Advertisement
அரசியல் செய்திகள்
மேலும் 40 லட்சம் கலர் 'டிவி' கொள்முதல்
நவம்பர் 06,2009,00:00  IST

Latest indian and world political news information

சென்னை : முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இலவச கலர் "டிவி' திட்டம் பற்றிய கூட்டத்தில், ஐந்தாம் கட்டமாக 40 லட்சம் கலர் "டிவி'களை கொள்முதல் செய்ய, சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் கோர முடிவு செய்யப்பட்டது. முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைக்கப் பட்ட இலவச கலர் "டிவி'கள் வழங்குவது குறித்த சட்டசபை கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் 16வது கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று காலை நடந்தது.


இதில், துணை முதல்வர், சட்டசபை கட்சிகளின் தலைவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இத்திட்டம் 2006 செப்டம்பர் 15ம் தேதி துவக்கப்பட்டு, நான்கு கட்டங்களாக, மொத்தம் 85 லட்சத்து 15 ஆயிரத்து 343 குடும்பங்களுக்கு இலவச கலர் "டிவி'கள் வழங்கப்பட்டுள்ளன.


நேற்று நடந்த கூட்டத்தில், நான்காம் கட்டத்தில் எட்டு லட்சத்து 37 ஆயிரத்து 500 கலர் "டிவி'களை கூடுதலாக கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஐந்தாம் கட்டமாக 2009-10ம் ஆண்டில், மேலும் 40 லட்சம் கலர் "டிவி'கள் கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இந்த கொள்முதல் தொடர்பாக இம்மாதம் முதல் வாரத்தில் சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகளைக் கோருவது என்றும், டிசம்பர் மாத மத்தியில் ஒப்பந்தப் புள்ளிகளை திறப்பது என்றும், டிசம்பர் மூன்றாவது வாரத்தில் ஒப்பந்தப் புள்ளிகளை முடிவு செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.


வரும் 2010 பிப்ரவரி துவங்கி டிசம்பர் வரை 40 லட்சம் கலர் "டிவி'களை மக்களுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. நான்காம் கட்டத்தில் கலர் "டிவி'களை வழங்க, நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்பக் குறியீடுகளையே, தற்போதைய ஐந்தாம் கட்ட கொள்முதலுக்கும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 சேகர்.. I am looking all your comments in various topics. None of them are good. At least in this you wrote something proactively (after the first two sentences). Who said its govt decision? Who is govt? We.. ppl who voted.. You are asking its govt decision and we can''t intervene. Stop talking 
by S ஸ்ரீராம்,chicago,United States    07-11-2009 00:21:30 IST
 எம் ஜி ஆர் சத்துணவு திட்டத்தை கேலி செய்த கருணாநிதி இன்று டிவி வரை அத்தியாவசியாமில்லாத பொருள்களை கொடுத்து மக்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டார் , மேலும் ஆக்குவர்  
by segar சேகர் ,tamilnadu,India    06-11-2009 23:26:42 IST
 அரிசி விலை ரூபாய் 2
துவரம் பருப்பு விலை ரூபாய் 100
இந்த அரிசியை கலைஞர் குடும்பம் சாபிடுமா ?
அல்லது துவரம் பருப்பு சாம்பாரை தான் என் நாட்டு கூலி தொழிலாளி மக்களால் சாப்பிட முடியுமா ?
அடுத்தவனை ஏமாற்றும் என் அரசின் தலைவர்களும் , மக்களும் எப்போது மாறப்போகின்றார்கள்?
 
by Aa Pandian,chennai,India    06-11-2009 19:48:33 IST
 total tv procured crossed totel rationed card issued means totel corruption by the ruling party 
by p joseph,tamilnad,India    06-11-2009 19:48:03 IST
 அட கால கொடுமையே, திரு கருணாநிதியின் அரசியல் சதுரங்கம் மிக கொடூரமாகவும், கேவலமாகவும் உள்ளது.

மக்களுக்கு உண்மையிலேயே நல்லது செய்ய நீங்கள் நினைத்தால் தயவு செய்து நாட்டுக்கு பலன் தரும் நல்ல திட்டங்களை செயல்படுத்தவும், I indian,Oman அவர்களின் கருத்துக்களில் உள்ள பயனுள்ள வழிகளில் கூட இந்த பணத்தை பயன்படுத்தலாமே!! அதில் தங்களால் முடிந்தவரை கட்சி (குடும்ப) வளர்ச்சி பணிக்கு (?????????) நிதி ஒதுக்கி கொள்ளலாமே!!!!

