Advertisement
அரசியல் செய்திகள்
அரசு நிதியை தவறான வழியில் செலவழிக்கவில்லை : தணிக்கை குழு அறிக்கை குறித்து முதல்வர் தகவல்
ஜனவரி 16,2010,00:00  IST

Latest indian and world political news information

சென்னை : "மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில், அரசு நிதியை, தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் எனக் குறிப்பிடப்படவில்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:மத்திய தணிக்கைக் குழு  அளித்த அறிக்கையில், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 121 கோடி ரூபாய், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் என்று கூறவில்லை. இந்த செலவழிப்பு முரண்பாடானதோ, தவறானதோ அல்ல. திரைப்பட நகருக்கு ஜெயலலிதா தனது பெயரை வைத்துக்கொண்டது பற்றியும், அதற்கு கூடுதலாக எத்தனை லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது என்பது பற்றியும், ஆதாரங்களோடு நான் எழுதியிருக்கிறேன். பல்கலைக் கழகத்திற்கு வேந்தராக தன்னையே நியமிக்கும் உத்தரவை பிறப்பிக்கவில்லை என ஜெயலலிதா கூறியுள்ளார்.  இதற்கான முன்வடிவு, எந்தத் தேதியில் நிறைவேற்றப்பட்டது என்பதை நான் புள்ளி விவரத்தோடு சொல்லியிருக்கிறேன். தகவல் பெறும் உரிமைச் சட்டம், தனது ஆட்சியிலேயே கொண்டுவரப்பட்டதாக ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.அதுவும் தவறு; அது தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் வணக்கம் செலுத்திய போது, சபாநாயகர் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். சபை துவங்கிய பிறகு,  உறுப்பினர்கள் அவைக்கு வருவதும், நடுநடுவே எழுந்து சென்று திரும்புவதும் உண்டு. அப்போது, சபாநாயகர்  இருக்கையை நோக்கி வணக்கம் செலுத்திவிட்டு உறுப்பினர்கள் அமர்வார்கள்.  அவர்களை ஒவ்வொருமுறையும்  சபாநாயகர் கவனித்து வணக்கம் தெரிவிக்க முடியாது. அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவர் வந்த போதும், சபாநாயகர் வணக்கம் தெரிவிக்காமல் இருந்திருக்க கூடும்.போலீஸ் அதிகாரி வெற்றிவேல் கொலை செய்யப்பட்ட இடத்தில், அமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்று ஜெயலலிதா கூறுகிறார். அவர்கள் வேடிக்கை பார்க்கவில்லை; உடனடியாக முதல் உதவி செய்து காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதை ஜெயலலிதா மறைத்து சபையிலே பேசியதால், மகாமகக் குளத்தில் நடந்த சம்பவம் பற்றி அமைச்சர் தெரிவிக்க வேண்டி வந்தது.சுனாமியின் போது, நான் மருத்துவமனையில், ஓடி ஒளிந்து கொண்டார் என்று ஜெயலலிதா குறை கூறுகிறார். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டரை கேட்டால், என் நிலை தெரியும்.சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினேன். சினிமா கதை, வசனம் எழுதியதற்காக கிடைத்த, 21 லட்சம் ரூபாயும் சுனாமி நிவாரணத்திற்கு, ஸ்டாலின் மூலம் ஜெயலலிதாவிடம் கொடுக்கச் சொன்னேன். சட்டசபையில் ஜெயலலிதா குறிப்பிட்ட, "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' பாடலை  நான் திருத்தி கூறிவிட்டதாக, ஜெ., கூறியுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பற்றி, என்ன சொன்னார் என்பதை, 1989ம் ஆண்டு, "மக்கள் குரல்' இதழின் ஆசிரியர் டி.ஆர்.ராமசாமி எழுதியுள்ளதை படித்தால் தெரியும்.இவ்வாறு முதல்வர்  தெரிவித்துள்ளார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 இல்லதர்வளுக்கு கொடுங்கள், நீங்கள் கொடுப்பது இருப்பவர்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
 
