ரியோ ஒலிம்பிக் மைதானங்கள்

ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தங்கும் கிராமம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அரங்கங்களை கொண்ட இடத்திற்கு 'ஒலிம்பிக் பார்க்' என பெயரிடப்பட்டடுள்ளது. இங்கு 32 இடங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கால்பந்து போட்டிகள் பிரேசிலியா, மனானஸ், சால்வடார், சாவ் பாலோ, பெலோ ஹோரிஜான்டே என 5 நகரங்களில் நடக்கவுள்ளன. * மரக்கானா: கடந்த 2014ல் 'பிபா' உலக கோப்பை கால்பந்து நடந்த மரக்கானா மைதானத்தில் துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. தவிர இங்கு, ஆண்கள், பெண்களுக்கான கால்பந்து அரையிறுதி மற்றும் பைனல் நடக்கவுள்ளது.

* சம்போடிரோமோ: இங்கு வில்வித்தை போட்டிகள் நடக்கவுள்ளது.

* ஒலிம்பிக் ஸ்டேடியம்: வழக்கமாக துவக்க மற்றும் நிறைவு விழா நடக்கும் இடத்தில் தடகளப் போட்டிகள் நடத்தப்படும். ஆனால் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக இம்முறை தடகளப் போட்டிகள் 3 வெவ்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது.

1) ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் தடகளப் போட்டிகளுடன், கால்பந்து போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

2) பாண்டல் என்ற இடத்தில் தடகளப் போட்டிகளுடன், சைக்கிள் பந்தயம் நடக்க உள்ளது.

3) சம்போடிரோமோ என்ற இடத்தில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது.

* யூத் அரினா: இங்கு கூடைப்பந்து போட்டிகள் நடக்கவுள்ளன.

* பீச்வாலிபால் அரினா: இங்கு பீச் வாலிபால் போட்டிகள் நடத்தப்படும்.

* ஒலிம்பிக் ஹாக்கி சென்டர்: இங்கு ஆண்கள், பெண்களுக்கான ஹாக்கி போட்டிகள் நடக்கவுள்ளன.

* டியோடோரோ மைதானம்: இங்கு மார்டன் பென்டாத்லான், ரக்பி செவன்ஸ் போட்டிகள் நடத்தப்படும்

இவை தவிர, ரியோ ஒலிம்பிக் அரினா (ஆர்டிஸ்டிக்ஸ், ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ்), ஒலிம்பிக் டென்னிஸ் சென்டர் (டென்னிஸ்), ஒலிம்பிக் அக்குவாடிக்ஸ் ஸ்டேடியம் (நீச்சல், வாட்டர் போலோ), ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் சென்டர் (துப்பாக்கி சுடுதல்), ஒலிம்பிக் கோல்ப் கோர்ஸ் (கோல்ப்), ஒலிம்பிக் குதிரையேற்ற சென்டர் (குதிரையேற்றம்), பியூட்சர் அரினா (ஹேண்ட்பால்), போர்ட் கோபாகபானா (மாரத்தான் நீச்சல், டிரையத்லான்), ரியோசென்டிரோ, பெவிலியன்-2 (பளுதுாக்குதல்), காரியோகா அரினா 2 (மல்யுத்தம், ஜூடோ, டேக்வான்டோ), மரக்கானாஜின்கோ (வாலிபால்), உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படும்.

Advertisement