்ளேன். அப்போது தான் நான் போலந்துக்காக போட்டிகளில் பங்கேற்க முடியும்,'' என்றார்.
மேலும் சிறப்பு பேட்டி
-
கூடுதல் பயிற்சி, களம் தேவை * ‘ஒலிம்பிக்’ ஆரோக்கிய ராஜிவ் வலியுறுத்தல்
-
பதக்கம்... பிரதமர் மோடி ஊக்கம்! * இந்திய ஹாக்கி கேப்டன் பெருமிதம்
-
‘உலகை’ வெல்வாரா நீரஜ் சோப்ரா * அடுத்த சவாலுக்கு ‘ரெடி’
-
லவ்லினாவின் அடுத்த இலக்கு: பாரிஸ் ஒலிம்பிக் மீது கவனம்
-
நம்ப முடியாத உணர்வு: நீரஜ் சோப்ரா பெருமிதம்
-
ரவிக்குமார் நன்றி
பதக்கப் பட்டியல்
Country | Gold | Silver | Bronze | Total |
---|---|---|---|---|
United States (USA) |
- | - | - | - |
Great Britain (GBR) |
- | - | - | - |
China (CHN) |
- | - | - | - |
Russian Federation |
- | - | - | - |
Germany |
- | - | - | - |
