Advertisement
அரசியல் செய்திகள்
வன்னியர்கள் ஓட்டுப்போட்டால் 120 தொகுதிகளில் பாமக வெற்றி : ராமதாஸ் ஆரூடம்
டிசம்பர் 30,2009,00:00  IST

ஜெயங்கொண்டம் : வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் பாமக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டும், சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி வலியுறுத்தியும் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வன்னியர் சங்க மாநாடு நேற்று(29ம்தேதி) ஜெயங்கொண்டத்தில் நடந்தது. மாநாட்டிற்கு பாமக மாவட்ட செயலாளர் வைத்தி தலைமை வகித்தார். செந்தில்குமார், ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐகோர்ட் வக்கீல்பாலு, வன்னியர் சங்க தலைவர் குரு மற்றும் பலர் பேசினர். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது,ஜெயங்கொண்டம் மின் திட்டத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன் நிலம் கையகப்படுத்தியும் இதுவரை திட்டம்தொடங்கப்படவில்லை.கையகப்படுத்திய நிலத்திற்கு ஒரு ஏககருக்கு ரூ.25 ஆயிரம் மட்டும் அரசு விலை வழங்கியது கண்டிக்கதக்கது. இங்கு நிலக்கரி எடுக்க வேண்டும்என்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் . இல்லாவிட்�டால் நிலக்கரிஎடுக்க அனுமதிக்க மாட்டோம். அதற்காக எந்தபோராட்டத்தையும் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் உள்ள 6 கோடிபேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றிபெற்ற ஆட்சியை பிடித்துவிடலாம். இதற்கு அனைத்து வன்னியர்களும் ஒன்று சேர வேண்டும். ஐகோர்ட் நீதிபதிகள் 60 பேரில் ஒருவர் மட்டும் தான் வன்னியர் உள்ளார். இதே போல அரசு செயலாளர்கள் 36 பேரில் ஒருவர் மட்டும்தான் வன்னியர் உள்ளார்.இந்நிலையை போக்க வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும். 1987ல் போராட்டம் நடத்தி மற்ற சாதிகளுடன் இணைந்து 20 சதவீத இடஒதுக்கீட பெற்றோம்.ஆனால் அதில் 7 சதவீதம் கூட நமக்கு பலன் கிடைக்கவில்லை. வன்னியர்களுக்கு என தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அறவழியில் போராட்டம் நடத்தி சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும். சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும். நான்கூட 6 மாதம் சிறைக்குசெல்ல தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அரியலூர்,பெரம்பலூர் மாவட்டம் சார்பில் கல்வி வளர்ச்சி நிதியாக ரூ.10 லட்சம் ராமதாசிடம் வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 அருமையான Comedy 
by H ஹர்ஷினி,US,India    31-12-2009 06:01:30 IST
 selfish(suya nalam) 
by vs ragothaman,sholinhur,India    30-12-2009 23:55:09 IST
 அன்பு வாசகர்களுக்கு, நான் கமெண்ட்ஸ் எழுத நினைத்தேன். ஆனால் இவருக்கு போய் கமெண்ட்ஸ் எழுதி டைம் வேஸ்ட் செய்ய மனம் வர வில்லை  
by Jayan Jayan,Kanayakumari ,India    30-12-2009 23:24:21 IST
 Hi Ramdas

Because of ''''no respect'''' to Vannier. Pls don''''t use vannier name any more in ur life. U r running family politics, please retitre from politics. Thx. King 
by T. Raja,UAE,India    30-12-2009 20:12:28 IST
 Dear Dinamalar,

Do you an idea of publishing Dr Ramadoss''''s interview, his political stunts etc., I hope it would break Tamilnadu''''s sales records if you give free his jokes as an annexure.
 
