Advertisement
அரசியல் செய்திகள்
நிலச்சரிவு அபாய பகுதிகளில் வீடு கட்ட புவியியல் துறை ஒப்புதல் அவசியம் : அமைச்சர் ராஜா பேட்டி
நவம்பர் 22,2009,00:00  IST

Latest indian and world political news information

ஊட்டி :நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் புவியியல் துறையின் ஒப்புதல் பெற்ற பின்னரே வீடு கட்ட அனுமதியளிக்க, மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.நீலகிரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்ய, மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜா நேற்று வந்தார். கோத்தகிரி மடித்தொரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைப்பு பணி, கேத்தியில் வீடு இழந்தவர்களுக்கு கட்டப்பட்டு வரும் தற்காலிக வீடுகளை, அமைச்சர் ராஜா ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 41 பேருக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூவரின் பிரேத பரிசோதனை செய்யப்படாததால், உதவித் தொகை வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை 3,116 வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 2,689 குடும்பங்களுக்கு 53.78 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 750 குடும்பங்களைச் சேர்ந்த 1,971 பேர் ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் உள்ள 17 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அத்தியாவசியப் பொருட்கள் போதுமான இருப்பில் உள்ளது. தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கொண்டு வரப்படுகிறது.ஊட்டி - கோத்தகிரி சாலையில் மடித்தொரை பகுதியில் சீரமைப்புப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. நாளை முதல் இலகு ரக வானகங்கள் மற்றும் சுற்றுலா வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படும். இரு நாட்களுக்கு பின்னர் கன ரக போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். வேளாண் மற்றும் தோட்டக்கலை மற்றும் இதர இழப்புகள் 300 கோடி ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. நிவாரணப் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் கலெக்டர் தினமும் முதல்வருக்கு தகவல் கொடுத்து வருகின்றனர்.நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு நகர்ப் பகுதியில், ஹட்கோ மற்றும் நேரு நகர் புனரமைப்புத் திட்டத்தின் மூலமும், கிராமப்பகுதிகளில் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நிரந்திர வீடுகள் கட்டித் தரப்படும். அடிப்படை புனரமைப்பு வசதிகள் மற்றும் வீடு கட்டும் பணிகள் ஓராண்டிற்குள் போதுமான அளவில் தீர்க்க பூர்வாங்க திட்டம், மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.ஹட்கோ தலைவர் மற்றும் செயல் அலுவலர் இது குறித்து ஆலோசிக்க, ஓரிரு நாட்களில் டில்லியில் இருந்து வருகிறார்.தேசிய நெடுஞ்சாலை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 15 நாட்களில், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துவங்கும்.நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் புவியியல் துறையின் ஒப்புதல் பெற்ற பின்னரே, வீடு கட்ட அனுமதியளிக்க மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் ராஜா கூறினார்.குன்னூர் வழியாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மரப்பாலம், குறும்பாடி, பர்லியாறு ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார். கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் ஆனந்த் பாட்டீல், முன்னாள் அரசு கொறடா முபாரக் உட்பட பலர் உடனிருந்தனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 நீலகிரியின் மண் சரிவிற்கு, ஆளாளிற்கு ஒரு புது பேது அர்த்தத்தை, ப்வியியல் வல்லுனர்கள், அமைச்சர்கள், அதிகரிகள், என்று நாளொரு காட்சி பொழுதொரு வண்ணம் என்று கூறி கொண்டிருக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளாகவே நீலகிரியின், மண் சரிவு என்பது ஒரு இயற்கை நிகழ்வாகவே நடுந்துகொண்டு தான் இருக்கிறது.
ஒருவர் மரத்தை வெட்டியதால் தான் இந்த அவலம் என்று கூறுகிறார்.
ஆனால் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் பெரும்பாலும் மிக பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன.
ஒரு உண்மையை இங்கு நாம் கூர்ந்து பார்க்க வேண்டும்.
நூற்றாண்டுகளாக அங்கு வாழும், மண்ணின் மைந்தர்களான படகர், தோடர், கோத்தர், இருளர், பணியர், குறும்பர் போன்ற ஆதிவாசிகள் குடியிருந்த ஆயிர கணக்கான கிராமங்களில் பெருமளவு நிலச்சரிவுகள் நடந்திருந்தாலும், அவர்கள் குடியிருந்த வீடுகளுக்கோ, உயிர்களுக்கோ பெரிய அளவு சேதம் ஏற்படவில்லை என்பதை பார்க்க வேண்டும்.
ஏன் என்றால், இந்த makkalin ancients located the right places to construct thier houses, not distructing the nature.
The British people themselves consulted the Badaga People to select their house sites when they started constructing houses th them.
But our Politicians created a number of colonies for the migrated people, mostly came from the planes of Tamil Naadu, Andra Pradesh, and Karnaataka, in mind of their bulk votes.
Most of this people are very poor and innocent, and believed the politicians.
Local Politicians mostly among the mgrated people pressurise their political bosses to capture vacent lands, like puramboke, and revenue landas, and even to aquire the lands of the nilgiri residents.
Almost all these kind of lands are situated in Unsuitable places for construct houses.
Now you can see most of the areas affected in this land slides are among these colonies only. 
by N Bellie,Coimbatore,India    22-11-2009 15:38:03 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்