by N Raja,Tirchy,India    16-01-2010 22:35:58 IST
  fund for irregation was misused to supply of tv.........the income for cable charge and advertisement charge came to the ruling party.........hence they gave 1000 per vote...the commission for purchase of tv came to the officers.......god will save tamilnadu 
by n avudaiappan,elathur 627803,India    16-01-2010 22:10:22 IST
 தமிழ் நாட்டை நாசமா ஆக்குறதுக்கு என்ன வழி எல்லாம் உண்டோ அதை எல்லாம் பண்றாங்க. கடன் வங்கி தான் எல்லாத்துக்கும் தூக்கி கொடுக்கணும்னு ஒன்னும் அவசியமே இல்ல....  
by S KUMAR,chennai,India    16-01-2010 20:16:11 IST
 Thanikkai athikaariyum appadiththaan sonnar. Valarchchith thittankalukku othukkappattathai ilavasankalukku payanpaduthtittaankannu.. Neenga reversela sollureenga..Ilvavasnkal koduththathai valarchchi thitta kanakkila kaattittom entru.. Ellaam onnuthaan aiya.. 
by D Devakumar,Kadatchapuram,India    16-01-2010 19:43:38 IST
 முதல்வரே !
தயவு செய்து உங்களின் முட்டாள் தனமான அறிக்கைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் தமிழர்கள் ஒன்றும் இளிச்ச வாயர்கள் அல்ல உங்களின் அறிக்கைக்கு செவி சாய்க்க. உங்களின் அறிக்கைக்கு கிடைத்த பின்னூட்டத்தை கண்டாலே விளங்கும். நிறுத்தி விடுங்கள் உங்களின் அறிக்கை குப்பைகளை. உங்களின் அறிக்கையை படித்ததும் எத்தனை பதில்கள் வந்துள்ளன என்று இந்த தினமலர் செய்தியை பாருங்கள். திருந்துங்கள்.
இப்ராகிம்
யான்பு சவுதி அரேபியா  
by A IBRAHIM,yanbu saudi arabia,India    16-01-2010 17:17:13 IST
 அரசு நிதியை தவறான வழியில் செலவழிக்கவில்லை அல்லது செலவழித்து விட்டோம் என நேரடியாக சொல்வதை விட்டு தேவையற்ற கதை சொல்கிறார். ஆதாரங்கள் எல்லாம் வேண்டாம் !! நேரடியான பதில் சொல்லுங்கள் ஐயா !! உங்களுக்கு எவ்வளவு பங்கு என்பதை எல்லாம் சொல்ல வேண்டாம் !!  
by kb பாலா,singapore,Singapore    16-01-2010 17:04:49 IST
 குறை சொல்லுபவர்கள் முதலில் கிராமங்களுக்கு செல்லுங்கள்; அங்கே மக்கள் எவ்வாறு ஒரு ரூபாய் அரிசி திட்டத்தையும், கலர் டிவி திட்டத்தையும் வரவேற்கிறார்கள் என்பது புரியும். ஒரு வீட்டில் பல இலவச கலர் டிவி இருப்பதையும் பார்க்கலாம். 
by K JEEVITHAN,villupuram,India    16-01-2010 17:03:40 IST
 Taxpayers money is wasted ia all sorts of freebie activities.It wont improve the status of poor.The government should improve the state by providing employment.The best one is to look after agriculture which could develop our economy.People are made beggars after and before the elections is very pathetic and shmaful.The bosses are made beggars.
G.S.Rajan
chennai. 
by g.s rajan,chennai,India    16-01-2010 16:16:53 IST
 கருணாநிதி அவர்களே தொண்ணுறு ஆயிரம் கோடி கடன் இருக்கையில் இலவச திட்டம் தேவையா? கடன் வாங்கி வாங்கி தமிழ்நாட்டை கடன் நாடாக்க வேண்டுமா?
 