by R Balachandran,Kuala Lumpur,Malaysia    30-12-2009 17:40:52 IST
 Mr.Ram das ''ஒற்றுமையை மனிதநேயத்தில் காட்டுங்கள் சமுதாய உணர்வுகளை அரசியலாக்க வேண்டாம்''  
by jas jas,Dubai,India    30-12-2009 16:30:37 IST
 Ramadoss may be intelligent but vaniars are not fool.Now his day dreaming will not succeed. 
by G Johnson,Abu Dhabi,United Arab Emirates    30-12-2009 15:29:03 IST
 தினமலர் வாசகர்களின் கருத்துக்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல நச்சென்று இருக்கின்றது. யார் படித்தாலும் படிக்காவிட்டாலும் இராமதாஸீம் அவரின் தொண்டரடிப் பொடிகளும் இதைப் படிக்க வேண்டும்.  
by TM Ravi,Madurai,India    30-12-2009 15:21:08 IST
 one of vanniar leader in 70''s told that vanniar votes not for others, then others told our vote not for vanniars, donot use old slogan,think postively,and if harijans vote for harijans,they will win in all seats 
by l.s mohandoss,ambur,vellor,India    30-12-2009 15:07:27 IST
 அய்யா இந்த அணைத்து வாசகர் விமச்சனங்களையும் அய்யாக்கு (ராமதாஸ்) அனுப்புங்க. இதையெல்லாம் படிச்சாவது அவரு திருந்தட்டும்.  
by c குமரேசன்,salem,India    30-12-2009 14:55:13 IST
  hello ramadas!!! unglauku vera velaiye illaya! tamilnaduku urupadiya ethuvachalum panna paarunga 
by K RAJAIAH,rajapalayam,India    30-12-2009 14:40:21 IST
 ஹலோ தேவன், வன்னியர் சம்பத்தப்பட்ட நிகழ்ச்சி யா ......அப்போ எதுக்கு அந்த ஆளு பப்ளிக்ல பேசணும். அவரு காமராஜர் ஆட்சி அமைப்பாராம் ..காமராஜர் கடவுள். ராமதாஸ். காமெடி. இப்பவே கண்ண கேட்டுதே ... 
by S arjun,tirunelveli,India    30-12-2009 14:39:22 IST
 ''''சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும். சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும். நான்கூட 6 மாதம் சிறைக்குசெல்ல தயாராக உள்ளேன்.'''' நல்ல காமெடி அய்யா! உங்களுக்கு பத்து தலைமுறைக்கு சொத்து இருக்கு. ஆறு மாசம் இல்ல ஆறு வருஷம் கூட உள்ள இருங்க. எங்களை விடுங்க சாமி!!!  
by n dev,chennai,India    30-12-2009 14:28:43 IST
 தனியாக ஒன்னு வந்தால் போதாதா?  
by a அரசன்,chennai,India    30-12-2009 14:03:24 IST
 but ungaa nermai enaku pudichiruku...... 
by b mukthar,chester,United Kingdom    30-12-2009 13:44:40 IST
 இந்த ஜாதி வெறியன் ராமதாஸ் தொல்லை தங்க முடியல. இவரை ஆறு மாதம் இல்லை அறுபது மாதமாவது சிறையில் தள்ள வேண்டும்.  
by s. மதன் kumar,kumasi,Ghana    30-12-2009 13:36:22 IST
 அது என்ன ஆறு மாதம் மட்டும் கணக்கு ? ஏழு மாதம் என்றால் சிறைக்குச் செல்ல மாட்டேன் என்று சொல்லுவார் போல் உள்ளதே ? 
