சிந்து...சில சாதனைகள்

இரண்டாவது பதக்கம் ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார் சிந்து. தவிர இது, ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். இதற்கு முன், 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் வெண்கலம் கைப்பற்றினார்.

ஐந்தாவது வீராங்கனை

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் சிந்து. தவிர இவர், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5வது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். முன்னதாக கர்ணம் மல்லேஸ்வரி (பளுதுாக்குதல், 2000, வெண்கலம்), செய்னா நேவல் (பாட்மின்டன், 2012, வெண்கலம்), மேரிகோம் (குத்துச்சண்டை, 2012, வெண்கலம்), சாக் ஷி மாலிக் (மல்யுத்தம், 2016, வெண்கலம்) ஆகியோர் பதக்கம் வென்றிருந்தனர்.

17

சிந்துவின் வெள்ளிப் பதக்கம் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 17வது பதக்கம். முன்னதாக நார்மன் பிரிட்சர்ட் (2 வெள்ளி, 200 மீ., ஓட்டம், 200 மீ., தடை ஓட்டம், 1900), ஜாதவ் (வெண்கலம், மல்யுத்தம், 1952), பயஸ் (வெண்கலம், டென்னிஸ், 1996), மல்லேஸ்வரி (வெண்கலம், பளுதுாக்குதல், 2000), ரத்தோர் (வெள்ளி, துப்பாக்கி சுடுதல், 2004), பிந்த்ரா (தங்கம், துப்பாக்கி சுடுதல், 2008), சுஷில் குமார் (வெண்கலம், வெள்ளி, மல்யுத்தம், 2008, 2012), விஜேந்தர் (வெண்கலம், குத்துச்சண்டை, 2008), விஜய் குமார் (வெள்ளி, துப்பாக்கி சுடுதல், 2012), செய்னா (வெண்கலம், பாட்மின்டன், 2012), மேரி கோம் (வெண்கலம், குத்துச்சண்டை, 2012), ககன் நரங் (வெண்கலம், துப்பாக்கி சுடுதல், 2012), யோகேஷ்வர் தத் (வெண்கலம், மல்யுத்தம், 2012), சாக் ஷி மாலிக் (வெண்கலம், மல்யுத்தம், 2016) ஆகியோர் பதக்கம் வென்றிருந்தனர்.

27

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த 28வது பதக்கம். இதுவரை இந்தியாவுக்கு 9 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் கிடைத்துள்ளது.

ஆறாவது வெள்ளி

ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் சிந்து. தவிர இது, ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 6வது வெள்ளிப் பதக்கம். இதுவரை நார்மன் பிரிட்சர்ட் 2 (200 மீ., ஓட்டம், 200 மீ., தடை ஓட்டம், 1900), ரத்தோர் (துப்பாக்கி சுடுதல், 2004), சுஷில் குமார் (மல்யுத்தம், 2012), விஜய் குமார் (துப்பாக்கி சுடுதல், 2012) தலா ஒரு வெள்ளி வென்றிருந்தனர்.

Advertisement