Advertisement
அரசியல் செய்திகள்
தஞ்சை ரேஷன், பள்ளிகளில் துணை முதல்வர் திடீர் ஆய்வு
நவம்பர் 14,2009,00:00  IST

Latest indian and world political news information

தஞ்சாவூர் : ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகளில் துணை முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற துணை முதல்வர் ஸ்டாலின், எவ்வித அறிவிப்பும் இன்றி, திடீரென ஆய்வுக்கு புறப்பட்டார்.



தஞ்சை அடுத்த மாதாக்கோட்டை வங்கி ஊழியர் காலனியில் உள்ள ரேஷன் கடை ஆய்வின் போது, அங்கிருந்த மக்கள், "ரேஷனில் பச்சரிசி வழங்க வேண்டும்; மற்ற பொருட்கள் தரமாக கிடைக்கின்றன' என்றனர். "பச்சரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஸ்டாலின் உறுதியளித்தார். பின், மாதாக்கோட்டை தூய மைக்கேல் உயர் நிலைப் பள்ளி, துவக்கப்பள்ளி சென்ற அவர், அங்குள்ள குழந்தைகளிடம், "என்னை யார் என்று தெரியுமா?' என கேட்டதற்கு, "ஸ்டாலின், முதல்வர்' என குழந்தைகள் கூறினர். பள்ளி முதல்வர் லூயிஸ், "இப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர வேண்டும்; இங்குள்ள எட்டு ஆசிரியர்களை நிரந்தரம் செய்து கொடுக்க வேண்டும்; பள்ளி அங்கீகாரத்தை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிப்பதை மாற்றி, நிரந்தரமாக அங்கீகாரம் வழங்க வேண்டும்' என்றார். துணை முதல்வர், கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார்.



மாதாக்கோட்டை பாலர் பள்ளியின் ஆய்வில், "பாலர் பள்ளிக்கு போதுமான இடவசதி இல்லை; புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்' என, அவர்களின் கோரிக்கைக்கு, விரைவில் கட்டட வசதி செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். அவர் வருகையை அறிந்து கூடிய பொதுமக்களிடம் இருந்தும், கோரிக்கை மனுக்களைப் பெற்றார். திடீர் ஆய்வின் போது, மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், விஜயன் எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
  hurray , you are great.
we salute thee. I wish if all our ministers had the same guts. 
by Na Baskaran vethapuram,Dubai,India    14-11-2009 23:51:36 IST
 வாழ்த்துக்கள்,
அன்புடன்
கோபால் 
by P. Gopal,chennai,India    14-11-2009 19:23:06 IST
 
அரசு பள்ளிகளிலும் சோதனை நடத்துங்கள். அப்போதுதான் அங்குள்ள அவல நிலை தெரியும். 
by a அரசன்,chennai,India    14-11-2009 15:55:57 IST
 stalin sir next chefminister of tamilnadu.next 20 years.u are gentleman  
by mani arul,boonlay,Singapore    14-11-2009 12:13:16 IST
 சபாஷ்! தொடரட்டும் உங்கள் சமுதாய அக்கறை, 
by M Jumma Sait,Tamilnadu- Sivakasi,Maldives    14-11-2009 12:04:30 IST
 Good Job.

This kind of regular visit will result some sort of discipline with TN Govt staff.

Regards,
 
by T Ansari,UAE,United Arab Emirates    14-11-2009 10:03:38 IST
 இது உண்மையான திடீர் விசிட்டா இருந்தா பாராட்டப்பட வேண்டிய விஷயம். He has to more like that.... Appriciate
 
by Gan,USA,India    14-11-2009 07:45:11 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்