Advertisement
அரசியல் செய்திகள்
தமிழர்களுக்கு என்றுமே வீழ்ச்சி இல்லை : சங்கமம் துவக்க விழாவில் கருணாநிதி பேச்சு
ஜனவரி 11,2010,00:00  IST

Latest indian and world political news information

சென்னை : ""தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை,'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா, நேற்று சென்னை தீவுத்திடலில் நடந்தது. இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழக முதல்வர் கருணாநிதி  பேசியதாவது: சென்னை தீவுத்திடல் நிரம்பி வழியும் அளவிற்கு சென்னை சங்கமம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி நான்கு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் துவங்கப்பட்டு, மாநகரத்தின் வீதிகளில் எல்லாம் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் நாட்டுப்புறம் என்று ஒன்று  இருக்கிறது. அதற்கென்று நாட்டுப்புறக் கலைகள் மற்றும் இசைத் துறையில் பாடல்கள் என்றெல்லாம் இருக்கின்றனவே; அவற்றை மக்களோடு பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு இந்த சங்கமம், தமிழ் மையத்தின் சார்பில் துவங்கப்பட்டு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வருகிறது.
இதைத் தொடங்கியவர்களும், தொடங்கி வைத்த நானும் எதிர்பாராத அளவிற்கு இந்த சங்கம் நிகழ்ச்சி வெற்றி முரசு கொட்டி வருகிறது.  இம்மேடையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள், எல்லாரும் வியந்து போற்றுகின்ற அளவிற்கு அவ்வளவு அருமையாக அரிய பல கருத்துக்களை எடுத்துக் கூறுகின்ற நிலையில் இங்கே நடத்திக் காட்டப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியல் இடம் பெற்ற சில காட்சிகளில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகம் ஏற்பட்ட அடுத்த வினாடியில், அந்த சந்தேகத்தை நீக்குகின்ற காட்சிகள் இந்த அரங்கத்திலே வந்தன. சொல்லப்போனால் சங்கமம் என்பதனுடைய நோக்கம், "பிறப்பொக்கும்' என்பதை நாட்டிலே பரவச் செய்திடல் வேண்டும். சமுதாயத்தில் வேரூன்றச் செய்ய வேண்டும் என்பது தான்.
இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்த போது, "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. கோவையில் நடக்கவுள்ள செம்மொழித் தமிழ் மாநாட்டில், "பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்' என்னும் கருத்தாக்கத்தை ஒட்டியே சென்னை சங்கமம் நிகழ்ச்சி, "பிறப்பொக்கும்' என்ற வார்த்தை, பிறப்பு ஒக்கும் என்ற இரண்டு சொற்களைக் கொண்ட இந்த வார்த்தை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகக் கோவையில் இருந்து எடுக்கப்பட்டது.
நாம் பிரிந்து கிடக்கக்கூடாது; நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்; ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம் நம் தமிழ் மொழியால் ஒன்று சேர வேண்டும். நாம் நம்முடைய தமிழைக் காப்பாற்ற வேண்டும். நம்முடைய மொழி உணர்வை தொடர்ந்து இங்கே நிலைநாட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற இத்தனை வாசகங்களும் பொருந்தியாக சங்கமம் கலை விழாவிலே, "பிறப்பொக்கும்' என்ற சுருக்கமான சொற்றொடரை அமைத்துள்ளனர்.
தமிழ் உள்ள அளவும், தமிழன் உள்ள அளவும், தமிழ் நெறி உள்ள அளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை. சென்னை சங்கமம் நிகழ்ச்சி, சென்னை மாநகரில் மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களின் செயலை பாராட்டுகிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
விழா நடன நிகழ்ச்சிகளை பிரசன்னா ராமசாமி சைலஜா குழுவினர் வடிவமைத்திருந்தனர். விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், கனிமொழி எம்.பி., தமிழக சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு,  தமிழ் மையத்தைச் சேர்ந்த ஜெகத் கஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் வரும் 16ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் 2,500 கலைஞர்கள் மூலம் 4,700 நிகழ்ச்சிகள் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி நிறைவு விழா, சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடக்கிறது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ஒரு ஊரில் இரண்டு திருடர்கள் போட்டி போட்டு கொள்ளை அடித்து வந்தார்கள். மக்கள் அவர்களை பிடிக்க நினைத்து எப்போதும் தோற்று கொண்டு இருந்தார்கள் திருடர்கள் பலே கில்லாடிகள். அவர்கள் இன்றுவரை தப்பித்து வருவற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. '' ஒரு திருடன் திருடினால் அடுத்தவன் காவல் காத்தல் போலீஸ் உட்பட''. ''ஊடகங்கள், சினிமாக்கள் நிறுவி மக்களின் திருடன் பிடிக்கும் திறனை, அறிவை மழுங்க செய்தல்''. ''அப்படியே திருடிகிற வேளையில் மாட்ட நேர்ந்தாலும், தன்னை பிடித்த மக்களிடம் மட்டும் பணத்தை பிரித்து கொடுத்தல் '' பரிதாபத்துக்கு உரிய தகவல் என்னவென்றால் திருடர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது......
 
