Advertisement
அரசியல் செய்திகள்
காந்திய அற வழியில் இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை: முதல்வர் கருணாநிதி நம்பிக்கை
அக்டோபர் 15,2009,00:00  IST

Latest indian and world political news information

சென்னை : "காந்திய அறவழியில், இலங்கை மக்கள் எல்லோரும் சம உரிமையுடன் வாழும் நிலை பிறக்கும்' என, முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:இலங்கையில் தமிழர்கள் உரிமைக்காக செல்வா உயர்த்திய கொடி தாழ்ந்தது ஏன்? அது மீண்டும் பறக்குமா?
"ஈழம்' என்ற எக்காள முழக் கம், சதியினால் தூண்டி விடப் பட்ட சகோதர யுத்தங்களாக மாறி, இறுதியில் ஈன கானமாக ஒலித்து, இன்று நமது கவலைக் குக் காரணமாயிற்று. அக்கொடி கட்டாயம் மீண்டும் பறக்கும். காந்திய அறவழியில், இலங்கை மக்கள் எல்லாரும் சம உரிமையுடன் வாழும் நிலை பிறக்கும்.இலங்கை சென்றுள்ள எம்.பி.,க்கள் குழு, உங்களைத் துதி பாடும் குழு என்றும், தமிழர்களை ஏமாற்றுவதற்கான திட்டம் என்றும், இந்த ஏமாற்று வேலையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளாரே?
இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்பட எந்த முயற்சி எடுத்தாலும், அது அவருக்குப் பிடிக்காது. அங்கே பிரச்னை தொடர வேண்டும்; தமிழர்கள் அவதிப்பட வேண்டும்; அதை வைத்து இவர், மத்திய மாநில அரசுகளைக் குறை கூற வேண் டும் என்பதுதான் அவரது ஆசை.நம்மைப் பொறுத்தவரை, இலங்கைத் தமிழர் வாழ்வில் எப்படியாவது நிலையான ஒளி வீச வேண்டும்; அகதி முகாம்களில் உள்ளவர்கள் தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்ப வேண்டும்; நிம்மதியுடன் வாழ வேண்டும்.நமது எம்.பி.,க்கள் குழு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவைச் சந்தித்து, தமிழர்கள் அவர்களுடைய வசிப்பிடங்களில் உடனடியாக குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.இதற்கு முன்னுரிமை அளிக் கப்படும்; இலங்கையில் உள்ள அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்; இந்தியாவும் அந்த அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ராஜபக்ஷே கூறியுள்ளார். நாமும் நம்மால் முடிந்த அளவிற்கு இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுக்கான எல்லா ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து கொண்டு தான் வருகிறோம்.இலங்கைத் தமிழர்களிடம் நான் எந்த அளவிற்கு அக்கறை உள்ளவன் என்பதை தந்தை செல்வா, சந்திரஹாசன், அமிர்தலிங்கம், மங்கையர்கரசி, சேனாதி ராஜா, ஸ்ரீசபாரத்தினம், முகுந்தன், பத்மநாபா, பேபி என்ற சுப்பிரமணியம், ஆண் டன் பாலசிங்கம், தொண்டைமான் போன்றவர்கள் நன்கறிவர்.என் பொதுவாழ்வில், இலங்கைத் தமிழர்களுக்காக என்னென்ன நடவடிக்கையில் ஈடுபட்டேன் என்பதை, இலங்கைத் தமிழர்கள் நன்கு அறிவர்; ஜெயலலிதாவின் அறிக்கைகள் ஏமாற்றும் செயல் என்பதையும் அறிவர்.மத்திய அமைச்சர் அழகிரி உஸ்பெகிஸ்தான் தூதருக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்காக அவர் பதவி விலக வேண்டுமென சுப்பிரமணியசாமி சொல்லியிருக்கிறாரே?
அது ஒன்றும் சிபாரிசுக் கடிதம் அல்ல. தமிழகத்தைச் சேர்ந்த இருவர் வெளிநாடு செல்லும் போது, தேவையான உதவிகளைச் செய்து தர, அந்த நாட்டில் உள்ள நமது தூதருக்கு கொடுக்கப்பட்ட ஒரு அறிமுகக் கடிதம்.அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டவர்கள், அந்த பயணமே மேற்கொள்ளவில்லை. அமைச்சர் அழகிரியின் அலுவலகத்தில் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற செயல்பாடு அதிகமாக இருப்பதால், இது போன்ற கடிதங்கள் கொடுப்பது தவிர்க்க முடியாததாக ஆகியிருக்கலாம். இது ஒரு சாதாரண நடைமுறை என, வெளியுறவுத்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.விவசாயிகளுக்கு 3,000 ஏக்கர் நிலம் கூட வழங்கப்படவில்லை என்று வரதராஜன் பேசியிருக்கிறாரே?
