Advertisement
அரசியல் செய்திகள்
கூவம் உட்பட நதிகளை சீரமைக்க சென்னை நதிநீர் ஆணையம் அமைப்பு
டிசம்பர் 04,2009,00:00  IST

Latest indian and world political news information

சென்னை: சென்னையில் கூவம் மற்றும் இதர நதிகளை சீரமைக்க,  துணை முதல்வர் தலைமையில், "சென்னை நதிநீர் ஆணையம்' என்ற அமைப்பை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கூவம் ஆற்றை சீரமைத் தல், வானூர்தி தொழிற் பூங்கா மற்றும் நிதி நகரம் ஏற்படுத்துதல் ஆகியவை தொடர்பாக, துணை முதல் வர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் சிங்கப்பூர் சென்றிருந்தனர்.சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை குறித்த விவரங் களை, முதல்வர் கருணாநிதியிடம் துணை முதல்வர் ஸ்டாலின் விளக்கினார். கூவம் நதியின் இன்றைய நிலைக்குக் காரணமான பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்னைகள், அவற் றை எவ்வாறு களைவது, சிங்கப்பூர் நதியைப் போல கூவத்தை மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகள் பற்றி துணை முதல்வர் விளக்கினார். கூவம் உற்பத்தியாகும் இடமான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் ஏரியில் இருந்து அது கடலில் கலக்கும் இடம் வரை மொத்தம் 65 கி.மீ., நீளத்துக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றியும், முதல்வரிடம் துணை முதல்வர் விளக்கினார்.கூவம் மற்றும் சென்னையில் உள்ள மற்ற நதிகளின் சீரமைப்புத் திட்டங்களை செயல்படுத்த, முதல் கட்டமாக, "சென்னை நதிநீர் ஆணையம்' என்ற தனி அமைப்பை, துணை முதல் வர் தலைமையில் ஏற் படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த அமைப்பில் குடிசை மாற்று வாரிய அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர், தலைமைச் செயலர் மற்றும் சம்பந்தப் பட்ட  துறைகளின் செயலர்கள் உறுப்பினர்களாக இருப்பர். உடனே சீரமைப் புப் பணிகளை துவக்க முதல்வர் உத்தரவிட்டார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 முதலில் சுத்தமாக இருக்கும்படி மக்களிடம் பிரசாரம் செய்யவும் பொது இடத்தில் அசுத்தம் செய்யும் மக்களிடம் அதிக அபராதம் வசூலிக்கவும்  
by R Omkar,Hamilton,Canada    04-12-2009 21:29:31 IST
 மிஸ்டர் முதலமைச்சர் அவர்கள முதலில் ஒரு வேலை சாப்படிற்கே வழி இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு மக்கள் வரி பணத்தை செலவு பண்ணுங்கள் அதன் பிறகு கூவத்தை சரி பண்ணுங்கள். சென்னை மக்கள் மட்டும் மனிதர்கள் அல்ல. கிராமத்தில் உள்ளவர்கல்லும் மனிதர்கேள்ளே. காமராஜர் காலத்தில் கட்டிய பெரிய DAM பின்பு பெரிய DAM எதுவும் கட்டப்படவில்லை வெட்கபடவேண்டிய விசயம். Dont waste our poor people money.  
by s michael,coimbatore,India    04-12-2009 16:09:48 IST
 It is really a good move hope things should move well instead of using this as another platform to make money.If implemented its going to transform chennai to one of the best cities in the world.It would ease chennai''s traffice problem.Logistics movement will increase and will become easy.If you see Dubai creek,they are digging and making the way for water transportation. 
by KE பாலாஜி,CHENNAI,India    04-12-2009 15:53:09 IST
 We will be thankfull if govt. takes steps to clean Noyal river also..... 
by Tirupurvasi,Tirupur,India    04-12-2009 15:41:31 IST
 coovam water can be treated after that can be used for all our chennai garden.. so, that city will be green also.. we can built new Chennai and green city.. if you go and see in Middle east country... They re use sweage water... Pls don''t sent to sea water..  