by m mariaraj,chennai,India    12-01-2010 03:34:06 IST
  tamilanukku ini veezhchi illai. erkanave veezhunthu kidakiran , ithuku mela eppadi  
by TMS shaju,bahrain,India    12-01-2010 00:25:38 IST
 மானடட்டும்...மயிலாடட்டும்....உங்களால் உங்கள் பிள்ளைகள், பேரபிள்ளைகள் ஆடட்டும்......ஆடுவதற்கு தமிழனின் சுடுகாட்டயாவது மிச்சம் வையுங்கள். 
by r மணி,singapore,India    11-01-2010 22:16:51 IST
 நண்பர் Mr. ரிஸ்வான், மேல இருக்கிற News –க்கும் உங்களோட கருத்துக்கும் என்ன சம்மந்தம்?? விவேக் Comedy மாதிரி இல்லா? ''பஞ்ச் நல்ல இருக்கான்னு மட்டும் பாருங்க. அத எழுதி மனப்பாடம் பண்ண எவளோ கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும்'' 
by S. இளந்திரையன்,Manama,Bahrain    11-01-2010 17:54:12 IST
 Don''t criticize always M K. Because he is doing better than any other ruler in TN. At present in tamil nadu no one stop you to learn any other languages what ever you can learn yourself either hindi or japanese. 
by ASPM Raja,Dubai,United Arab Emirates    11-01-2010 16:35:19 IST
 தமிழர்கள் என்றால் உங்கள் குடும்பமா தலைவரே ? 
by se selvakumar,Qatar,India    11-01-2010 15:36:35 IST
 I welcome P Pandian comments about srilankan issue. Its true. Our people lost hope with CM in Srilankan issue. Just because to get 5-7 central ministers, our CM lost his total respect what he gained throughout his life. 
by தயாநிதி,Bangalore,India    11-01-2010 15:23:10 IST
 அட பொங்கய்யா, நீங்களும் உங்க தமிழ் உணர்வும்... அருகதயே கிடயாத ஆளய்யா நீங்க.. சங்கமம் னு சமஸ்கிருதத்துல பெயர வச்சிகிட்டு.., அம்பதாயிரம் தமிழன கொன்னுட்டு.., தமிழனப் பத்தி, தமிழப் பத்தி பேச வந்திட்டீங்க..  
by maran தமிழன், கோடிமுனய்.,chennai,India    11-01-2010 12:45:00 IST
 P Pandian,USA,United ஸ்டேட்ஸ் ரொம்ப நல்ல சொன்னிங்கே பாண்டியன்..நான் அமோதிக்கிறேன் உங்கள் கருத்தை.  
by GB ரிஸ்வான்,jeddah,Saudi Arabia    11-01-2010 12:02:04 IST
 தமிழருக்கு வீழ்ச்சி இல்லை என சொல்லும் தகுதி இவருக்கு இல்லை என நான் சொல்வேன். இலங்கையில் தமிழ் இனமே அழிந்துகொண்டு இருந்தபோது இவர் என்ன செய்தார் ?? இவர் இருக்கும் வரை இவரது வாரிசுகளுக்கு வீழ்ச்சி இல்லை என வேண்டுமானால் கூறலாம் !!  
by KB பாலா,singapore,Singapore    11-01-2010 11:25:06 IST
 குண்டு சட்டிக்குள்ளே நல்ல குதிரை ஓட்டு தலைவரே,,,பேரன் பெத்திகள்ளேலாம் நல்ல ஆங்கில பள்ளியில் படித்து ஹிந்தி, ஆங்கிலம், எல்லாம் படிச்சு ,நல்லா வரட்டும்,, தமிழ் மக்கள் தமிழு,தமிழு என்று தமிழ மாத்திரம் படிச்சு தமிழ் நாட்டுக்குள்ளேயே முடங்கட்டும்,,,நல்லபெரிய மனசையா உங்களது,,, தமிழு வேண்டாமுன்னு இல்லே ,மத்த மொழிகளையும் படிச்சு வெச்சா என்னையா தப்பு,, ஏனைய்யா தமிழ் நாட்டை இப்படி குட்டிசுவராகிரே ????உங்க ஒரு ஆள் மனசு ஏன் இப்படி நாசமாக போகுது ????ஏழு தலைமுறைக்கு சம்பாத்திச்சாசிள்ளே ????இனியாவது கொஞ்சம் ஒதுங்கி தமிழ் நாடு மக்களை கொஞ்சம் நிம்மதியா வாழவிடுங்களேன் ?????  
by k sathish,cbe,India    11-01-2010 10:13:54 IST
 Dear Pandian,
Try not to think that people of TN are stupid and simply vote for money, you guys don’t know on how the common people are benefited by DMK’s by their latest plan and their harmonious rule.