ஏன் இவ்வாறு மக்களின் வரி பணத்தை வாரி வீணடிக்கிறீர்கள்??

ஏனய்யா ஏழ்மையை உங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறீர்கள்???

நம் மக்களின் மனநிலையை மாற்றுவதும் கடினம், வசதி படைத்தவர்களே இலவசங்களுக்காக தன்மானத்தை விட்டு கொடுக்கும்பொழுது (ஓட்டை விற்ப்பது முதல் அனைத்தும்), உங்களை மட்டும் குறை கூறவும் முடியாது.

இங்கு உங்கள் கருத்துகளை பதிவு செய்தவர்களின் உறவினர்கள் எவரும் இந்த இலவசங்களுக்கு அடிபணிந்ததில்லை என்று கூறுவதே மிகவும் கடினம் (என் உறவினர்களையும் சேர்த்துத்தான்).. ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது ..''free ஆ குடுத்தா பெனாயிளையும் நம் மக்கள் குடிப்பார்கள்'' !!!

ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடி என்கிறார்கள், தெருகோடியை தாண்டினால் இறந்தவனுக்கு ஒன்றும் இல்லையென்பதை எப்பொழுது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்???

இந்த அரசியல் புற்று நோய்களிடம் இருந்து கோடி ''காந்திகள்'' பிறந்தாலும் சுதந்திரம் கிடைப்பது கடினம் போல தோன்றுகிறது!!!

ஒன்றுமட்டும் உறுதியாக தெரிகிறது, இன்றைய இளைய சமுதாயம் விழிப்படைய ஆரம்பித்துவிட்டதை இங்குள்ள கருத்துக்களின் பதிவினை பார்க்கும்பொழுது தெரிகிறது.

வெல்க பாரதம். 
by Aarif R,London,United Kingdom    06-11-2009 17:51:55 IST
 Corruption at its high for the past 40 years when the kazhagams started ruling this country.

Look at the horrible picture, there is no provision to clear the rain waters under the bridges / flyovers in Madras and elsewhere!!

But these guys are distributing color TVS and 10 goes to public, as a publicity stunt, rest goes to their partymen to make money!

Tamil Nadu will face oneday one of the severe dreaded disease and there is no way they could cope with that kind of problems. Everyone could recall the amount of problems one had with Chicken Gunea some few years back, next one will be more severe and will take away many innocent lives!

Hi, who cares! My power, position and my family''s members wealth and power are more important than anything to me in the world, even though I''m in the dying age! 
by JG ஜி கணேசன்,Kumbakonam,India    06-11-2009 16:33:33 IST
 இதெல்லாம் பித்தலாட்டம். திரு.ஸ்டாலின் அவர்களும் தயநிதிமாறன் அவர்களும் அமைச்சர்களாக இருக்கும் ஆயிரம் விளக்கு ( சிவஷன்முக புறம் ) காங்கிரஸ் மைதானம் பின்புறம் பகுதியிலேயே இன்னும் யாருக்கும் எதுவும் கிடைக்க வில்லை டிவி யும் காஸ் சிலிண்டரும் அடுப்பும் அனைத்தும் கொடுத்துவிட்டதாக கணக்கு காட்டி விட்டார்கள். இதெல்லாம் நம்பி ஒட்டு போடற முட்டாள் ஜனங்க இருக்குற வரைக்கும் நம் தமிழ் நாட்டை யாராலையும் காப்பத்த முடியாது -வெங்கட்
 
by c வெங்கட்,chennai,India    06-11-2009 16:02:07 IST
 அடுத்த தேர்தலுக்கு இலவசம் என்ன என்பதை நாமே ஊகித்து கொள்ளலாம். அது வேறொன்றும் இல்லை...தமிழ் பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் சீரழிக்கும் தமிழ் சேனல்கள் அடங்கிய ரிசீவர் தான்.
 
