Advertisement
அரசியல் செய்திகள்
தமிழக இன்ஜினியர்கள் பார்வை கேரள அரசு கடும் கண்டனம்
டிசம்பர் 11,2009,00:00  IST

Latest indian and world political news information

திருவனந்தபுரம்: தமிழக பொறியாளர்கள் சிலரும், ஆறு பேர் அடங்கிய மத்திய குழுவும், முல்லைப் பெரியாறு அணைக்கு விஜயம் செய்ததற்கு கேரள அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் கூறியதாவது: தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆறு பேரும், தமிழக அரசின் பொறியாளர்கள் சிலரும் எங்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல், முல்லைப் பெரியாறு அணைக்கு விஜயம் செய்துள்ளனர். மத்திய குழுவினரோ அல்லது தமிழக பொறியாளர்களோ, முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்வதை கேரள அரசு எதிர்க்கவில்லை. ஆனால், எங்களுக்கு அது பற்றி தகவல் தெரிவிக்காததே கவலை அளிப்பதாக உள்ளது."நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை கண்காணிப்பதன் ஒரு பகுதியாகவே, முல்லைப் பெரியாறு அணைக்கு விஜயம் செய்தோம்; வேறு எந்த விஷயமும் இல்லை' என, அங்கு பணியில் இருந்த கேரள அதிகாரிகளிடம் தமிழக குழுவினர் தெரிவித்துள்ளனர். இது, பாதுகாப்பு விவகாரம் தொடர்பான விஜயம் என்றால், அது பற்றி கேரள மாநில அரசின் உள்துறைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டியது அவசியம். முல்லைப் பெரியாறு அணை 113 ஆண்டுகள் பழமையானது. அந்த அணை பாதுகாப்பற்றதாக உள்ளதால், புதிய அணை கட்ட வேண்டுமென நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்த விஷயத்தை சுப்ரீம் கோர்ட்டிலும் தெரிவித்துள்ளோம். இவ்வாறு பிரேமசந்திரன் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 மாண்புமிகு கேரள மந்திரி அவர்களே, வழக்கு முடியும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் அணையின் பராமரிப்பு பணிகளை தமிழக அரசே மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றமே இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. அல்லாமல் தமிழக குழுவினருடன் வந்தவர்கள் மத்திய அரசு அதிகாரிகள். பின்பு ஏன் இதை எதிர்க்க வேண்டும். இப்படி தண்ணீருக்காக நாம் அடித்து கொண்டால் இந்தியாவிற்குள் காலனி ஆதிக்கம் தலை தூக்கும் நாள் வெகு தொலைவில் இருக்காது. முடியாட்சிக்கும் குடியாட்சிக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்  
by s ராஜதுரை கலாம் ,chennai,India    11-12-2009 15:42:35 IST
 These Kanju vellam’s to be screwed by Tit for Tat policy only.Thís dam is under tamil nadu state control,These kanju vellam stupid''s entering into dam site without our knowledge ,now he is talking some bullshit.
These stupid’s depends on other states for employment and other basic requirements (Food, Shelter and Clothes) .But buttering others to any extend and getting benefited.
These Kanju vellums should be thrown out from everywhere. Then only they will realise their situation.
 
by K KUMAR,Thenkasi,India    11-12-2009 12:06:46 IST
 இந்த கேரளா அரசியல் வாதிகளுக்கு இதே வேலை. முல்லை பெரியார் உற்பத்தியாகும் இடம் தமிழ்நாட்டில் உள்ளது. எனவே தமிழகஅரசு உடனடியாக இதில் தலையிட்டு பெரியார் இரு மாநிலங்களுக்கும் பொதுவான அணை என்று அறிவிக்க செய்ய vaendum 
by M jegadeesan,cumbum,India    11-12-2009 08:40:11 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்