by R தினேஷ்,Chennai,India    30-12-2009 13:29:37 IST
 இதுவெல்லம் ஒரு பொழப்பு.  
by p Venkatesan,singapore,India    30-12-2009 13:07:36 IST
 ஐயா ராமதாஸ் உங்களுக்கு வேறு வேலையே இல்லையா. நீரும் ஒரு குட்டி கருணாநிதி தான். குடும்பதிலுள்ளவர்களுக்கே எல்லா பதவியும் வேண்டும். பிறகு ஏன்யா ஜாதியை கூப்பிடுகின்றீர். போய் பழைய தொழிலை மகனுடன் சேர்த்து பாருமையா  
by S AJAY,KKDIST,India    30-12-2009 12:59:01 IST
 மொத்தம் 120 வோட்டுக்கள் கிடைக்கும் கண்டிப்பாக! 
by V ராம்,Chn,India    30-12-2009 12:10:48 IST
 ஐயோ..ஐயோ.. இவர் தொல்லை பெரிய தொல்லையா இருக்கு.. . வன்னியர்கள் ஓட்டுப்போட்டால் 120 தொகுதிகளில் பாமக வெற்றி பெரும் என நீ நினைத்தால்,(பகல் கனவு) பேசமால் தமிழ்நாட்டை பிரிக்கவேனும் அல்லது தனி நாடு வேணும் என உண்ணாவிரதம் இருந்து தொலை..கோபாலபுரதுக்கும் போயஸ் கார்டனுக்கும் ..காவல் இருந்த நீ இப்போ மீண்டும் வன்னியர் முதுகில் சவாரி செய்ய வந்து உள்ளாய். உன்னால் வெட்டி தள்ளிய மரங்கள் நிறைய இப்போ மரத்துக்கு மரம் தாவ மரமே இல்லை போலும் ..என்ன ஜென்மமோ நீ ..உன் சுய நலத்துக்கு ஜாதிகளை தூண்டி விட்டு அதில் குளிர் காய நினைக்க வேணாம். உன் பருப்பு இப்போ வேகாது..ஒடி போ விஜ்யகாந்த் கட்சிக்கு..அந்த ஒரு கட்சி தான் இப்போ உனக்கு..  
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    30-12-2009 12:03:17 IST
 மணிகண்டன் நீ மனித ஜாதி மட்டுமே, ஒற்றுமையை மனிதநேயத்தில் காட்டுங்கள் சமுதாய உணர்வுகளை அரசியலாக்க வேண்டாம்.... 
by G SURESH,Chennai,India    30-12-2009 12:01:52 IST
 ராமதாசு பச்சோந்தியாக இருக்கிறார் என்பது நாடு அறிந்த விஷயம். கலைஞரிடம் சில நாள், அம்மா விடம் சில நாள் என தன் சுய லாபத்திற்காக ஜாதி வெறி பிடித்து அரசியல் நடத்துகிறார். தமிழகத்தில் முதல் இடத்தில ராமதாசும் இரண்டாம் இடத்தில வைகோ வும் தமிழகத்தில் கோமாளியான அரசியலில் ஈடுபடுகிறார்கள். மக்கள் இப்பேற்பட்ட அரசியலை நம்ப மாட்டார்கள். சிறிது காலமே தோன்றிய விஜயகாந்த் கட்சியே மேல். யாருடனும் கூட்டு இல்லாமல் தன்னிச்சியாக நிற்கிறார். இந்த தைரியம் கூட ராமதாசுக்கு கிடையாது. எமாற்றகார ராமதாசு என்பது ஊரரிஞ்ச விஷயம். இனியாவது புரிந்து நடக்க வேண்டும் ராமதாசு அவர்கள் . 
by R. Sivakumar,Tirupur,India    30-12-2009 11:59:20 IST
 விஜயகாந்து கிட்ட சொல்லி உன்ன வெச்சு ஒரு படம் எடுக்க சொல்லணும், அப்ப தான் நீ அடங்குவ. 
by s குமாரசாமி,bangalore,India    30-12-2009 11:53:29 IST
 குட் comedy 
by e maheshkumar,tirupur,India    30-12-2009 11:49:33 IST
 ஜாதி பேர சொல்லி அரசியல் பண்ற நீ எல்லாம் ஒரு ஆள். உண்ணல்லாம் ஜெயில்லதான் போடணும். அப்பதான் தமிழ்நாடு உருப்படும்  
by K Anandavel,Mombasa,Kenya    30-12-2009 11:49:20 IST
 
