Advertisement
அரசியல் செய்திகள்
உலமாக்கள் வாரிய உறுப்பினராக 7,726 பேர் விண்ணப்பம்
நவம்பர் 11,2009,00:00  IST

சென்னை: தமிழ்நாடு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இதுவரை 7,726 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் முதல் கூட்டம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலர் ராமநாதன், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அண்ணாமலை மற்றும் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நல வாரியம் அமைத்து உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதிக்கு, நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகியவற்றின் முன்னேற்றம் மற்றும் உலமாக்கள், உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக சேர இதுவரை 7,726 பேர் விண்ணப்பித்துள்ளனர். 4,808 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதர விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இதுவரை உறுப்பினர்களாக பதிவு செய்யாமலிருக்கும் அனைத்து உலமாக்கள் மற்றும் பணியாளர்களையும் விரைவில் உறுப்பினர்களாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டம் முடிந்ததும் வாரியத்தின் உறுப்பினர்கள், துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்