Advertisement
அரசியல் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றால் குண்டர் சட்டம்: ராமதாஸ்
மே 14,2008,00:00  IST

Latest indian and world political news information

சென்னை: "தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுக்களை விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க., நிறுவனத் தலைவர் ராமதாஸ் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. லாட்டரி சீட்டை பயந்து விற்கும் காலம் போய் பகிரங்கமாய் விற்கிறார்கள்.



வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இங்கு போலியாக அச்சடித்து விற்கப்படுகிறது. சில இடங்களில் போலீசாரின் துணையுடனும், பல இடங்களில் அரசியல்வாதிகள் துணையுடனும் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன. லாட்டரி சீட்டு விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அதே போல், பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்பனையும் நடந்து வருகிறது. இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்