Nobody could force people to vote if they are really having hard life in DMK’s rule. They could just get the money and simply vote for other party what. But, they never did man. So, what is shows is the low class and the middle class still wish DMK’s rule to be continued.

Dear Rizwan,

Try not to show that you are the hater of DMK eventually you hate the supporter of DMK too.
See, what kind of attitude is this.

You guys comment about the above article rather go and attack people personally.

Because of you guys others also may get directed in different way and cannot read and enjoy the particular elements on the article.

Could you please tell us on who could be the right person to run TN?
Is the Telugu speaker Captain?
Is the BJP?
Is the congress?
Is the ADMK?

We think DMK is far far better than the above parties.

Please, don’t go personal and attack Mr. Sridhar. All these are just comments man. Just be cool.

Dear Sridhar,
Please, take it easy and comment as usual.
 
by t jopet,singapore,Singapore    11-01-2010 09:40:38 IST
 It''s hearting to note that most of the guys who provide comments always disrespect and provide TN Govt. It would be better, if these guys provide constructive views instead always rediculing MK and TN Govt. These guys should understand that TN gov''t provides the better governence amoungst the southern states!!!!!! 
by Mr Rameshkumar,Pondicherry,India    11-01-2010 09:14:36 IST
 Tamilian won''t change their attitude at any cost whatever the good thing a Tamilian does Tamils comments in negative attitude no appreciation suppose a Tamil Nadu settled kannadigas does a small thing the appreciation goes like sky. In this Tamilians have no way to comment in negative then also unsatisfactory oppinion Tamilian will not live due their negative attitude to their own community O God when you are going to give wisdom to Tamil Nadu people. 
by ssa henry,Trichy,India    11-01-2010 08:59:11 IST
 நல்ல உள்ளம் கொண்ட நண்பர், நகைச்சுவை உணர்வு கொண்டவர் ரிஸ்வான் என்ற நண்பரின் பாராட்டுக்கு(?) உளம் கனிந்த நன்றிகள்.