by Babu கஜேந்திர ,Qatar,India    04-12-2009 15:28:00 IST
 சேது சமுத்திரம் திட்டத்தில் கோடி கோடியாய் மக்கள் பணத்தை வாரி கடலில் கொட்டி கொள்ளை அடிச்சாச்சு....அடுத்து பணத்தை சாக்கடையில் கொட்ட ஏற்பாடு நடக்கிறது. நமக்கு தேவை Results...we had seen enough Plans. already. 
by MK Soorya,Singapore,Singapore    04-12-2009 13:31:38 IST
 எப்போதும் நம்பிக்கைதான் வாழ்க்கை. நல்லது பிறக்கும் என்று நம்புவோமாக !  
by c sankarakumar,mumbai,India    04-12-2009 12:44:31 IST
 அய்யோ !!! என்னா பொறுப்பு !!! மானக்கெட்ட பயலுக, திருடுரதுக்கு இது ஒரு புது திட்டம். தமிழ்நாட்டுக்கு தி மு க ஒரு சாபக்கேடு. Kuvam அப்பிடிதான் இருக்க போவுது.  
by M.S. Adebban,KL,Malaysia    04-12-2009 11:37:29 IST
 அதுக்குள்ளையும் 3௦௦௦ கோடி சேது திட்டம் பணம் செரித்து விட்டதா .  
by KR RAKKAPPAN,MUSCAT,India    04-12-2009 11:14:38 IST
 சும்மா இருக்கற ஆற வெட்டியா தோண்டி பணத்த செலவு பண்ணு (சுருட்டு) வாங்க. அடுத்த மழைக்கு அது பழைய மாதிரி ஆயிடும். அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சி இதையே செய்வாங்க. எல்லாம் பணத்துக்காக தான்.  
by கார்த்திக்,Texas,United States    04-12-2009 11:10:20 IST
 இதில் கொள்ளை அடி. அதுக்கு தானே நீ சிங்கப்பூர் போன. 
by mr விஜய்,chennai,India    04-12-2009 10:34:57 IST
 Basic amenities such as water, electiricity are inadequate in several areas in Tamilnadu. Priority should be given to them rather than spending crores of rupees to Chennai alone. 
by P Raja,Chennai,India    04-12-2009 09:06:02 IST
 சென்னைக்கு முதலில் தேவை ''''கழிவு நீர் வடிகால் வாரியம்'''' தமிழில் கூவம் என்றாலே துர்நாற்றம் என்ற சொல் வழக்கில் உள்ளது. கூவத்தின் 65 கிலோமீட்டர் தூரமும் சாக்கடை நீர் கலப்பதாலேயே இப்பிரச்சனை. முதலில் அதை தடுத்து பின் கூவத்தில் படகு விடலாம். துணை முதல்வரவர்கள் திட்டத்தை மக்களுக்கும் சிறிது விளக்கலாம். முன்பு 70 பதுகளில் கூவத்தில் கட்டிய படித்துரையிலேயே இன்னும் சென்னை பொதுஜனம் படகுக்காக காத்திருகிறது. இனி சிங்கபுரிளிருந்து கப்பல் வரப்போகிறது, இனி கூவத்தில் போக்குவரத்துக்கு நெரிசல் தான்.  
by திரு ஜெய்,கனடா,Canada    04-12-2009 06:35:16 IST
 In 1972,MK had executed ''''COOVAM MANKKIRATHU THITTAM''''.Lot of money spent & CROCODILE came on shore with CORRUPTION.MK thinks people might have thrown away old newspapers.Pl see Thuglak issues of 1972-74 & meet CHO.Earlier Father and now Son,will get benefits.BUT COOVAM WILL REMAIN SAME,forever.  
by R Karuppiah Sathiyaseelan,Kinshasha,Congo (Zaire)    04-12-2009 04:25:46 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்