ரியோ சாதனைகள்...சோதனைகள்!

ரியோ: ரியோ ஒலிம்பிக்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகின் 'மின்னல் வேக மனிதன்' ஜமைக்காவின் உசைன் போல்ட் 3 தங்கம் வென்றார். ஏற்கனவே இவர், பீஜிங் (2008), லண்டன் (2012) ஒலிம்பிக்கிலும் தலா 3 தங்கம் வென்றதன்மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் 'டிரிபிள் டிரிபிள்' தங்கம் வென்று சாதனை படைத்தார். * ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ், இம்முறை 5 தங்கம், ஒரு வெள்ளி என 6 பதக்கங்களை அள்ளிச் சென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கம் (28) மற்றும் அதிக தங்கம் (23) வென்ற வீரர் என்ற சாதனையை தக்கவைத்துக் கொண்டார்.

* பிரிட்டன் வீரர் மோ பரா 5000, 10000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். ஏற்கனவே இவர் லண்டன் ஒலிம்பிக்கிலும் இப்பிரிவுகளில் தங்கம் வென்றிருந்தார். இதன்மூலம் கடந்த 40 ஆண்டுகளில் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் இந்த இரண்டு பிரிவிலும் தங்கத்தை வசப்படுத்திய 2வது வீரர் என்ற சாதனை படைத்தார்.

* அமெரிக்காவின் இளம் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ், 19. முதன்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர், 4 தங்கம், 1 வெண்கலம் என, 5 பதக்கங்கள் கைப்பற்றி சாதித்தார். தவிர, ஜிம்னாஸ்டிக்சில் ஒரே ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்ற 5வது வீராங்கனை என்ற பெருமை பெற்றார்.சோதனைகள்:

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற நட்சத்திரங்களுக்கு நிகழ்ந்த சோதனைகள்.

இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இவருக்கு கடந்த ஜூனில் நடத்தப்பட்ட சோதனையில் 'மெட்டாடியனன்' என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இருப்பினும் இவரை தேசிய ஊக்க மருந்து சோதனை மையம் ('நாடா') இவரை விடுவித்தது. இதனை ஏற்க மறுத்த சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு மையம் ('வாடா'), சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சி.ஏ.எஸ்.,) 'அப்பீல்' செய்தது. இதற்கான விசாரனணயில், நரசிங்கிற்கு போட்டியில் பங்கேற்க 4 ஆண்டு கால தடை விதித்தது. இதனால் போட்டியில் பங்கேற்க முடியாமல் உடனடியாக நாடு திரும்பினார்.

* பெண்கள் மல்யுத்தப் போட்டியின் 'பிரீஸ்டைல்' (48 கி.கி.,) காலிறுதியில் இந்தியாவின் வினேஷ் போகத், சீனாவின் யனன் சனை எதிர் கொண்டர். 1-0 என முன்னிலையில் இருந்தபோது வினேஷ் முழங்கால் பகுதியில் காயம் அடைந்து, வெளியேறினார்.

* ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின்போது, தவறி விழுந்த பிரான்ஸ் வீரர் சமிர் அட்டின் கால் எலும்பு முறிந்தது.

* ஒலிம்பிக் பளுதுாக்குதல் போட்டியின்போது, ஆர்மீனிய வீரர் ஆண்ட்ரானிக்கின் முழங்கையில் முறிவு ஏற்பட்டது.

Advertisement