by FM Basha,dubai,United Arab Emirates    16-01-2010 15:44:47 IST
 ஐயா முதல்வரே கொஞ்சம் youtube இல் வெற்றிவேல் என்று டைப் செய்து பார்க்கவும். அந்த வீடியோ வை பார்த்தல் உமக்கு தெரியும் சுற்றி இருந்தவைகள் எப்படி வேடிக்கை பார்த்தார்கள் என்று. அதனை வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தன. அதனை அதிகாரிகள் நின்று கொண்டு இருந்தார்கள். இப்படி இருந்தும் எந்த கதி. சாதாரண கூலி தொழிலாளி எதை பார்த்திருந்தால் கூட அவரை மருத்துவமனையில் சேர்த்து இருப்பான். உம்முடைய குடும்பத்தாருக்கு இந்த கதி ஏற்பட்டு இருந்தால் நீர் சும்மா இருந்துரிபீர்கள அல்லது உம்முடைய ஜால்ரா பார்டிகள் தான் சும்மா இருந்து இருப்பர்களா? போலீஸ் அதிகாரிகளே நீங்கள் தான் கலந்து பேசி உங்கள் பாதுகாப்பிற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொடூர கொலையை ஒவ்வொரு டிவி சேனலில் பார்த்த போதும் நாடி நரம்புகள் எல்லாம் துடித்தது. 
by D பிரபு பிரான்கோ,London,United Kingdom    16-01-2010 15:39:53 IST
 ada rama 
by m rama,batam,Indonesia    16-01-2010 14:57:01 IST
 Dear Readers, we all know MK is the father of corruption, lies, cheating, nepotism and all inhuman things. Always I avoid reading his lies (statements), today accidently click this news. Sorry.
 
by A Pandi,Singapore,Singapore    16-01-2010 14:44:44 IST
 அதை இதை பேசி மழுப்புவானேன்? தணிக்கை அதிகாரி நேர்பட தமிழில் தான் சொன்னார். இவர் தன்னக்கு தானே கேள்வி கேட்டு பதில் சொல்வதே தமிழக மக்களை முட்டாள்கள் என்று நினைபதினால்தான். இதே முறையை தமிழ்நாட்டில் உள்ள திருடர்களிடமும் பின்பர்றலமே? விசாரணை என்றபெயரில், அவனே தனக்கு தானே கேள்வி கேட்டு, பதிலும் சொன்னால், போலீஸ் அதையே பதிவு செய்யும் ஏற்பாட்டை செய்தால், வழக்குகள் மிக விரைவில் முடிந்துவிடும். போலீஸ் மந்திரியான முதல்வர் இதற்கும் ஏற்பாடு செய்யலாம்தானே?

நல்ல முதல்வர் நல்ல மக்கள். வாழ்க நீடுடி!! 
by EV ஸ்ரீனிவாசன்,Muscat, Oman,Oman    16-01-2010 14:34:28 IST
 கருணாநிதி குடும்பம் ,இலவச டிவி,கேஸ் கொடுத்ததில் கமிசன் வந்தது எவ்வளவு. தமிழ் மக்களை பிச்சைகாரனாக ஆக்கிய பெருமை. இவருக்கு மட்டுமே உண்டு  
by PAA VIJAY,kadalur,India    16-01-2010 14:22:09 IST
 மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில், அரசு நிதியை, தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் எனக் குறிப்பிடப்படவில்லை'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:மத்திய தணிக்கைக் குழு அளித்த அறிக்கையில், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 121 கோடி ரூபாய், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுக்கு பேர் என்னவாம்,வளர்சிக்குன்னு நிதி ஒதுக்கி அதை இலவசம் செய்யறதுக்கு, என்னன்னு ஓங்க அகராதியில சொல்லபோறிங்க,ஓங்க திட்டமெல்லாம் பொருளாதார வளர்ச்சியை எப்படி உருவக்கும்னு கொஞ்சம் சொன்னிங்கன்னா தேவலை,ஜே.ஜே ஆட்சிகாலதில இது மாதிரி தலைமை கணக்காளர ஜே.ஜே ஆட்சிக்கு எதிரா ஓங்க மத்திய அதிகாரத்தில சொல்ல வச்சு எப்படி சந்தொசப்பட்டிங்கனு எங்களுக்கும் தெரியும்.நீங்க ஒனும்னா வசதியா மறந்து.......
 