by kr தனுஷ்கோடி,Virudhunagar,India    06-11-2009 15:07:54 IST
 mrs.சுஜா well said,thats the feeling of every everyone who loves there nation, 
by D doma,uae,India    06-11-2009 15:07:32 IST
 எங்க குரோம்பேட்டை பகுதியிலே இலவச டிவி ஐ கண்ணுலே காண்பிக்க மட்டேங்கரங்களே. துணை முதல்வர் எவ்வளவு வேலை செய்வார். பாவம். அவரது வேகத்திற்கு மற்றவர்கள் ஈடு கொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை  
by G Baalaa,CHENNAI,India    06-11-2009 15:06:46 IST
 இலவசம் என்ற வார்த்தை தமிழில் இல்லாது போக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். என்றுதான், என் மக்கள் தனது சுயமரியாதை இழக்காது சொந்த ulaipai nambuvarkallo irraiva kappatrru 
by kannan,sa,India    06-11-2009 13:07:08 IST
 வரவேற்கிறேன்.

இப்படிக்கு பரம ஏழை பாமரன்  
by பாமரன் ,chennai,India    06-11-2009 12:56:00 IST
 கடந்த இரண்டு வருடமாக இலவச கலர் டி வி வாங்கின குடும்பம் நன்றாகவே இருக்கலாம். இப்பொழுது சாதரணமாக இரண்டாயிரம் ரூபாயில் செல் போன் வாங்கலாம். அது அந்தந்த குடும்ப உறுப்பினர்களின் இஷ்டம். ஆனால் இங்கு வாசகர்கள் குறுப்பிடுவது இலவசமாக டி வி கொடுப்பதை. பணம் கொடுத்து கடையில் இருந்து இரண்டாயிரம் என்ன இருபதாயிரத்திற்கு வேண்டுமானாலும் டி வி வாங்கிக் கொள்ளட்டுமே. மானாட மயிலாட என்ன வேறு எந்த ஆபாச நிகழ்ச்சிகளை பார்த்தாலும் நாங்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஆனால் ஐம்பது கோடி ரூபாய்க்கு ஜப்பானிடம் இருந்து கடன் வாங்கும் அரசு, இரு நூறு கோடி ரூபாய்க்கு உலக வங்கியிடம் இருந்து கடன் வாங்கும் அரசு, இலவச தொலை காட்சி பெட்டிக்காக நான்காயிரம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டுமா என்பதே எங்கள் கேள்வி.  
by H நாராயணன்,Hyderabad,India    06-11-2009 12:51:58 IST
 Those who r commenting in this coloum, ask themself, had u got or not. If u r against this tv issue, inform the authorities u r not intrested. refused to get any free issue. then u make comment. kk 
by m krishna,abudhabi,uae,India    06-11-2009 12:39:40 IST
 இலவச டிவி வேண்டாம். லஞ்சம் வாங்காம வேலை வாய்ப்பு கொடுங்க போதும் 
by s சுஜா,karur,India    06-11-2009 12:31:10 IST
 அம்மாடியோவ்! ஒரே சமயத்துல நாப்பது கோடிய ஏப்பம் விட கருணாநிதிக்குத்தான் தெரியும். ஒரு டிவிக்கு 100 ரூபாயுன்னு வெச்சா கூட நாப்பது கோடி ஆயி போச்சு! ஆமா, நாப்பது கோடிக்கு எவ்வளவு சைபர் ஸ்டாலின் சாரே? 
by மு செல்வராஜ் பிரபு,கபோரோனீ,Botswana    06-11-2009 12:25:45 IST
 அந்த அரசியல் சாணக்கியர் mr.Mahendran போன்ற புத்திசாலிகளிடம்
ஆலோசனை கேட்டிருக்க வேண்டும் .

