2000 சிட்னி ஒலிம்பிக்

சிலிர்க்க வைத்த துவக்க விழா: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 27 வது ஒலிம்பிக் போட்டி மிக பிரமாண்டமாக நடந்தது. சுமார் 10,651 வீரர், வீராங்கனைகள் பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்றனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உறுப்பினராக உள்ள 200 நாடுகளில், 199 நாடுகள் பங்கேற்று சாதனை படைக்கப்பட்டன. தடை காரணமாக ஆப்கானிஸ்தான் மட்டும் பங்கேற்கவில்லை. கண்ணைக் கவர்ந்த துவக்க விழா ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. நெருப்பு வளையத்தின் நடுவே ஆஸ்திரேலிய வீராங்கனை கேத்தி பிரிமேன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். வடகொரியா,தென்கொரிய வீரர்கள் பகைமை மறந்து ஒரே கொடியுடன் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
மல்லேஸ்வரி சாதனை: ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பளுதூக்குதல் பிரிவில் பெண்கள் பங்கேற்றனர். இந்த வாய்ப்பை சூப்பராக பயன்படுத்தினார் ஆந்திராவை சேர்ந்த "இரும்பு பெண்' கர்ணம் மல்லேஸ்வரி. ஏற்கனவே, உலக சாம்பியன், ஆசிய சாம்பியன் பட்டங்களை வென்றிருந்த இவர், சிட்னியில் மீண்டும் திறமை நிருபித்தார். 69 கி.கி., எடைப்பிரிவில் அசத்திய மல்லேஸ்வரி வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற மகத்தான சாதனை படைத்தார்.
ஹீரோ: தங்க வேட்டையில் தோர்ப்நீச்சல் போட்டிகளைப் பொறுத்தவரையில், ஆஸ்திரேலியாவின் இயான் தோர்ப் சாதனை வீரராக திகழ்ந்தார். 400 மீ., "பிரிஸ்டைல்' பிரிவில், சாதனை படைத்து தங்கம் வென்றார். 4*100, 4*200 "பிரிஸ்டைல் ரிலே' பிரிவிலும் தங்கம் வென்று ஜொலித்தார். 200 மீ., "பிரிஸ்டைல்', 4*100 மீ., "மெட்லே ரிலே' பிரிவுகளில் வெள்ளி வென்றார். 17 வயதான இயான் தோர்ப், இந்த ஒலிம்பிக்கில் மொத்தம் 3 தங்கம், 2 வெள்ளி என, 5 பதக்கங்களை கைப்பற்றினார்.

Advertisement