Advertisement
அரசியல் செய்திகள்
மதுரையை 'கிரீன் சிட்டி'யாக மாற்ற திட்டம் : மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேச்சு
ஜனவரி 14,2010,00:00  IST

Latest indian and world political news information

மதுரை : மதுரையை ஓராண்டிற்குள் பசுமையாக்க, ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் துவக்க விழா, மாரியம்மன் தெப்பக்குளம் மேற்கு கரையில் நேற்று நடந்தது. விவசாயம், வனத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் நடந்த விழாவிற்கு, மரம் வளர்ப்பு குழுத் தலைவர் கணேசன் வரவேற்றார். மகிழம் மரக்கன்றை நட்டு, திட்டத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மனைவி காந்தி துவக்கி வைத்தனர்.மு.க.அழகிரி பேசியதாவது: தேர்தல் அறிக்கையில், "பல திட்டங் களை மதுரை மக்களுக்கு வழங்குவேன், உருவாக்குவேன்' என, குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒன்று, மரக்கன்று நடும் விழா. "ஒரு லட்சம் மரக்கன்றுகளை நகரில் அமைத்து தருவேன்' என்றேன். முதற்கட்டமாக, தெப்பக்குளத்தைச் சுற்றி, 200 மரக்கன்றுகள் நடப்பட்டுள் ளன. மற்ற இடங்களில் நடும் மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பை கட்சியினர், தன்னார்வ மற்றும் சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வர். பல திட்டங்களை தேர்தலுக்கு முன் கூறியிருந்தேன். அதில், சிலவற்றை நிறைவேற்றிவிட்டேன் என நினைக்கும் போது, உள்ளம் மகிழ்கிறது.இதற்கு முன் எம்.பி.,யாக இருந்தவர்கள், "மதுரையை இப்படியாக்குவேன், அப்படியாக்குவேன். சிங்கப்பூராக்குவேன்' என்றனர். நான், 'பசுமையாக இருந்தாலே போதும்" என்கிறேன். "கிரீன் சிட்டி'யாக இருக்க, பல திட்டங்களை தீட்டி வருகிறேன். நகரில், 18 நவீன இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்குப் பின் சில கழிப்பறைகளும், மற்றவை எனது பிறந்தநாளுக்கு பிறகும் திறக்கப்படும், என்றார். பின், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு 14 வகையான மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார். விழாவில், அமைச்சர் தமிழரசி, எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, ராஜேந்திரன், கவுஸ்பாட்ஷா, கலெக்டர் மதிவாணன், மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன், மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், தி.மு.க., நகர் செயலாளர் தளபதி பங்கேற்றனர்.மரக்கன்றுகளை யாரிடம் வாங்குவது? இத்திட்டத்திற்காக, "மதுரை மரம் வளர்ப்புக்குழு" அமைக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மதுரை அழகர்கோவில் மெயின் ரோடு, தாமரைத் தொட்டி அருகில் உள்ள, 1, இண்டிகோ என்க்ளேவ் என்ற முகவரியில் இயங்கும் இக்குழுவிடம் விண்ணப்பித்து, மரக்கன்றுகளை பெறலாம். மேலும் விபரங்களை அறிய, குழுச் செயலாளர் ஜெகதீசனை 94428 82288ல் தொடர்பு கொள்ளலாம்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 சபாஷ் ! சரியான போட்டி !
மதுரையா? சென்னையா?
எது முதலில் சிங்கார நகரமாகப்போகிறது ? 
by K JEEVITHAN,villupuram,India    17-01-2010 21:01:26 IST
 super plan 
by m kottur samy,thirunel veli,India    17-01-2010 09:52:53 IST
 sir, You are really great. Hope that you will make the city clean and green. We are all with you. Please proceed to do good things to the people. 
by MA. ரவீ சந்திரன் ,Muscat.,Oman    16-01-2010 13:00:10 IST
 Everything is Good, But main thing is to make the TRAFFIC GOOD. At present little improvement around Periyar Bus Stand made Good, But nearby Pazhanganatham also need tobe Jamless Traffic. 
by M Ashokkumar,Dubai,United Arab Emirates    16-01-2010 12:45:30 IST
 Dear sir,
Thanks for your proposal to make green city. Please try to give more service through your way to people.
Hope with in 3 months Madurai will be clean city. As per your influence you can order to Corporation and local service to make Clean City.

