Advertisement
அரசியல் செய்திகள்
மீன்பிடி சட்டத்தை எதிர்த்து டில்லியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
டிசம்பர் 19,2009,00:00  IST

Latest indian and world political news information

புதுடில்லி : ""கடல் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மைச் சட்டத்தை கொண்டு வரப்போவது, தி.மு.க.,வுக்கு தெரியும். மீனவர்களின் முதுகில் குத்தும் என தெரிந்தும், இந்த சட்ட மசோதா குறித்து மத்திய அமைச்சரவையில் நடைபெற்ற ஆலோசனையின்போதே இதை எதிர்க்காததது ஏன் என்பது குறித்து, நாட்டு மக்களுக்கு தி.மு.க., விளக்கம் அளித்திட வேண்டும்,'' என்று, அ.தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது.மத்திய அரசு சார்பில், கடல்மீன் தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம் கொண்டு வரப் படுவதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் டில்லியில் நேற்று பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பார்லிமென்ட் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினால், அந்த பகுதியின் போக்குவரத்து முடங்கியது. தமிழகத்தில் இருந்து 28 நாட்டுப் படகு மீனவர்கள் சங்க அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: கச்சத்தீவை தாரை வார்த்ததால் ஏற்கனவே மீனவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். இந்த ஆண்டு மட்டும் ஆயிரம் மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். எப்போதுமே ஒரு சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன், அதன் சட்ட மசோதா குறித்த ஆலோசனை அமைச்சரவை கூட்டத்தில் நடக்கும். அந்த வகையில் இந்த சட்ட மசோதா குறித்தும் அமைச்சரவையில் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும்.அரசில் தி.மு.க.,வும் ஒரு அங்கம். தி.மு.க., மவுனமாக வாயை மூடிக் கொண்டிருந்ததா? இது மீனவர்களின் முதுகில் குத்தும் சட்டம் என்பதை அறிந்து அமைச்சரவை ஆலோசனையின்போதே இந்த சட்டத்தை தி.மு.க., எதிர்க்காதது ஏன்? இதுகுறித்த விளக்கத்தை, நாட்டு மக்களுக்கு தி.மு.க., விளக்க வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.அ.தி.மு.க.,வின் மீனவர் அணியைச் சேர்ந்த கலைமணி பேசும்போது, "பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானியவிலையில் 16 ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. ஆனால், ஏழை மீனவர்களுக்கு ஒரு லிட்டர் டீசலை ரூ.30க்கு அரசு வழங்குகிறது. இந்த பாரபட்சத்தை நாங்கள் கண்டிக்கிறோம்,' என்றார்.ராஜ்யசபா அ.தி.மு.க., தலைவர் மைத்ரேயன் பேசும்போது, "12 கடல் மைலை கடந்து போய் மீன் பிடித்தால், ஒன்பது லட்சம் ரூபாய் அபராதம். மூன்று ஆண்டு சிறை தண்டனை என்று, எந்த நாட்டிலாவது சட்டம் உள்ளதா? சோனியாவும், கருணாநிதியும் மீனவ மக்களின் வாழ்வுரிமையை பறிக்க உருவாக்குகிற செயற்கை சுனாமிதான் இந்த சட்டம். இதை அ.தி.மு.க., எதிர்க்கும். 10 ஆயிரத்துக்கு மேல் மீன்பிடிக்கக் கூடாதாம். இதை யார் மதிப்பிடுவார்கள். மீனவர்களின் வாழ்க்கை பற்றி கவலைப்படாமல் கச்சத்தீவை தாரை வார்த்தது போன்ற தவறை மீண்டும் நடக்கவிட மாட்டோம். இந்த சட்டத்தினால் மீனவர்கள் துன்புறுத்தப்படவே அதிக வாய்ப்பு. எனவே இந்த சட்டத்தை இப்போது மட்டுமல்ல, எந்த காலத்திலும் நிறைவேற்றிட விட மாட்டோம்' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 இந்திய அரசாங்கம் முட்டாள்களையும் கொலைகாரர்களையும் கொண்டு ஆளப்படுகிற ஒரு அரசாங்கம். அம்பது சதவீதம் அமைச்சர்கள் கொலை மற்றும் குற்ற பின்னணி உடையவர்கள். இதில் இம்மாதிரி முட்டாள்தனமான சட்டம் வருவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. மக்கள் இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும். அணைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும். நாளைக்கு விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் மீனவர்கள் குரல் கொடுக்கும் வகையில் அவர்களும் மீனவர்களின் பிரசினைகளுக்கும் உயிர் உரிமை பறிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தொழில் அதிபர்களுக்கு மட்டுமே சப்போர்ட் பண்ணும் மாநில மத்திய அரசாங்கங்களுக்கு மக்கள் ஒற்றுமையாக இருந்து தங்களை தற்காத்து கொள்வதோடு தங்களுக்கு நல்லது மட்டுமே செய்யும் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். பணத்தையும், இலவசங்களையும் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். 
by c samy,chennai,India    19-12-2009 08:50:14 IST
 இது ஒரு டுபாகூர் போராட்டம்.. .. மக்களிடம் நம்பிக்கை இழந்து விட்டீர்கள் .. 
by d திலிப் ,chennai,India    19-12-2009 07:48:00 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்