Advertisement
அரசியல் செய்திகள்
கோவில்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று : அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
நவம்பர் 12,2009,00:00  IST

Latest indian and world political news information

சிவகங்கை : சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, வடபழனி கோவில்களுக்கு உலக தரச்சான்று பெற (ஐ.எஸ்.ஓ.,) முயற்சி எடுத்து வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். சிவகங்கையில் அவர் கூறியதாவது: அறநிலையத்துறையின் கீழ், 38 ஆயிரத்து 645 கோவில்கள் உள்ளன. கடந்த ஆட்சியில் கோவில் திருப்பணிக்காக 147 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 360 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். பழநி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல, இரண்டாவது "ரோப் கார்' (மோனோ கேபிள் ஜிப் பேக் முறை) அமைக்கப்பட உள்ளது. சோளிங்கரில் புதிதாக "ரோப் கார்'அமைக்கப்படும். இதற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் டெண்டர் விடப்படும். நடப்பு ஆண்டில் பயிற்சி பெற்ற 207 பேர் அர்ச்சகராகியுள்ளனர்.பழநி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் உட்பட 10 கோவில்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.


உலகத்தர சான்று: சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, வடபழனி முருகன் கோவில்களுக்கு உலகத்தர சான்று (ஐ.எஸ்.ஓ.,) பெற முயற்சிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்து விடும். திருத்தணி முருகன் கோவில் கோபுரம் கட்டுமானப் பணிக்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழா, ஒரு சில நாட்களில் நடக்கும். ஆதிதிராவிடர்கள் பகுதியில் உள்ள 1,000 கோவில் திருப்பணிக்காக, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதுவரை 20 ஆயிரம் ஆதிதிராவிடர் கோவில்களுக்கு திருப்பணி செய்ய நிதி தரப்பட்டுள்ளது, என்றார். அறநிலையத்துறை கமிஷனர் சம்பத், கலெக்டர் மகேசன்காசிராஜன், ராஜசேகரன் எஸ்.பி., உடனிருந்தனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 அய்யம்பேட்டை அப்பளத்துக்கும் ஐ.எஸ்.ஓ, அம்பானிகளின் கம்பெனிக்கும் ஐ.எஸ்.ஓ,!!!! 
by S Dinakaran,chennai,India    12-11-2009 16:03:18 IST
 What for this ISO certification is done? Is that to confirm that the deities really have the power? Is the Govt going to ask the devotees to visit only the ISO certified temples?

Will the Govt take similar excercise to the other temples / mosques / church / Gurudwars?

Garland in Monkey''s hands....  
by H Narayanan,Hyderabad,India    12-11-2009 14:38:08 IST
 ISO proceedures is to create a policy and follow the policy..
This could lead to looting of temple money /wealth officially
what we need is honest and efficient person to manage the temple properties and affairs.

Now some of temples are managed by people who has no integriry/honesty, no beleive if Hinduism , they eat beef /port yet they enter into the temple for management purpose ..
We strongly beleive the god and the approrpriate return will be given to themm

 
by t ராஜு,madurai ,India    12-11-2009 07:27:38 IST
 கோவில்களில் நடக்கும் ஊழலுக்கு என்ன சான்று கொடுக்க போறீங்க? கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த கொள்ளை இன்னும் கண்டு பிடிக்கலை!!! அப்புறம் எதுக்கு இந்த ஐஎசோ சான்று? இதுல எவ்வளோ பாக்க போறீங்க? 
by வெங்கடேசன்,Chennai,India    12-11-2009 04:12:50 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்