Advertisement
அரசியல் செய்திகள்
த.மு.மு.க., தலைவருக்கு ப.சிதம்பரம் கடிதம்
ஜனவரி 10,2010,00:00  IST

Latest indian and world political news information

சென்னை : "முஸ்லிம்களின் மன உணர்வை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், த.மு.மு.க., தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.



த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று' எனக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று, த.மு.மு.க., சார்பில் கடிதம் எழுதப்பட்டது.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், "முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள எவரது உணர்வையும் புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும் ஜிஹாது மற்றும் ஜிஹாதிகள் என்ற சொல் பயங்கரவாத நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகளையும் குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது."செய்தி ஊடகங்களும் இந்த வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தி வருகின்றன.



ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஜிஹாத் என்பதற்கு, "நம்பிக்கையில்லாதோர் மீதான போர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-குவைதா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் - இ - தொய்பா தலைவர்களும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.
"ஜிஹாத் என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல் நானும் பயன்படுத்தி விட்டேன். அதை திருத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.முஸ்லிம் சமுதாய மக்களின் மார்க்க உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கம் தனக்கு இல்லை என்பதை, தன் கடிதத்தில் உறுதிபட தெரிவித்ததன் மூலம், தான் ஒரு நியாயவான் என்பதை உள்துறை அமைச்சர் நிரூபித்துள்ளார். அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 MR CHIDAMBARAM SIR I KNOW
YOU ARE GREAT MAN I LIKE YOU 
by AR THAJUDEEN ,DUBAI,United Arab Emirates    11-01-2010 00:04:12 IST
 பொதுவாக இந்த மாதிரியான வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை முஸ்லிம்களாகிய நாம் அவர்களுக்கு விளக்க வேண்டியது அவசியமாகும்.
தற்பொழுது பல தமிழ் டிவிகளில் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை குமார் மற்றும் முருகனடிமை போன்றோர்கள் பார்க்க வேண்டும். மானுட வசந்தம் என்ற இஸ்லாமிய நிகழ்ச்சியில் மாற்றுமத நண்பர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு அழகாக டாக்டர் ஹபீப் முஹம்மது அவர்கள் பதிலளிக்கிறார்கள்.
முஸ்லிம்களாகிய நாமும் நம்முடைய பங்கிற்கு இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தங்களை நம்மோடு பழகும் மாற்றுமத நண்பர்களுக்கு வழங்கி அவர்களும் இஸ்லாத்தை சரியான முறையில் அறிந்துகொள்ள உதவ வேண்டும். 
by கனி,Chennai,India    10-01-2010 19:08:38 IST
 அமெரிக்க இப்பதான் பதினான்கு முஸ்லிம் நாடுகளை தன்எதிரியாக அறிவித்துள்ளது !!இன்னும் நாற்பத்தி இரண்டு முஸ்லிம் நாடுகள் பாக்கி !!மூன்றவது உலகப்போர் நிட்சயம்!!! 
by s இபு:பாரிஸ் ,sarcelles,France    10-01-2010 15:31:56 IST
 mr முருகனடிமை
அமெரிக்க காரன் இந்தியா
வந்து லட்சகணக்கில் ஆட்களை கொன்றிருந்தால்,இந்தியா ப்ளைட்டையும் மிகவும் ஆராயத்தான் செய்வான்.சும்மா அறிவாளி மாதிரி பேசக்கூடாது.உப்பு தின்றுவிட்டு,தண்ணீர் குடிக்கிறான்.அதை பார்த்து பேசக்கூடாது.  
by k husein,toronto,Canada    10-01-2010 15:25:35 IST
 தவறாக உபயோகித்த வார்த்தைக்கு அவர் வருத்தம் தெரிவித்தார் , இதற்க்கு ஏன் குமார் நீங்க இவ்வளவு கோபம்அடைகிறீர்கள்......?
 
by a.s முஹ்சின் அலி ,al kharj,Saudi Arabia    10-01-2010 14:59:17 IST
 Great step by Chidamparam.
All politicians should avoid to mingle the Terrorism with Islam particularly BJP leaders.

 
by N shahul,dubai.,United Arab Emirates    10-01-2010 10:08:07 IST
  அருமையாக சொன்னீர்கள் குமார் .. ஓட்டிற்காக இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் அடமானம் வைக்கும்
அரசியல்வாதிகள் இருக்கும் வரை நாட்டில் தீவிரவாதம் அடங்காது ...
பிறகு ஏன் அமெரிக்கா ஈரான் ஈராக் ஆப்கன் அரேபியா பாகிஸ்தான் நாட்டு விமானத்தை மட்டும் கடும் சோதனைக்கு உள்ளாக்குகின்றது  
by R Muruganadimai,Coimbatore,India    10-01-2010 08:09:27 IST
 சிதம்பரம் இதற்கு அல்-கொய்தா விடமே மன்னிப்பு கேக்கலாமே..நமக்கு வோட்டு தானே முக்கியம் ....தேச பாதுகாப்பா..... 
by kumar,kansas,United States    10-01-2010 06:23:30 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்