2008 பீஜிங் ஒலிம்பிக்

"பேர்ட்ஸ் நெஸ்ட்' மைதானம்: சீனத்தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்தியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. முக்கிய போட்டிகள் நடந்த பீஜிங் தேசிய மைதானம் பறவை கூடு போல அழகாக வடிவமைக்கப்பட்டது. "டன்' கணக்கில் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த "பேர்ட்ஸ் நெஸ்ட்' மைதானம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சீன ஜிம்னாஸ்டிக் வீரரான லீ நிங், அரங்கத்தின் உயரமான பகுதியில் இருந்து கயிறு மூலம் பறந்து வந்து ஜோதியை ஏற்றினார். சீனா 51 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்தையும், அமெரிக்கா 36 தங்கத்துடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
இந்தியாவுக்கு முதல் தங்கம்: 10 மீ., துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற சேர்ந்த அபினவ் பிந்த்ரா(29), தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் சுஷில் குமார், குத்துச்சண்டையில் விஜேந்தர் ஆகியோர் வெண்கலம் வென்றனர். 2008 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 தங்கம், 2 வெண்கலம் வென்று 50வது இடம் பிடித்தது.
பெல்ப்ஸ் சாதனை: 1972ல் ஜெர்மனியின் முனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் நீச்சல் வீரரான மார்க் ஸ்பிட்ஸ் 7 தங்கம் வென்று சாதனை படைத்தார். இதை அமெரிக்கா நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ், பீஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கம் (400 மீ., தனிநபர் மெட்லே, 4*100 மீ., பிரீஸ்டைல் ரிலே, 200 மீ., பிரிஸ்டைல், 200 மீ., பட்டர்பிளை, 4*200 மீ., பிரீரிஸ்டைல் ரிலே, 200 மீ., தனிநபர் மெட்லே, 100 மீ., பட்டர்பிளை, 4*100 மீ., மெட்லே ரிலே) வென்று முறியடித்தார்.

Advertisement