Advertisement
அரசியல் செய்திகள்
புதிய அணை கட்ட தமிழகம் சம்மதித்ததா? இல்லவே இல்லை என கருணாநிதி மறுப்பு
நவம்பர் 08,2009,00:00  IST

Latest indian and world political news information

சென்னை:முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்த கண்டனத்திற்கு முதல்வர் கருணாநிதி நேற்று மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுக்கு மேலாகி விட்டதால், அணைக்கு ஆபத்து, ஐந்து மாவட்ட மக்களின் உயிருக்கு ஆபத்து, அப்படி ஆபத்து ஏற்பட்டால் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் தடுத்து விடுவார்களா என, கேரளமுதல்வர் அச்சுதானந்தன் -கேட்டிருக்கிறார். உலக அளவில் இது போன்ற அணைகள் கட்டப்படும் போது, அந்த அணையின் உறுதித் தன்மை வெறும் நூறாண்டு காலத்திற்கு மட்டுமே இருக்கக் கூடியதாக கட்டமாட்டார்கள். அணை கட்டப்பட்டு தகுந்த பராமரிப்பு செய்து வந்தால், பல நூற்றாண்டுகளுக்கு அந்த அணை பாதுகாப்பாக இருக்கும்.அணையைப் பலப்படுத்துவது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பொறுத்த வரை, டில்லியில் மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவர் 1980ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி இரண்டு மாநில பொறியாளர்களையும் அழைத்துப் பேசி, தற்போதுள்ள அணையைப் பலப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான பரிசீலனை செய்தார்.பின்னர் அணையைப் பலப்படுத்தும் முதல் இரண்டு கட்டப் பணிகள் முடிந்ததும், 145 அடி வரை தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்பதை மீண்டும் தொடரலாம் என்று, மத்திய நீர்வளக் குழுமத் தலைவர் அறிவித்தார். கேரள அரசு தமிழக அரசுக்கு எழுதிய கடித்தில் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி, அணையை பலப்படுத்தும் பணி முடிந்த பிறகும் நீர் மட்ட அளவை 136 அடி வரை என்றே வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.இக்கருத்தை தமிழக அரசு ஏற்க மறுத்து தற்காலிகமாகத்தான் அணையைப் பலப்படுத்தும் பணி முடிகிறவரை 136 அடி வரை நீர்மட்டம் இருப்பதற்கு ஒப்புக் கொண்டோம். மத்திய நீர்வளக் குழுமம் தயாரித்த குறிப்பில், அணை பலப்படுத்தப் பட்டு விட்டால் நீர் மட்டத்தின் அளவை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், அந்தக் குறிப்பில் புதிய அணை கட்டுவது பற்றிய யோசனை தொடரப்படவில்லை என்றும்
கூறப்பட்டிருந்தது.இந்த விவரங்களிலிருந்து 1979ம் ஆண்டு மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை யின்போது, புதிதாக மாற்று அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒப்புக் கொண்டது என்று நேற்றைய தினம் கேரள முதல்வர் அச்சுதானந்தம் கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 nadakame ulagam
Karunanidhi Thalaiavr 
by R Krishnan,coimbatore,India    08-11-2009 19:33:45 IST
 1979 இல் யாரு முதல்வராக இருந்தார்  
by m tamilkader,dammam,Saudi Arabia    08-11-2009 12:33:20 IST
 மு.க அவர்களே, ''தற்காலிகமாக ஒப்புக்கொண்டோம்'' என்பதற்கு என்ன அர்த்தம் என்று கொஞ்சம், கொஞ்சூண்டு மட்டும் விளக்கிட்டா போதும். எனக்கு என்னவோ இந்த தற்காலிக என்ற வார்த்தைக்கு அர்த்தம் 1974 ல காவிரி கேசை வாபஸ் வாங்கரப்ப கொடுத்த ஸ்டேட்மென்ட் ஞாபகத்துக்கு வரது.  
by v sundaram,jeddah,Saudi Arabia    08-11-2009 09:42:19 IST
 புள்ளியியலில் கரை கண்ட தலைவா ! 
by km viswanathan,Bhubaneswar,India    08-11-2009 08:48:47 IST
 அந்த அணை பலமிழந்து விடவில்லை. வலிமையாகத்தான் உள்ளது’ என்பது தமிழக அரசின் நியாயமான வாதம். இந்த வாதத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்கிறது. ஆம். ‘இன்றைய பெரியாறு நீர்த்தேக்கத்திற்கு எந்தச் சேதாரமும் இல்லை. அணை ஆயிரம் யானை பலத்தோடு நிற்கிறது’ என்று மனு செய்கிறது.
இங்கே பணிந்தது யார் என்று பார்க்கத் தேவையில்லை. மத்திய அரசே தமிழகத்திற்கு ஆதரவாக நீதிதேவனிடம் மனு செய்துவிட்டது. ஜெய்ராம் ரமேஷ்களின் அனுமதிகள் மரித்துப் போயின. எனவே, கண்டனக் கூட்டம் தேவையில்லை என்று கலைஞர் கைவிட்டு விட்டார். காரியம் கைகூடிய பின்னர் கண்டனம் எதற்கு?
 
by P Pathmanathan,UDUMALAI,India    08-11-2009 06:38:48 IST
 MK should ask,why TN Congress leaders,like Thangabalu,Chidambaram,Jayanthi Natarajan,Sudershanam,Peter Alphonse,etc,are silent on Mullai Periyaru,ever since survey has begun? 
by R Karuppiah Sathiyaseelan,Kinshasha,Congo (Zaire)    08-11-2009 04:10:22 IST
 நல்ல நாடகம்.பெரியவர்களால் நடந்து வரும் நாடகம். நடிப்பு கேரளா, தமிழ் நாடு முதல்வர்கள் .திரைகதை வசனம் இயக்குனர் யர்ர் ,????? இதுதான் <எங்கள் கேள்வி.....அரசியல் நாடகம் வெற்றி நடை போட்டு வருகிறது.. <ஆனா இது இன்னொரு காவேரியா இல்லாம் இருக்கணும்,,,இரு மாநில பிரச்சினையா பாக்காமல் இந்தியனா பார்த்து முடித்தால் ஒழிய சரியாய் முடிக்க முடியாது.....மதிய அரசு தலையிட்டு உடனே சரி செய்யணும். <நாடகத்திருக்கு தலைமை தாங்க கூடாது.காங்கிரசு மேல் அணைத்து இந்தியருக்கும் நம்பிக்கை வரும் படி செய்யவனும்........உங்கள் இயக்கம் சுபமாக இருக்கட்டும்  
by கலை ராஜா ,trichy,India    08-11-2009 01:54:36 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்