By Saravanan East Africa. 
by k.s. Saravanan,Addis Ababa, Ethiopia, ,Ethiopia    15-01-2010 21:16:05 IST
 மரக்கன்றுகளை யாரிடம் வாங்குவது?யார்ட commision கூட கெடைக்கும்னு பாருங்க. அங்கயே vaangiralaam 
by N Unmai,bangalore,India    15-01-2010 18:19:56 IST
 எதையாச்சும் சொன்னாதான பேப்பர்ல போட்டோ வரும்.மொதல்ல காசு கொடுக்காம வோட்டு வாங்கி ஜெயுங்க.  
by s sekar,Chennai,India    15-01-2010 18:14:07 IST
 மிக்க மகிழ்ச்சி !! இது ஒரு தொடக்கம். இத்திட்டம் தமிழகம் முழுவதிலும் தொடங்கி, நாம் மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்க வாழ்த்துக்கள்... இத்திட்டத்தை கொண்டு வந்த திரு. மு.க.அழகிரிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.... மிக்க நன்றி!!!!!!!! 
by N பிரதாப்,Pune,India    15-01-2010 12:25:33 IST
 திரு அழகிரி அவர்களே, உங்களால்
நிச்சயமா முடியும்.


 
by SKM FAIZAL,kualalumpur,Malaysia    15-01-2010 12:04:38 IST
 Dear M.k.அழகிரி, யு ஆர் great . நீங்கள் சொல்வதை செய்வீர்கள். என் வேண்டுகோள்: குப்பை இல்லாத மதுரையை உருவாக்குங்கள். நீங்கள் தான் மதுரை கிங். மக்கள் என்றும் உங்கள் பக்கம் தான். - மகேஷ் - துபாய். ( மதுரை.) 
by M MAGESH,DUBAI ( Madurai),India    15-01-2010 11:37:06 IST
 முயன்றால் முடியாதது இல்லை வாழ்த்துக்கள். நீங்கள் நினைத்தால் மதுரை தாண்டி கன்னியாகுமரி வரை வளர்ச்சி பணிகளை முடிக்கி விட முடியும். பின்வரும் சந்ததியினர் உங்களை பாராட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை ! 
by Mr Ponns,US,India    15-01-2010 09:23:39 IST
 சபாஷ் அழகிரி, இப்போதைய தேவை கிளீன் & கிரீன்.
இந்த முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள் 
by S.S.M MANI,yishun,Singapore    15-01-2010 06:49:32 IST
 ''''மற்றவை எனது பிறந்தநாளுக்கு பிறகும் திறக்கப்படும், என்றார். ''''
எனக்கு இன்னும் இந்த பிறந்த நாள் லாஜிக் புரியல. மக்களோட காசில மக்களுக்கு செய்றதுக்கு இவரோட பிறந்த நாள் என் வந்தது. என்னமோ நடக்குது ஒண்ணுமே புரியல  
by சங்கீத,Florida,United States    14-01-2010 18:38:18 IST
 அடடா அழகிரி சொல்லி அடிக்கறதுல கில்லி ஆச்சே..
மதுரைய கிரீன் சிட்டியா மாத்திடுவாரோ. 
by A Jameel,Singapore,India    14-01-2010 15:39:57 IST
 ஒரு ஆரோக்கியமான இந்த முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள். 
by K Jayakumar,Sharjah,United Arab Emirates    14-01-2010 10:40:07 IST
 சபாஷ் அழகிரி, இப்போதைய தேவை கிளீன் & கிரீன்

பாண்டியன்
 
by ts pandian,Singapore,Singapore    14-01-2010 09:38:41 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்