Tamil Nadu Janangala வச்சு ஒன்னும் காமெடி keemadi பண்ணலியே.. Unga கனவு பலிக்கும் - Aana palikkathu. Tamazhiga மக்களை தயவு செய்து Jadhi endru pesi pirikkadeenga. OK -  
by R VV,Abudhabi,United Arab Emirates    30-12-2009 11:28:45 IST
 tamil nadu goverment to take action against him on goonda act because he is speaking words which will create law and order problem  
by s Baskar,palakkad,India    30-12-2009 11:21:18 IST
 மது விலக்கை அமல்படுத்த கடுமையாக போராடும் ராமதாஸ், சொந்த வாழ்க்கையில் கடை பிடிக்கிறாரா?.... ம் . பென்னாகரத்திலும் வைக்க போறங்க ஆப்பு.... அதுக்கப்புறம். என்னென்ன பேசப்போறரா ??  
by M SYED ABDAHEER,dubai,United Arab Emirates    30-12-2009 11:15:30 IST
 இந்த மாதிரி ஜாதியையும், மதத்தையும் வைத்து மக்களை பிரித்து அந்த தீயில் குளிர் காயும் அரசியல்வாதிகளை மக்கள் இனம் கண்டு அடியோடு ஒழிக்கவில்லை என்றால் இழப்பு மக்களுக்குத்தான். இவர்கள் வெட்கம், மானம் ஏதுமில்லாமல் எந்த கட்சிக்கும், எந்த இடத்திலும் கையேந்தி நிற்பார்கள். மக்களே தயவு செய்து ஒற்றுமையாக இருப்போம்.

''ஜாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையில், மேதினியில் இற்றார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி''.

இதுக்கு அர்த்தம் என்ன என்பது இவன் போன்ற அரசியல்வாதிகளுக்கு தெரியுமா என்பது கேள்விகுறி?.

எனக்கு தெரிந்து வீர வன்னிய மகாராஜா பரம்பரையில் வந்த வன்னி குல மக்கள் அனைவரும் நல்லாதான் இருக்கிறார்கள். இவன் எந்த ஜாதி என்று முதலில் சொல்லட்டும். இவனுக்கு மட்டும் ஏன் இந்த பிரித்தாளும் முயற்சி என்று அனைவருக்கும் தெரியும்.

எங்கு எங்கு திரும்பினும், இவன் போன்ற அரசியல் வியாபாரம் நடத்தும் அனைவருக்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும். 
by v கார்தீசன்,chennai,India    30-12-2009 10:53:46 IST
 ஓகே வெரி குட் வெரி குட், எல்லா சாதிக்காரங்களும் எல்லா தொகுதிக்கும் வேட்பாளர ரெடி பண்ணுங்க,இனிமேல் அவங்க அவங்க ஜாதி வேட்பாளருக்கு மட்டும் வோட்டு போடுங்க,விளங்கிடும் தமிழ்நாடு. 
by P ரவிச்சந்திரன்,GOA,India    30-12-2009 10:43:45 IST
 ராமதாசை அடக்கணும்னா அவர் பையனுக்கு (அன்புமணி) நிரந்தரமா மத்திய அரசின் மந்திரி பதவி கொடுத்திடனும். அதற்கு காங்கிரசும், பிஜேபியும் ஒத்துகிடனும். நம் தமிழ் மக்களும், தமிழ் நாடும் ஒற்றுமையாக வாழும். இல்லையேல் ராமதாஸ் நம்மை நிம்மதியாக வாழ விடமாட்டார். சாலை ஓர மரங்களை அழிப்பார்.  
by A அர்ஷத்,Riyadh,Saudi Arabia    30-12-2009 10:41:45 IST
 dear all please ignore his rubbish words he just want to become like Pal Thakkare, but this is not mumbai this tamil nadu, dont under estimate with tamilians, they are not foolish to follow your words , we want a peace life not like yours arrogant life, once again ignore him ignore him, 
by a Shah,vellore,India    30-12-2009 10:29:24 IST
 ஜாதி வெறியன் ராமதாசை தமிழ் நாட்டை விட்டு ஓட ஓட விரட்ட வேண்டும் . பதவி வெறி பிடிச்சி என்ன பேசுறோம் என்று தெரியாமல் பிதட்டுகிறார்.  
by P Siddharthan,Doha,Qatar    30-12-2009 10:17:45 IST
 தினமலர் வாசகர்களின் கருத்துக்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல நச்சென்று இருக்கின்றது. யார் படித்தாலும் படிக்காவிட்டாலும் இராமதாஸீம் அவரின் தொண்டரடிப் பொடிகளும் இதைப் படிக்க வேண்டும். 
by mr kazeeb,ipoh,Malaysia    30-12-2009 10:16:53 IST
 ATENGAPPA PAVAM TAMILNADU VANNIYERGAL 
by D ARULDURAIRAJ,SINGAPORE,Singapore    30-12-2009 10:06:50 IST
 அய்யா தினமலர் ஆசிரியரே,
இந்த ராமதாசின் செய்திகளை தினமலர் இணையத்தளத்தில் ''சிறப்பு பகுதி'' இல் வரும் ''ஜோக்ஸ்'' பக்கத்தில் போடவும்.
நாங்கள் ''ஜோக்ஸ்'' படிக்கும்போது சேர்த்து படித்துகொள்கிறோம்.
ரசனை மிக்க (குசும்புக்கார) வாசகர்கள் தினமலருக்கு மட்டுமே உள்ளார்கள்.
ராமதாஸ் என்ற வார்த்தை பார்த்தாலே சிரித்துகொண்டே கருத்து எழுத தொடங்கிவிடுகிறார்கள்.
 
by A ஜீவா ,Maldives,India    30-12-2009 10:06:28 IST
 Crazy Ramadas. How could peoples accepeted him as a party leader? As a leader you should say all are Indian Tamilan not by cost or religion. Amma gave you a good lesson. 
by M Mohan,Chennai,India    30-12-2009 09:59:38 IST
 இந்து மதத்தில் எத்தனை சாதிகள்? மதம் மாறிய பின்னும் தங்கள் ஒரிஜினல் சாதி பெயரை இழக்க விரும்பாத ''உள் சாதிகள்'', ஷியா, சன்னி, லெப்பை என்று எண்ணில் அடங்காத சாதிகள் அனைத்தையும் பணம் என்ற மந்திரக்கோல் கொண்டு தேர்தலை வெல்லும் சூத்திரத்தை கண்டுபிடித்த மாமன்னர் ஆட்சியில், வன்னியர், பிராமணர், தேவர், நாடார், கிறிஸ்தவர், இஸ்லாமியர் அனைவரும் ஓர் இனம் தான் மருத்துவர் ஐயா! நாங்கள் அனைவரும் ''இலவச'' சாதி. எங்களை பிரிக்க உம்மால் முடியாது.

 
by N.S Sankaran,Chennai,India    30-12-2009 09:58:16 IST
 Ramadoss don''t fool yourself and others. You told people in your own area and ask them to use the form in the bye-election not to vote etc but pity thing is nobody listened to you. Please go out from politics and do some social work not to all but atleast to your Vanniar community and sins you have committed all these years will get cleaned up instead of creating problems like TSR. 
by PS VENUGOPAL,Dubai,United Arab Emirates    30-12-2009 09:51:20 IST
 இதற்க்கு வசதியாக 234 தொகுதிகளில் எந்த கட்சியினரும் போட்டி போடக் கூடாது. அப்பொழுதுதான் 120 தொகுதிகளில் paa ம க வெற்றி பெரும். மீதி தொகுதிகளில் 49(0) வெற்றி பெறும்.