by k thiru,chennai,India    16-01-2010 14:21:39 IST
 சபாநாயகர் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். சபை துவங்கிய பிறகு, உறுப்பினர்கள் அவைக்கு வருவதும், நடுநடுவே எழுந்து சென்று திரும்புவதும் உண்டு. அப்போது, சபாநாயகர் இருக்கையை நோக்கி வணக்கம் செலுத்திவிட்டு உறுப்பினர்கள் அமர்வார்கள். அவர்களை ஒவ்வொருமுறையும் சபாநாயகர் கவனித்து வணக்கம் தெரிவிக்க முடியாது. அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவர் வந்த போதும், சபாநாயகர் வணக்கம் தெரிவிக்காமல் இருந்திருக்க கூடும்.
கருணாநிதி அவர்களே காலம் மாறும் இது மறுக்க முடியாத உண்மை.ஜே.ஜே.என்பவர் முன்னாள் முதலமைச்சர்,ஒரு பிரதான எதிர்கட்சியின் தலைவர்,இதை மனதி வையுங்கோ,இதே நீங்களும் தான் இடையிலே வர்றீங்க நீங்க வணக்கம் வச்சிங்கன்னா சபா வைக்காமல் இருப்பாரா,அப்படி இருந்தால் அவர் நெலமை......நெனச்சேன்.அதனால தான் கேப் கொடுத்தேன். 
by k thiru,chennai,India    16-01-2010 14:13:08 IST
 Respected Editor
Kindly send the Video Clips to CM.
After seeing that , we would know his answer.
 
by I Deva,München,Germany    16-01-2010 14:11:00 IST
 தமிழ்நாடுக்கு வளர்ச்சி நிதி தானே அது உன் ஆட்சிக்கு வளர்ச்சி நிதி இல்லையே .... தணிக்கை துறைக்கு முதலில் சரியான பதில் சொல்.....? மறக்கும் மக்கள் இருக்கும் வரை உன் ஆட்சி நல்லாட்சியே  
by K அருண்,Madurai,India    16-01-2010 13:55:11 IST
 என்ன கொடுமை சார் இது  
by ராதா கிருஷ்ணன்,TN,India    16-01-2010 13:34:03 IST
 FROM
C.வெங்கடேசன்
சென்னை

அய்யாவுக்கும் வாசகர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இன்றைய நாள் தினமலரில் பிரசுரமாகியிருக்கும் ஏழைகளுக்கு 210000 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற தலைவர் கலைஞர் அவர்களின் செய்தியை படித்தேன் ஏழை மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள அய்யா அவர்களே இந்த 210000 லட்சம் வீடுகளில் சென்னையில் வசிபோருக்கு 100 பேருக்காவது உண்டா? சென்னை மக்கள் என்ன பாவம் செய்தார்கள் அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் தருவதாக வாக்கு அளித்தீர்களே அதில் சென்னையில் உள்ள ஏழை மக்களில் எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள்? சரி அது போகட்டும் ஆளுநர் உரையில் 3 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கூறினார் அதுவாவது சென்னையில் உள்ளவர்களுக்கு பொருந்துமா? இதனால் சென்னையில் உள்ள பொதுமக்கள் ஆளும் கட்சியின் மீது மிகவும் அதிருப்தியாக உள்ளார்கள் அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காணுமா? C.வெங்கடேசன்
 
by C வெங்கடேசன்,CHENNAI,India    16-01-2010 13:24:27 IST
 மெகா அற்புதமான VILLAIYATTU 
by N சுரேஷ் kumar,DINDIGUL,India    16-01-2010 13:13:58 IST
 உங்கள சொல்லி ஒரு தப்புமில்லை, உழைத்து பிழைக்க விரும்பாமல், மாநிலத்தில் குடுக்கப்படும் இலவச டிவிக்களும், விவசாயத்தை சாகடிக்கும் மத்திய அரசின் வேலை உறுதி திட்டமும் இருக்கும் வரை உங்களது ஆட்சி நடக்கும்.(தி.மு.கவும், காங்கிரசுக்கும்). போக போக நீங்கள் குடுத்து பழக்கிய இந்த இலவச திட்டங்கள் உங்கள் கழுதை நெரிக்கும் காலமும் வரும். நீங்கள் மக்களை மழுங்கடித்து, உணர்வற்றவர்களாக, சோம்பேறிகளாக மாற்றி இந்த தேசத்திற்கே கெடுதல் செய்கிறீர்கள். ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி இந்த தேசத்தின் ஒற்றுமைக்கே தீ வைத்து விட்டீர்கள். இதன் விளைவுகள் வெகு விரைவில் மக்களை பாதிக்கும் காலம் வரும்.  
by v கார்தீசன்,Jeddah-Saudiarabia,India    16-01-2010 13:07:40 IST
  நண்பர் P சேகர்,SINGAPORE,Singapore அவர்களே வணக்கம்..உங்கள் கருத்துக்கள் அனைத்தும் நான் படிபதுண்டு..மிக அருமையாக பதிய வைகிரிர்கள்..வெளிபடையில் அது நகைசுவையாக இருந்தாலும் உங்கள் உள்மனதில் வேதனை தெரிகிறது..