முட்டாள்தனமானதுதான்
 
by வை கோபால் சாமீ ,chennai,India    06-11-2009 12:20:19 IST
 இது முட்டாள் தனமான முடிவு. இன்று வோட்டுக்காக டிவி கொடுப்பார். நாளை இளைஞர்கள் ஆசை படுகிறார்கள் என்று தினமும் சாராயம் ரேசன் முலம் கொடுப்பாரா?
 
by mr மகேந்திரன்,Los Angeles,United States    06-11-2009 10:28:17 IST
 அடுத்த தேர்தலுக்கு இலவசம் என்ன தெரியுமா?? - வறுமையில் வாடும் தமிழ் மக்களுக்கு இலவச சினிமா டிக்கெட்!!! கருணாநிதியின் தொலைநோக்கு பார்வைக்கு முடிவே இல்லை  
by MK Soorya,Singapore,Singapore    06-11-2009 10:23:51 IST
 உங்க இலவச திட்டத்தை கல்வியல் காட்டுங்க நாடு முன்னேறும்.  
by D Kokila,coimbatore,India    06-11-2009 10:21:07 IST
 நல்ல அரசாங்கத்தின் வேலை மக்களுக்கு சுகாதாரம், சட்ட ஒழுங்கு, நாட்டு வளங்களை பாதுகாப்பது தான்.

மானாட மயிலாட கூத்துகளை பார்க்க வைப்பது அல்ல.

நாலாயிரம் கோடி ரூ பணத்தில் தமிழ்நாடு முழுதும் சுத்தப்படுத்தி இருக்கலாம், (மிகவும் அசுத்தமான மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று)

தரிசு நிலங்களில் காடு வளர்த்து தமிழ்நாட்டை செழிப்பாக ஆக்கி இருக்கலாம்.(தமிழ்நாட்டின் காட்டு வளம் அழிந்து பாலை வனமாகும் நாள் நெருங்குகிறது).

நீர் வளங்களை பாதுகாக்கும் திட்டங்களை ஏற்படுத்தி விவசாயத்தை ஊக்குவிக்கலாம் (வெகு விரைவில் விவசாயம் அழிந்து, உணவுக்கு பிச்சை எடுக்கப்போகிறோம்)

மேல் உள்ளவைகள் மக்களுக்கு பயன் தரும் நலத்திட்டங்கள்.

