டேவிட் ருடிசா சாதனை

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் 800 மீ., ஓட்டத்தில் அடுத்தடுத்த தங்கம் வென்று சாதனை படைத்தார் டேவிட் ருடிசா. பிரேசிலின் ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் ஆண்கள் 800 மீ., ஓட்ட பைனலில் கென்யாவின் டேவிட் ருடிசா பங்கேற்றார். சீறிப்பாய்ந்த இவர் பந்தய துாரத்தை ஒரு நிமிடம் 42:15 வினாடியில் எட்டி தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலம் முறையே அல்ஜீரியாவின் தபிக், அமெரிக்காவின் கிளே டான் கைப்பற்றினர்.

ஏற்கனவே, கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கில் டேவிட் தங்கம் வென்றார். இதன் மூலம், தொடர்ந்து இரு ஒலிம்பிக்கில் 800 மீ., ஓட்டத்தில் தங்கம் கைப்பற்றிய இரண்டாவது வீரரானார். இதற்கு முன், நியூசிலாந்தின் பீட்டர் ஸ்னில் (1960,64) இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

Advertisement