திமுக ஆட்சிக்கு எதிராக இங்கே கருத்து தெரிவித்த வாசகர்கள் அனைவருக்கும் தமிழர்களை பற்றி கவலை..வேதனை உண்டு..எனவே தமிழர்கள் என சொன்னது .தமிழக எல்லா கட்சிகளில் உள்ளவர்களும் அடங்குவார்கள்..

தனிப்பட்ட எந்த கட்சியின் ஆதரவாளர்களையும் தாக்க வில்லை/..
தமிழர்களை நல்ல இருக்கணும் நல்ல சுயமரியதயுடன் வாழனும் என தான் ஆசை..ஆனால் கலைஞர் ஆட்சி எல்லோரையும் அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது என்பது எனதருமை திமுக ஆதரவாளர்களும் புரிந்து கொள்வார்கள்.  
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    16-01-2010 12:29:16 IST
 ஜெயலலிதா பெயர் அதிக முறை உச்சரித்த ஒரே தமிழன் ''''கலைனர் கருணாநிதி'''' வாழ்க அதிமுக! (இதுஎப்படி இருக்கு?) 
by R சையத் நசிருட்டின் ,Tiruchy, India,India    16-01-2010 11:19:46 IST
 எதையும் தனக்காகவே மாற்றிக்கொள்ளும் சாமர்த்திய அரசியல்வாதி கருணாநிதி என்பதை இந்த வாதத்தில் காட்டிவிட்டார் .முத்த அரசியல்வாதி முதிர்ந்த அரசியல்வாதியாக பக்குவப்படவேண்டும். பாவம் அவர் குடும்மா அரசியல்வாதியல்லவா அப்படித்தான் இருப்பார்.  
by R Panneerselvam,Rudrapalayam,India    16-01-2010 11:10:24 IST
 What kalignar did is correct. He is always did correct things. Jeyalalithaa done always bad impression against Kalignar because of her tendency. By.K R Ekanathan  
by K R. Ekanathan,Coimbatore,Tamilnadu,India    16-01-2010 11:01:25 IST
 முட்டாள்கள் என்றுமே இப்படித்தான் பேசுவார்கள் ஜெயலலிதா எதுவுமே செய்யவில்லை என்றுதான் உனக்கு ஒட்டு போட்டோம் நி மீண்டும் அவங்க செய்யலை அதனால் நானும் செய்யலை என்பது என்ன அர்த்தம் உன்னோட ரவுடி ஆட்சிக்கு அவங்க ஆட்சி எவ்ளவோ மேல்  
by m ஸ்ரீனிவாசன்,erode,India    16-01-2010 10:51:28 IST
 Hi,
How long will he cheat people by releasing statements like this.
A common man not necessarily having a knowledge in accounts can easily understand the AG''''s release. But, our CM interprets the statement of his favour.
The problem now is, who is going to make him accountable for this mistake.
He should publicly admit his fault that the money meant for some crucial schemes were knowingly for the benefit of his family and party to remain in the seat of power, spent towards freebies.
When he has no resource to spend for his own schemes, he is taking it from some other which he can not use. This is a scandal done scientifically, already infamous phenomena for MK and DMK.
At this juncture, CM and his cabinet declaring that they are having enough funds for Housing scheme.
People have to address this.
 
by S Adi,Chennai,India    16-01-2010 10:49:14 IST
 Dinamalar has twisted the report, I read in all other papers it says, the money spent on freebies in six districts (not in all districts as claimed by the paper and viewers) is shown in other accounts, it doesn’t say that money from other things are used for freebies please read other papers also, people who criticize freebies why not you be critical about subsidies given by Central government for LPG for house holds, LPG connections are mostly used by middle class, upper class people. For every 1 gas connection you are eligible to get 10 cylinders the subsidies amounts to at least 2 thousand per year, why cant you viewers and media write to stop these subsidies and ask govt to charge at market rates (why should it subsidies for tax payers and rich people), if subsidies are given endlessly everybody is quiet but one TV everybody cries. 
by e சுந்தரராஜ்,vellore,India    16-01-2010 10:05:19 IST
 ஜெயலலிதா ஆட்சியீல செய்த தவறுகள் தான் எங்கள் ஆட்சியல் நடக்கிறது என்றும் சொல்லும் முதல்வரே அது மாதிரி தவறுகள் நடக்க கூடாது என்று மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள் பேசாமல் நீங்களும் ஒரு புடவையை கட்டி கொள்ளலாமே  
by n anbu,trichy,India    16-01-2010 09:55:56 IST
 Dear Editor:

