தமிழை செம்மொழியாக்க தொய்வில்லா நடவடிக்கை: முதல்வர் பெருமிதம்
டிசம்பர் 31,2009,00:00 IST
சென்னை: "தமிழைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டுமென்ற, லட்சியத்தை நிறைவேற்றிட தொய் வில்லாத நடவடிக்கைகளை தி.மு.க., மேற்கொண் டது' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்மொழி எப்போது தோன்றியது என்பதை, இதுவரை எந்த அறிஞரும் கண்டுபிடிக்கவில்லை. கல்தோன்றி மண் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்மொழி என, அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர். இத்தகைய பெருமை வாய்ந்த தமிழைச் செம் மொழியாக அறிவிக்க வேண்டும் என தீர்மானம், கடிதங்கள் மூலம், மத்திய அரசை நீண்ட நாட்களாக தி.மு.க., வலியுறுத்தி வருகிறது. தமிழ் செம்மொழி - ஆட்சிமொழிக் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.
"இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும், தமிழுக்கென்று துறை ஏற்படுத்தவும், தமிழ் ஆராய்ச்சிக் கென மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கிடவும், தமிழ்மொழியை செம்மொழியென அறிவிக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்துவோம்' என லோக்சபா தேர்தலின்போது வாக்குறுதி அளித்தோம். அதன்படி, ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சி அமைந்ததும், குறைந்த பட்ச பொதுச் செயல் திட்ட அறிக்கையில், "தமிழ் மொழி செம்மொழியென பிரகடனப்படுத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழைச் செம்மொழியெனப் பிரகடனம் செய்து, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.
இது தொடர்பாக, காங் கிரஸ் தலைவர் சோனியா, எனக்கு எழுதிய கடிதத் தில், " தமிழ் செம்மொழியாக அறிவித்த சாதனைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் காரணம் என்றாலும், தி.மு.க.,தான் இதற்கு முக்கிய காரணம்' என தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு, திருச்சி தி.மு.க.,மாநாட்டில், சோனியா முன்னிலையில் நான் பேசும்போது, "தமிழ் செம்மொழியானது ஒரு வரலாறு என்றால், அந்த வரலாற்றுப் பெருமையை எனக்கும் அளிக்கும் வகையில், நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப் பட்டு, என் நினைவகத்தில் இருக்கவேண்டிய ஒன்று' என்று குறிப்பிட்டேன். தமிழைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டுமென்ற, லட்சியத்தை நிறைவேற்றிட, தொய்வில் லாத நடவடிக்கைகளை தி.மு.க., மேற்கொண் டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.