Advertisement
அரசியல் செய்திகள்
மசினகுடி ஆய்வுக்கூடத்திற்கு வைகோ எதிர்ப்பு
அக்டோபர் 09,2009,00:00  IST

Latest indian and world political news information

சென்னை: "நீலகிரி மாவட்டம் மசினகுடியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைப்பதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:நீலகிரி மாவட்டம் மசினகுடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ அறிவியல் கூடம் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளிக்க திட்டமிடப்படுவதாக தெரிகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, மசினகுடி, மோயார் மற்றும் இதன் சுற்றுப்புற பகுதிகள் தெற்காசியாவில் பல்லுயிர் சூழல் மண்டலங்களாக உள்ளன.

இங்கு முக்கூர்த்தி தேசிய பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உட்பட பல்வேறு முக்கிய வனப்பகுதிகள் உள்ளன.நீலகிரியில் மட்டுமே வசிக்கும் பல்வேறு ஆதிவாசி இன மக்களின் கிராமங்களும் இங்கு உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் உள்ள 20 அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் சார்பில், 917 கோடி ரூபாய் மதிப்பில் "இந்தியா நியூட்ரினோ' அறிவியல் கூடத்தை 10 ஏக்கர் பரப்பில் மசினகுடி அருகே சிங்காரா பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நமது தமிழகத்திற்கு நீராதாரமே மேற்கு தொடர்ச்சி மலை தான். அந்த மலையை கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு காரணத்திற்காகவும் அழித்துக் கொண்டே போனால் கடைசியில் மலையும் அழிந்து, மழையும் இழந்து நாடு பாலைவனமாகி விடும். இப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் வருவதால், அங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற செய்தி பரப்பப்படுகிறது.

அது ஒரு உயர் ஆராய்ச்சி நிலையம் என்பதால், வெளியில் இருந்து வரும் ஆராய்ச்சியாளர்களுக்கும், டெக்னீசியன்களுக்கும் தான் வேலை கிடைக்கும். மிகக் குறைந்த அளவிற்கு தான் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழக அரசு நியூட்ரினோ ஆய்வகத்தின் இடத்தைப் பற்றி எந்த முடிவும் தெரிவிக்காத நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் "சிங்காரா' தான் மிகவும் சிறந்த இடம் என்று கூறியிருப்பது தமிழக அரசின் உரிமைக்குள் தலையிடுவதாகும். தமிழக அரசும் மசினக்குடி பகுதியில் இந்த ஆய்வகம் அமைப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 Dear subbu,
are u a human being man , do u know the value of the environment off course keep aside that vaiko statement is wrong but , u answer me whats the use நியூட்ரினோ its waste of money and source of human power , am not against நியூட்ரினோ project but the place where is going do be establish , there r so many place in india , why they want to destroy the western ghats ,and nilgiri in the name of research , for example i will give u 1000 crores will u give me nature like nilgiri
why not they choose some other dry Areas in tamilnadu, even kalam oppose நியூட்ரினோ project in nilgiri , he is likes nature , he knows the value of nilgiri and its surroundings

 
by S Jaga veera pandiyan,chennai,India    10-10-2009 01:01:53 IST
 mr devan, seiythiyai muludhum. padithapin eluthungal, thevai illamal ilankai pirachanayai
kochchai padutha vendam. 
by k sritharan,london,United Kingdom    09-10-2009 15:08:46 IST
 INTHA AALUKKU VERA VELAIYE ILLAIYA ? .  
by D MANOHAR RAJ,LONDON,United Kingdom    09-10-2009 13:52:44 IST
 Hey Vaiko... You are the one of the person who has short-sighted mind; with no Vision for future. Do not forget the benefits of Research.

We lack such Research Institutions in India... which makes us low when compared with countries like USA (where it''s all Research that brought USA a world leader).  
by SRI,New York,United States    09-10-2009 06:43:02 IST
 It became the style of the opposition parties to oppose all the schemes. Mr. Vaiko could have explained how could the research laboratory affect the environment particularly the water resources. He should not divert the people and prevent investment and development opportunity given to his own state. 
by s subbu,georgia,United States    09-10-2009 04:16:42 IST
 வைகோ சார், மசினக்குடி இலங்கையின் எந்த பகுதியில் உள்ளது? அங்கே இதுதான் இப்போ பிரச்னையா? 
by D Devan ,Chennai,India    09-10-2009 00:48:06 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்