Advertisement
அரசியல் செய்திகள்
காங்., உறுப்பினர் சேர்க்கை தேனியில் புதிய 'டெக்னிக்'
டிசம்பர் 20,2009,00:00  IST

Latest indian and world political news information

தேனி:உறுப்பினர்களை சேர்க்க புதிய "டெக்னிக்'கை காங்., கட்சியினர் பயன்படுத்தி வருகின்றனர்.தேனி மாவட்டத்தில் 1 லட்சம் பேரை உறுப்பினர் களாக சேர்க்கும் பணியில் மாவட்ட காங்., கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களில் போட்டோகிராபருடன் வீடு வீடாக சென்று போட்டோ எடுத்து வருகின்றனர். "எதற்காக போட்டோ எடுக்கிறீர்கள்' என கேட்பவர்களிடம், "உங்களுக்கு இலவச மனை பட்டா, வங்கி கடன் கிடைக்கும். அதற்காகத்தான் போட்டோ எடுக்கிறோம்' என கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.



விபரம் தெரிந்தவர்களிடம் "உறுப்பினர் சேர்க்கிறோம். உறுப்பினர் அடையாள அட்டை பெற்றால் பல உதவிகளை வழங்குவோம்' என கூறுகின்றனர். தேனி அல்லிநகரம் பங்களாமேடு பகுதியில் நேற்று காலை காங்., கட்சியினர், பலரிடம், "நலத் திட்ட உதவி' எனக்கூறி போட்டோ எடுத்தனர். உஷார் அடைந்த மற்ற கட்சியினர், இதெல்லாம் ஏமாற்று வேலை என மக்களிடம் விளக்கி வருகின்றனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்