Please forward all readers comments to CM. Let him know how the tamil nadu people are so much against his style of ruling. CM is always trying to hide his weakness in referring Jayalalitha’s ruling. This is too bad.
 
by vs rajan,Chennai,India    16-01-2010 09:52:11 IST
 தமிழக மக்கள் தப்பித்தவறி பொறுப்பாக இவர்கள் குடும்ப தொலைக்காட்சியைப் பார்ப்பதை விட்டு,உழைத்து முன்னேறி விட்டால்?? படித்து அறிவாளிகளாகிவிட்டால்,
அழகிரியின் ஐநூறு, ஆயிரத்திற்கு விலை போகமாட்டார்களே!
ஏ.எஸ்.இ.ஆர்.,-அசர் ஆய்வு ப்படி பெரும்பாலான மாணவர்கள் (இலவச டி வீ யில் மானாட மயிலாட பார்த்துவிட்டு) மூளையை மழுகடித்துக்கொண்டு விட்டர்களாம்!
இத இத இதைத்தானே எதிர்பார்த்தார்கள் ஆளும் குடும்பத்தினர்!
தமிழ்நாட்டின் பெயரை ''''இலவச பிச்சை நாடு'''' என மாற்றிவிடலாம்!  
by V மணி,Chennai,India    16-01-2010 09:29:51 IST
 ஜெயலலிதா தவறு செய்தார் நானும் தவறு செய்கிறேன்.

Mu ka, grow up... Its like child play not a matured person answer...  
by Key,Bangalore,India    16-01-2010 09:08:18 IST
 ''''''''தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 121 கோடி ரூபாய், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.''''''''

முழு பூசணி காயை சோற்றில் மறைத்த கதையா இருகிறதே முதல்வரே சித்தம் கலங்கி விட்டதா?

இங்கு மக்கள் பசி கொலை விபத்து வேலை இல்ல திண்டாட்டம் இந்த கொடுமைகளை தாங்கி கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் இலவசம் என்ற பெயரில் நீங்கள்
மக்களை நாசபடுதி அவங்க வாழ்வோடு விளையாடி கொண்டு அழித்துக்கொண்டு கேவலமாய் கொண்டு போகுவது சரியா?
சும்மா டிவி பாத்துகொண்டு இருந்தால் போதுமா? உழைக்க வேண்டாமா?
இளைய சமுதையத்துக்கு வேலை கொடுங்கள் ஓய்வு பெற்றவர்களுக்குவேலை என்று கூறி இளைய சமூகத்தினரை வேதனை படுத்துகிறிகள்
ஒருவர்மேல் ஒருவர் குற்றம் சொல்வதை முதலில் நிறுத்துங்கள்