இனிய தமிழை படித்து மகிழ இன்ப தமிழில் பேசி மகிழ கடல் கடந்த எங்களுக்கும் கருணை காட்டிய தினமலருக்கு இதயம் கனிந்த நன்றிகள்.

தமிழினம் தழைத்தோங்க, தமிழ்த்தாய் மன மகிழ செம்மையாய் உழைத்திடும் செம்மொழி தந்த செம்மலாம் சொக்கத்தங்கம் கலைஞர் வாழ்க.

பாவிகள் படுத்தி எடுத்திட்டாலும், எட்டப்பன்கள் எட்டி நின்று உதைத்தாலும் களவாணிகள் காட்டி கொடுத்தாலும், கயவர்கள் களங்க படுத்திட்டாலும், கலங்காதவர் கலைஞர் பெரியவர்.

எறும்பு கடித்தா யானைக்கு வலிக்கும்? சிறு துரும்பு பட்டா போர் படை கலங்கும். ஆயிரம் கைகள் ஆதவனை மறைத்தாலும், சூரியனை பார்த்து நாய்கள் குறைத்தாலும் உதய சூரியன் உச்சத்தில் தான்.

தமிழ் தாயின் தலைமகன் தன்னலம் கருதாத தமிழ்மகன்,தமிழாய் வாழ்பவன், தமிழினம் தலைநிமிர செய்தவன், தமிழின தலைவன் கரம் காப்போம்,
தமிழ்த்தாய் மானம் காப்போம்.


 
by g ஸ்ரீதர்,California,United States    11-01-2010 08:52:18 IST
 As long as DMK rules, everyone in TN need to put their heads down because of violent and inhumane incidents like the death of that police SI. I pray God for the speedy sunset of DMK. 
by Truth Alone Triumphs,Boston,United States    11-01-2010 06:25:13 IST
 Sir, Please don''t talk about tamil and tamilian anymore coz we know very well what you did for tamil and tamilian. Don''t think that we all are fools. Instead thinking about our people in Srilanka you are sitting in this function and enjoying all the programe? When you need positions you will go to Delhi with your wheel chair but for our tamilpeople just one letter to Delhi? Don''t worry in state DMK is good for nothing and in central Congress is good for nothing, during our next election power full decisson making party like BJP will come to power and in local ADAMK and Vijayakanth alliance will get more seats. For your information till today I am a DMK supporter but apart from all your actions and central government approach on Andhra and Australia I found that congress is just a ultimate craps. All you guys need money and power and you dont do anything in your life time. Public please think one more time before you press the voting button. Don''t think about 2X 500 rupees. Please....Please.....Please.... 
by P Pandian,USA,United States    11-01-2010 04:47:23 IST
 இதில் நான் கருத்து சொல்ல ஒன்னும் இல்லை..எனவே தினமலர் வாசகர்கள் ..வட்டாரத்தின் அவைபுலவர், அடுக்கு மொழி வித்தகர் ..கவிதைமழை பொழியும் திரு ஸ்ரீதர் கலிபோர்னிய அவர்களை வருக!! வருக!! என அழைத்து ஒரு நல்ல கவிதையை படிக்கும் மாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்..இப்போ ஸ்ரீதர் படைக்கபோகும் கவிதைக்கு கலைஞர் அவர்கள் பரிசாக துறைமுக தொகுதியை தருவார்..மற்றும் கலிபோர்னியாவில் தமிழுக்கு செம்மொழி வாங்கி தந்த ஸ்ரீதர்க்கு அஞ்சாநெஞ்சன் என்ற பட்டமும் தருவார்..  
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    11-01-2010 02:22:57 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்