இதுவரை இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் நிலம் பண்படுத்தப்பட்டு, ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள் ளது. இந்த அரசைப் பார்த்து கேள்வி கேட்கும் வரதராஜன், சிறுதாவூரில் ஆக்கிரமிக்கப் பட்ட ஏழை விவசாயிகளின் நிலத்தை மீட்டுக் கொடுப்பேன் என முழக்கமிட்டதை மறந்து விட்டாரா? வேறு கட்சிகள் ஈடுபடட்டும் என விட்டு விட்டாரா?இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 helo dear people dont argue about karunaneedi bcz his name only like that. otherwise totally he is fraud if watch the news paper and tv news kalaingar he got anna award. he got that award this award cine actors also wish him. actually we dont know kalaingar what he did for tamil nadu and tamil people. so we have to avoid the dmk for next election  
by a m bathusa,farwania,Kuwait    15-10-2009 14:53:10 IST
 SUPER SCREENPLAY. YOU WILL GET SORRY. ALLOT AN AWARD FOR THIS 
by J RAJKUMAR,tirupur,India    15-10-2009 11:02:24 IST
 தமிழக முதல்வர் கலைஞர் மு . கருணானிதி அவர்களே நீதி உங்கள் பெயரில் மட்டும் தான என்ன செய்வது நங்கள் முட்டாள் ஆகி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது ....நீஇங்கள் எது வேனாலும் அறிக்கை விடலாம் கேள்வி கேட்டு அதற்கு பதில் தயார் செய்து விடலாம் .............உங்களை போல தலைவர்கள் தான் இந்த தமிழ் நாட்டுக்கு வேண்டும் .........காலம் தான் எதற்கும் பதில் சொல்லும் உங்கள் குடும்பம் நன்றக வாழும் வாழ்க ..............இலங்கை வாழும் என் தங்கை அண்ணன் அக்கா நண்பர் அப்பா அம்மா .......உங்கள் வாழ்க வாழ்த்துவார்கள் !!! மன சாட்சி என்னபதே இல்லயா !!!! 
by ganes kumar,chennai,India    15-10-2009 07:23:00 IST
 Ithu enna tactics nu theriyala... Sethu ponavanga pera sonna yaru poi kaekka pora appadingarathu... kalakkunga Mu Ka... 
by S Sriram,Chicago,United States    15-10-2009 03:51:06 IST
 சினிமா , கல்வி , வியாபாரம் , விளையாட்டு என்ற எந்த தொழில் செய்பவரும் மேலும் தாங்கள் உயரவேணும் என்று உச்சமாக அரசியலுக்குத்தான் வருவார்கள் .எனென்றால் அரசியல் சக்தியே எல்லா சக்திகளுக்கும் உச்சம். கருணாநிதி எனப்படும் மனிதர் அரசியலை முழு நேர தொழிலாக கொண்டிருப்பவர். என்னவானாலும் சரி அரசியல் பதவி , அதிகாரம் இவைதான் அவரின் குறிக்கோள். இதில் தவேறேதும் இல்லை.அப்படிப்பட்டவர் ஆட்சி ஒரு முறை கலைக்கப்பட்டது ''புலிகள்'' விஷயம் காரணமாக. மற்றோர் முறை ராஜீவ் கொலைக்கு காரணம் என்றும் திமுக மக்கள் விரோத கட்சி என்றும் கருதி முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு ஆட்சி வாய்ப்பை இழந்தது. மக்களிடம் ஒரு காலத்தில் கெட்ட பெயர் வந்ததற்கும் அதே தான் காரணமாக இருந்தது. திமுக வின் இழப்புகள் இந்த விஷயத்தில் மற்றெல்லா கட்சிகளையும் விட அதிகம்தான். இன்னமும் கூட தன் கட்சி மீது ஏதும் பழி வீழக்கூடாது என்று மனப் போராட்டம் நடத்துகிறார். சும்மாவேனும் அவரையே சீண்டிக்கொண்டிருக்க வேண்டாம்...விட்டு விடுங்கள் .. 
by D Devan ,Chennai,India    15-10-2009 01:15:42 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்