டிவி திட்டம் அதற்கான டாஸ்மாக் எல்லாம் கருணாநிதியின் சகுநித்தனமான கொள்ளை திட்டங்கள். 
by I indian,Dubai,Oman    06-11-2009 09:35:04 IST
 போக்குவரத்து விபத்துக்களால் பாதிக்கப்பட்டோருக்கு 300 கோடி இழப்பீடு கொடுக்க அரசிடம் பணம் இல்லை!
தந்தையை இழந்து நடுத்தெருவில் நிற்கும் குடும்பங்கள் ஏராளம்.
ஜப்தி பேருந்துகள் ஏலம் அன்றாட செய்தி!
கூவத்தை தூய்மைப்படுத்த சாயிபாபாவிடம் பிச்சை கேட்க தயக்கம் இல்லை!.
ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சிகளை பார்க்க இலவச டி வி க்கு மட்டும் பண பற்றாக்குறை இல்லை! 
by V மணி,Chennai,India    06-11-2009 09:16:07 IST
 ஐயா எங்களுக்கு தொலைகாட்சி எல்லாம் வேண்டாம். வேலைவாய்ப்பு, உண்ணும் உணவு, இருக்க இடம், குடிக்க குடிநீர் போதும். ரேஷன்ல போடுற அரிசிய சமையல் செய்தால் ஒரு வித கெட்ட வாசனை தான் வருது. இந்த தொலைகாட்சிக்கு பதிலா அரிசிய நல்லதா போட்டா உங்களுக்கு புண்ணியமா போகும்.  
by m ஸ்ரீனிவாசன்,erode,India    06-11-2009 08:49:56 IST
 FOOLISH polities. 
by v michael,Nagercoil,India    06-11-2009 07:53:27 IST
 ரொம்ப ஓவர் ஆக்ட் பண்ணாதிங்க வாசகர்களே! கடந்த இரண்டு வருடமா இலவச T.V வாங்கின எந்த குடி முழுகிச்சு? இப்போ சாதாரணமா இரண்டாயிரம் குடுத்து செல் போன் வாங்கறாங்க மக்கள். இந்த T.V ஒரு பொழுது போக்கு மற்றும் அத்யாவசியமும் கூட!
ஜெயலலிதா,சிங்கப்பூர். 
by J ஜெயலலிதா,சிங்கப்பூர்.,India    06-11-2009 06:23:34 IST
 மேலும் 40 லட்சம் கலர் ''டிவி'' கொள்முதல் :
இது அரசு சார்ந்த விஷயம் இதில் யாரும் தலை இட முடியாது. இருந்தாலும் ஒன்று சொல்லியே ஆகா வேண்டும். இந்த டிவி யாரால் தரப்படுகிறது, எங்கு தரப்படுகிறது, எப்போது தரப்படுகிறது, யார் யாருக்கெல்லாம் தரப்படுகிறது என்பது பல பேருக்குத் தெரியாமலேயே இருக்கிறது, நடுத்தர மக்களில் பலர் குறிப்பாக சென்னையில் இருப்பவர்களுக்கே தெரிவதில்லை, சிலர் ரேஷன் கடைக்குச் சென்று கேட்கின்றனர், பலர் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் சென்று பெற்று வருகின்றனர், ஒரு சிலருக்கு உங்களுக்குக் கிடைக்காது சொண்ட வீடு உள்ளது என்று கூறி அனுப்பி விடுகின்றனர்களாம். ஆக செய்தித் தாள்களிலும், மற்ற துறை மூலமாகவும் அன்றாடம் அரசு இலவச டிவி அரசு இலவச டிவி என்று செய்தி மட்டும் வெளி வருகிறது, யாருக்கு என்பதுதான் தெரியவில்லை?
கிடைக்காதவர்கள் விநயோகிக்கப்பட்ட மக்களிடமிருந்து ருபாய் ஆயிரம் முதல இரண்டாயிரம் வரை கொடுத்து வாங்கிக்கொண்டு ஒரு அறைக்கு ஒரு டிவி என்று தங்கள் வீட்டில் வைத்துக்கொண்டு இருக்கின்றனர்.
Lion Dr S Sekar
India 
by Ln Dr S Sekar,Chennai,India    06-11-2009 05:56:45 IST
 With the money he has already spent (2400 Cr) and the money he is going to spend for another 40 lakhs sets..Tamil nadu could have started a major Industry and provided jobs to 1000s of people. Instead he has put the money in the drain. Whose money is it anyway ??? If TN people are still foolish enough ....DMK and congress will continue to win in TN. Money for votes, free tv, free land, free gas stove....he is making sure that tamil people remain at the bottom so that he can fish for votes easily... 
by K கார்த்திகேயன்,New York,United States    06-11-2009 05:27:29 IST
 எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறது என நம் தலைவருக்கு சொல்லியே கொடுக்கவேண்டாம் ,,நல்ல போதை மருந்து மாதிரி இந்த இலவசம் {எலும்பு துண்டு }போட்டு போட்டு மக்களை மயக்கி கெடுத்து கெடுத்து குட்டி செவராக,ஆக்கி விட்டார் ,,இன்னும் ரெண்டு வருசத்தையும் ஓட்டனும்,, எவ்வளவு சுருட்ட முடியுதோ அவ்வளவு சுருட்டனும்,,குடும்ப வாரிசுகளுக்கு பதவி வாங்கி கொடுக்கணும் ,,இதே தவிரே வேறு வேலை,,,மக்கள் திருந்தவே விடமாட்டார் ,,  
by k SATHISH,cbe,India    06-11-2009 05:09:50 IST
 Your idea is good, it is better to have one TV manufacturing industry with less than this money and make more TV and Give it to all the people of Tamil Nadu for Years. VaZhga valamudan. 
by c danial,uae,United Arab Emirates    06-11-2009 05:08:45 IST
 நாட்டையே குட்டி சுவர் ஆக்கும் செயல். ஆகபூர்வமாக எதையும் செய்யாமல் வோட்டுக்காக நாட்டையே அடமானம் வைக்கும் செயல்.  
by A வினோத்,Chennai,India    06-11-2009 05:04:33 IST
 MGR increased educational reservartion to 69% to increase job seeking ability to many families but Supreme Court objected.Here for 2010,app Rs 800 cr will be spent in 40 lakhs TVs.TN govt can start an Industry with this cost of TV.SC is mum,if Tax payers money is spent,to get votes and in productive way. 
by R Karuppiah Sathiyaseelan,Kinshasha,Congo (Zaire)    06-11-2009 03:54:27 IST
 என்க அப்பன் வீடு சொத்து 
by ச்ய்ப்ரமணி,chennai,India    06-11-2009 02:20:24 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்