நூற்றுக்கணக்கான ஜாதிகள் உள்ள இந்த நாட்டில் 60 நீதிபதிகளில் ஒருவர் வன்னியரா... அப்படியென்றால் முக்கியத்துவம் கிடைக்காத மற்ற ஜாதிகளுக்காக அவர் பதவி விலகட்டுமே!
 
by H நாராயணன்,Hyderabad,India    30-12-2009 09:39:52 IST
 கொஞ்சம்கூட வெட்கம் இல்லையா உமக்கு ....ஜாதி ஒழிக்கப்படவேண்டும் என முழக்கமிட்ட நம் மூத்த அரசியல் தலைவர்கள் பிறந்த பூமியில் நீவீரும் பிறந்தீர்கள் என்பதற்கு........  
by Dr துரை அண்ணாமலை ,Singapore,India    30-12-2009 09:22:21 IST
 தமிழ் மக்களே ...அமைதி....அமைதி....தலைவர் சொல்வதைத்தான் மக்கள் ஏற்கனவே செய்கின்றனர்..என்ன... எதிர்த்து நிற்கும் அடுத்த கட்சி சார்ந்த வன்னியருக்கு தான் இப்போதும் வோட்டளிக்கிறார்கள் 
by D தேவன் ,Chennai,India    30-12-2009 09:09:40 IST
 இது முற்றிலும் வன்னியர்கள் சம்மந்தபட்ட நிகழ்ச்சி. இதை மற்றவர்கள் விமர்சிக்க அறுகதைஇல்லை. வன்னிய சக்தி மீண்டும் எங்கு ஓன்று சேர்ந்துவிடுமோ என்ற வயி‌த்தெரிச்சல் அணைத்து வாசகர்களின் விமர்சனம் மூலம் தெளிவாய் தெருகிறது. சிந்தியுங்கள் வன்னிய மக்களே ஒன்றுபடுங்கள். பாமாக வை பலப்படுதுங்கள். இவன் சிதம்பரத்து சிங்கம் மணிகண்டபடையாட்சி. I AM VERY PROUD TO BE A VANNIYAR - THE RULER. 
by K. manikandan,singapore,Singapore    30-12-2009 08:56:35 IST
 இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல. 
by A ராஜா,Singapore,Singapore    30-12-2009 07:40:28 IST
 இந்தியாவில் உள்ள அணைத்து இந்துக்களும் இந்துவுக்கு ஓட்டு போட்டால் ஐநூறு இடங்களில் ப ஜ க செய்துவிடும், தேர்தல் வரும் போது மட்டும் வன்னியர் என்றும் ராம் ராம் என்றும் கூச்சல் இடும் உங்கள்ளுக்கு எல்லாம் ஆப்பு தான்.
 
by S ரங்கநாதன் ,nungambakkam chennai ,India    30-12-2009 07:17:45 IST
 நீங்கள் கட்சி நடத்துவதற்கு தகுதி இல்லாதவர். தமிழ் நாட்டில் வன்னியர் மட்டும் இல்லை அதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் வன்னியர்களுக்கு என்றால் திறமைக்கு என்ன மதிப்பு ? இது போன்ற மேடை பேசு உதவாது. ஜாதி ஒழிக  
by K Karan,chennai,India    30-12-2009 06:49:22 IST
 ராமதாஸ் பகல் கனவு காண்கிறார்.  
by G தண்டபாணி,Coimbatore,India    30-12-2009 05:58:31 IST
 Narayanaa, intha kosu thollai thangalaadaa... ethavathuu seiungadaa..... 
by R தமிழ்செல்வன்,New York,United States    30-12-2009 05:50:13 IST
 ராமதாஸ் பேசும் பேச்சுக்கள் எல்லாம் மிகவும் பைத்தியக்கரமனவை. அவர் ஜாதியை பிரச்சினை யாக்கி தன் சுய லாபத்திற்காக அரசியல் நடத்துகிறார். மக்கள் யாரும் அவரை நம்பி ஏமாறக்குடாது
ஓர் சின்ன எடுத்துக்காட்டு, அவர் ஜாதியை சேர்ந்த இளைஞ்சர்கள் அனைவரும் சிறைக்கு மீண்டும் மீண்டும் செல்ல வேண்டுமாம் ஆனால் இவர் மட்டும் ஆறு மாதம் மட்டும் சிறை செல்ல தயாராக உள்ளாராம்.
அணைத்து ஊடகங்களும் ஓர் வேண்டுகோள்!!! தயவுசெய்து ''''கோமாளி ராமதாஸ்'''' அவர்களையும் அவர் பற்றிய செய்திகளையும் ஓர் பொருட்டாக மதித்து வெளியிடவேண்டாம். இது உங்களின் மற்றும் மற்றவர்களின் நேரத்தை வீணாக்கும் செயல்.
 