இப்பா மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்யுங்கள்
 
by nila mdu,madurai,India    16-01-2010 08:30:04 IST
 சபாஷ் வாசகர்களே..உங்களின் கருத்துகளுக்காத்தான் காத்திருந்தேன். நாரடித்துவிட்டீர்கள்..MUTHALVARE..இனியும் நீங்கள் வார்த்தை ஜாலங்களால் யாரையும் ஏமாற்ற முடியாது.
வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள் உங்கள் கோபம் தீர அந்த தணிக்கை அதிகாரியை மேல் தட்டு மக்கள் ''''ஜெ''''வின் ஆலோசகர் என்று இரட்டை அர்த்தங்களால் அர்ச்சித்து விடுங்கள்.
மகாமகம் பற்றி எங்கள் எல்லோருக்கும் தெரியும்..உங்களின் திறமை பற்றியும் தெரியும்..அரசியல் பண்பாடு தெரியாத ஒரு நபர் சபாநாயகர் பதவிக்கு தேவையா? உங்கள் பாஷையில் சொன்னால் ''''ஆட்டு'''' தாடி போல. கொடுமையடா சாமி.
வெற்றிவேல் துடித்தபோது வேட்டியை மடித்து கொண்டு அமைச்சர் பன்னீர் துடித்ததை(?) நீங்கள் மட்டும்தான் பார்த்து துடித்து, இப்போ அதுபற்றி வக்காலத்து வாங்குறீங்க..
சுனாமின்போது நீங்கள் ஆஸ்பத்திரியில் ஒளிந்துகொண்டது பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஏன் எனில் நெஞ்சுவலி வருவது திடீர் சுகவீனம் எல்லாம் ''''அரசியலில்'''' சாதாரணமப்பா..
ஜயாவை பற்றி எங்களுக்கும் தெரியும்..உங்களை பற்றி எம் ஜி ஆர் எவ்ளோ சொன்னதால்தான் இன்னும் மக்கள் உங்களை தூரவே வைத்துள்ளார்கள் என்பதுவும் உங்களுக்கு புரியும்.
கிடக்கறது கிடக்கட்டும் தலைவா எதோ அடுத்த ''''பில்கேட்ஸ்''''இந்தியாவிலிருந்து வர சான்ஸ் இருக்காம்..எப்படியாவது அந்த இடத்தை விடாம புடிச்சு ''''ஏழை''''பங்காளர்னு யார் விட்டாவது பட்டம் வாங்குங்கோ..
மறக்காம உடன்பிறப்புக்கும் கொஞ்சமா கவனிச்சிடுங்கோ..அவுங்களும் கலிபோர்னியா போகவேண்டாமா? 
by P சேகர்,SINGAPORE,Singapore    16-01-2010 08:28:40 IST
 1963 ல் MGR தலைவர் என இவரைத்தான் சொன்னாரா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் 1989 ல் என்ன நடந்தது என்று சம்மந்தம் இல்லாமல் கருணாநிதி பேசுகிறார்.இப்படி மக்களை குழப்பும் தரம்கெட்ட அரசியல் இவருக்கு மட்டுமே உரித்தானது. சபாநாயகர் அணைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம் சொல்ல இயலாது என்பது சரிதான் ஆனால் பிரதான எதிர்க்கட்சி தலைவர் வணக்கம் செலுத்தும்போதும் அதை கவனிக்க வில்லை என்பது அபத்தமானது.  
by N பாலகிருஷ்ணன் ,Ramnad,India    16-01-2010 08:07:11 IST
 இதுவரை உங்கள் அமைச்சர்கள் சொன்ன பொய்களை ஒருமுறை நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள். அமைச்சர்கள் வேடிக்கை பார்த்ததைதான் உலகமே வீடியோவில் பார்த்ததே? இன்னும் எதற்கு இந்த புழுகு புழுக வேண்டும்? மஹா மக நிகழ்ச்சியில் நடந்தது ஒரு விபத்து. அது விபத்தாக இருந்தபோதும் ஜெயலலிதாவை பார்க்க சென்ற கூட்டத்தால் ஏற்ப்பட்டது என்பதை மக்கள் ரசிக்காததால்தான் அவர் ஆட்சியை பறிகொடுத்தார். அனால் இன்று உங்கள் ஆட்சியில் நடந்திருப்பது கொலை! அந்த கொலைக்கலத்திலே கொல்லப்பட்டது உங்கள் அமைச்சருக்கு பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரி. அவர் அனு அனுவாக துடித்து செத்தபோது வேடிக்கை பார்த்தது உங்கள் அமைச்சர்கள். மகா மக விபத்துக்கே அட்சியை மாற்றிய மக்கள் இது போல கொலைக்கும அதை மறைக்க சொல்லும் பொய்களுக்கும் என்ன செய்வார்கள்? யோசித்து பேசுங்கள் முதவரே!  
by K Mathumitha,shivs_14@yahoo.co.in,India    16-01-2010 07:30:43 IST
 ''After 2 to 3 years tamil nadu people Suffer .He don''t care ''
 
