Advertisement
அரசியல் செய்திகள்
அரசியல் பேசாத அழகிரியின் பிரசாரம்
ஏப்ரல் 30,2009,00:00  IST

Latest indian and world political news informationவேட்பு மனு தாக்கலுக்கு முன்பே பிரசாரத்தை துவக்கியவர் மதுரை தொகுதி தி.மு.க., வேட்பாளர் மு.க.அழகிரி. எடுத்த எடுப்பிலேயே கிராமப்புறங்களில் பிரசாரம் செய்த இவர், சில நாட்களாக மாநகராட்சி எல்லைக்குள் வலம் வருகிறார். அவரோடு பிரசாரத்தில் ஒருநாள்...ஏப்., 27ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு எழுந்த அழகிரி, மதுரையில் 28 ம் வார்டில் பிரசாரம் செய்வதற்காக தயாராகத் துவங்கினார். காலை 7 மணிக்கு அவரை வார்டில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகள் வந்து காத்திருந்தன. பூர்ண கும்ப மரியாதை தர, கையில் குடங்களுடன் பெண்கள் வந்திருந்தனர். பேண்ட் வாத்தியம் முழங்கிக்கொண்டு இருந்தது. ஸ்பீக்கர்களில் தி.மு.க., இயக்க பாடல்கள் அலறிக்கொண்டு இருந்தது. உள்ளூர் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை வரவேற்க காத்திருந்தனர்.


அதற்குள் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி முதல்வர் கருணாநிதி சென்னையில் உண்ணாவிரதம் துவங்கிய தகவல் அழகிரிக்கு வந்தது. உடனே அவர், முதல்வர் மற்றும் குடும்பத்தாருடன் போனில் பேசிவிட்டு, தானும் உண்ணாவிரதம் இருக்க புறப்பட்டார்.பிரசாரம் துவக்குவதாக இருந்த எஸ்.எஸ்.காலனிக்கு வராமல், நேராக மேல மாசி வீதி சந்திப்புக்கு சென்றார். அதன் பிறகு தான் எஸ்.எஸ்.காலனியில் காத்திருந்த கட்சியினருக்கு அழகிரி உண்ணாவிரதம் இருக்கப் போகும் தகவலே தெரியும். உடனே அவர்களும் அவசரமாக மேல மாசி வீதிக்கு வாகனங்களை விரட்டினர். உண்ணாவிரத்திற்கு போகலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடன் காங்கிரசார், ஒதுங்கினர்.


காலை 8 மணிக்கே மேல மாசி வீதியில் சேர் போட்டு அமர்ந்தார் அழகிரி. பிற்பகல் 12.30 மணிக்கு உண்ணாவிரதம் முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்டார். இதனால் அன்று காலை பிரசாரம் செய்ய முடியாமல் போனது. இருப்பினும், "தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால் "அன்று மாலையே மீண்டும் மதுரை நகரில் பிரசாரம் செய்வேன்' என, அறிவித்தார்.


மாலை 4.30 மணி முதல் பை-பாஸ் ரோடு சந்திரகாந்தி நகரில் பிரசாரத்தை துவக்குவதாக ஏற்பாடு. அவர் வந்தது 5.30 மணி. உடனே பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, அப்பகுதியே அதிர்ந்தது. அதுவரை டெம்போ டிராவலர் வேன் உள்ளே அமர்ந்திருந்த அவர், பிரசாரம் துவங்கும் இடத்தில் வண்டியை நிறுத்தி, வேனுக்கு வெளியே தெரியுமாறு கும்பிட்டபடி நின்று கொண்டார்.கூடியிருந்த பெண்கள் பூசணிக்காயில் சூடத்தை கொளுத்தி ஆரத்தி எடுத்தனர். பலர் பூர்ண கும்ப மரியாதை அளித்தனர். பேண்ட் வாத்தியத்துடன் தி.மு.க., வண்ணத்தில் குடைகளை ஏந்தியவர்கள் முன்னே செல்ல, அழகிரியின் வேன் புறப்பட்டது. அவரது வேனுக்கு முன்பு அழகிரி வருகை பற்றி ஒருவர் மைக்கில் அறிவித்தபடி திறந்த ஜீப்பில் சென்றார். வழியில் தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்குமாறு கேட்டு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன.ஆங்காங்கே சிலர் அவரது வேனை நிறுத்தி கோரிக்கை மனுக்களை தந்தனர். பெரும்பாலும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை பெற்றுக்கொண்ட அழகிரி, "நான் வெற்றி பெற்றால் நடவடிக்கை எடுக்கிறேன்' என்று மைக்கில் அறித்தார்.


கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் அவர் வேனில் இருந்தபடி பேசினார். "நான் வெற்றி பெற்றால் இப்பகுதியின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன். இதற்கு முன் இருந்தவர்கள் உங்களுக்கு எதுவும் செய்யவில்லை. நான் உங்களுக்கு செய்வேன் என்ற நம்பிக்கை இருந்தால் ஓட்டளியுங்கள்' என்று சுருக்கமாக பேசினார். எங்குமே அவர் அரசியல் பேசவில்லை. விரைவில் பல இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் பேச்சு சுருக்கமாக இருந்தது.


இடையில் வேனில் இருந்தபடி வீட்டில் இருந்து கொண்டு வந்த பப்ஸ், பிஸ்கட் சாப்பிட்டு, காபி அருந்தினார். வேறு எதுவும் சாப்பிடவில்லை. இப்படியே அன்று சொக்கலிங்க நகர், சம்மட்டி<புரம், கோச்சடை, டோக்நகர், விராட்டிபத்து ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். பல இடங்களில் அவருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இரவு 10 மணிக்கு பிரசாரத்தை முடித்துவிட்டு, உணவருந்த வீட்டுக்கு சென்றார்.வேனில் அவருடன் மனைவி காந்தி வரவில்லை. சில நாட்கள் மட்டுமே அவரும் உடன் வருகிறார். மகன் தயாநிதி அழகிரி, தனி காரில் அப்பாவை பின் தொடர்கிறார். இப்படியாக, ஒரு நாள் பிரசாரத்தை முடித்தார் அழகிரி.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 How a goon will speak about politics...He knows only vettu kuthu... 
by S Selvendran,Sivakasi,India    30-04-2009 15:07:10 IST
 சென்ற ஞாயிற்றுக்கிழமை தினமலரில் அரசியல்வாதிகளுக்கு பொருத்தமான வடிவேலுவின் வசனங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதில் அண்ணன் அழகிரிக்குப் பொருத்தமான வசனம் ஒன்றும் பிரசுரிக்கப்படவில்லை. கிரி படத்தில் வடிவேலு பேசும் 'என்னை பார்த்தா ரொம்ப.... ந ல் ல வ னா யி ரு க் கா ன் னு ஒருத்தன் சொல்லிட்டாண்டா' என்பது மிகப்பொருத்தமாக இருக்கும் 
by K Mani,Sydney,Australia    30-04-2009 07:11:53 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்