by J சீனிவாசன்,Singapore,Singapore    30-12-2009 05:44:45 IST
 யோவ், ஏன்யா மண்டய சூடாக்குரே, இத்தினி நாள் இந்த வன்னியர்கள் உன் கண்ணுக்கு தெரியலையா?
இத்தினி நாள் யாருக்கு பல்லக்கு தூக்கிகிட்டு இருந்தே? உன் மகன் பதவில இருந்த வரைக்கும் எந்த வன்னியனும் உன் கண்ணுக்கு தெரியல. எந்த வன்னியன் நலனும் உனக்கு பெரிசா படல. இப்போ உன் குடும்பத்துல யாருக்கும் பதவி இல்ல. அதனால வன்னியன் முதுகுல சவாரி பண்ண பாக்குறே. உன்னால தனியா நின்னு எதுவுமே பண்ண முடியாதா?
ஒரு நடிகனுக்கு (விஜய காந்த) இருக்குற தில் கூட உனக்கு இல்ல. நீ எதுக்கு இன்னும் அரசியல்ல இருக்கணும். ஒன்னு திமுக இல்ல அதிமுக ரெண்டு பெரும் விரட்டி விட்டுட்டாங்க. இப்போ சவாரி பண்ண முதுகு கிடைக்கல. அதுனால இப்போ உன் சாதிக்காறன குதிரை ஆக்க பாக்குறே. உன் சாதிக்காரன் எத்தினி நாளைக்கு தான் பொறுமையா போரான்னு பாப்போம். ஒழுங்கா உன் மகன்கிட்ட பொறுப்ப ஒப்படைச்சிட்டு ஒதுங்கி போ. அப்போதான் உன் கட்சிய காப்பத்தலாம் . இல்ல ஒரே அடியா பச்சோந்தி மக்கள் கட்சி ஒழிந்சிடும். ரொம்ப kevalamaa இருக்குய்யா உன் நிலைமை.
 
by கண்ணன். ,singapore,India    30-12-2009 05:16:47 IST
 தமிழ் உணர்வு வெளிப்படும் வண்ணம் நாளிதழையும் தொலைக் காட்சியையும் நடத்தி வரும் இராமதாசு விரக்தியின் விளிம்பில் இருந்து மீள வேண்டும். அல்லது வன்னியர் சாதிக் கட்சி என்று தன் கட்சியின் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும். சாதி வெறி பிடித்து அலைந்து இருக்கின்ற வாக்கு வங்கியையும் இழக்க வேண்டா. தொடர்ந்து வன்னிய தாசனாகத்தான் இருப்பனே என்றால் அவரது அழிவை யாராலும் தடுக்க முடியாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
by I. Tiruvalluvan,chennai,India    30-12-2009 05:13:53 IST
 மரங்களை வெட்டி ரோட்டில் போட்டுவிட்டு அரசியலுக்கு வந்த ராமதாஸ் பண்ணும் காமெடி தாங்கமுடியவில்லை. 
by P BALA,China,India    30-12-2009 04:43:15 IST
 appadiyaa.. please go to jail.... TN wil be happy... 
by Sun கண்ணன்,London,United Kingdom    30-12-2009 04:13:28 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்