by s Shan,Singapore,India    16-01-2010 07:20:03 IST
 தணிக்கை அதிகாரி கூடிய சிக்கிரம் தண்ணி இல்லா காட்டிற்கு மாற்றபடுவார். இதுதான் திமுக பாரம்பரியம்.  
by திரு ஜெய்,கனடா,Canada    16-01-2010 07:16:50 IST
 The behaviour of the leaders of both D M K and A D M K and allied parties such as PMK etc. are getting worse day by day. Unless or untill these parties are removed from the political scene of Tamilnadu, Tamilnadu will not prosper. We have seen the decline of behaviour of Tamil people which has gone bad since the time the D M K took charge of the Tamilnadu administration in 1969 initially very slowly due to Annadurai and has gone very fast since Karunanidhi had taken charge of Tamilnadu. The behaviour starting from Railway porters , autorickshaw drivers upto ministers and chiefminister is highly disgusting. It would be better if Tamilnadu prople remove both these parties and allied ones also from the political scene and get back the glory of Tamilnadu that was exixting at the time of India''s Independence at the earliest and thats what people like me are praying every day. 
by gvrao G V Rao,NJ USA,United States    16-01-2010 06:21:29 IST
 thiru mu ka avarkle makkal kural TRR avarkal ezhudhiyadhu ellaam ungalukku ninaivirukkiradhaa alladhu jayalalitha patri sonnadhu mattum thaan ippodhu ninaivu vandhadhaa! en ippadi ungal meedhu neengale mannai vaari thootri kolkireerkal. ippodhaiya thalai muraiku 1972-76 kadhaikal eduvum theriyaadhu neengalaaka en maatikolkireerkal


 
by p hariharan,chengalput,India    16-01-2010 06:11:17 IST
 At first, whoever sitting in the chair (or trying to occupy), must think it is not a chair in a charity shop. At first, stop all those free non-sense items and think about up-lifting of people life-style. By giving one or two items freely in every election won''t help anymeans to any family. Second, stop fighting yourself against each other. You are not living as neighborhood and better think about the government. You are running a business in the capital of tamilnadu. Remember it is a government which is going to decide fate of a state. Don''t show others mugged reports. All you guys, whoever you are, just touch your help and tell us how many thousands crores you are wasting everyday instead of thinking about people.  
by M Palani,London,United Kingdom    16-01-2010 05:49:14 IST
  இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் இறந்த சம்பவத்தை இப்போதுதான் youtube இல் பார்த்தேன். மனதளவில் மிகவும் பாதித்தது. தமிழர்கள் நன்றாக பேசுகிறார்கள். நிறைய உணர்ச்சிமிக்க சினிமா பாக்கிறார்கள். ஆனால் எவரும் உதவி செய்ய தயாரில்லை. அமைச்சர்களும் அதைதான் செய்தார்கள். ரத்த கரை பட கூடாது என தண்ணீர் பாட்டிலை உயர்த்திபிடித்த அதிகாரி ஒரு சிறந்த தமிழனுக்கு உதாரணம். கிட்டத்தட்ட நூறு பேர் வெற்றிவேல் சாவதை வேடிக்கபார்த்தனர். அதனால்தான் என்னவோ கருணா அமைச்சர்களை காப்பாற்றி உள்ளார் 
by ravi,toronto,Canada    16-01-2010 05:24:53 IST
 செலவு எதற்கு அல்லாட் செய்யபட்டதோ அதற்குத்தான் செலவளிக்காவேண்டும் அல்லாது மற்றதிட்டங்கல்லுக்கு அல்லாட் செய்யும்போது அது தவறஆனதுதான்  
by chitti,upt,India    16-01-2010 05:13:17 IST
 அடுத்த வீட்டுக்காரன் நெய்
எம் பொண்டாட்டி கை
என்ற முறையில் நீங்கள் நிதி நிலை தாக்கல் செய்துள்ளீர்கள் என்று எங்களுக்கு தெரியும்.
சபாநாயகர் ஜெயாவுக்கு வணக்கம் தெரிவித்தால், அவர் நாளைக்கு சபாநாயகராக இருக்க மாட்டார் என்ற விஷயம் தெரிந்ததால் தான் அவர் வணக்கம் தெரிவிக்கவில்லை.
நீங்கள் கொடுத்த இலவச கலர் டிவி இல் நமது அமைச்சர்கள் எப்பிடி வெற்றிவேலை சாகவிட்டு வேடிக்கை பார்த்தார்கள் என்று நாடே பார்த்தது. அரசு உங்களுக்கு இலவச கலர் டிவி கொடுக்கவில்லையா?..நீங்கள் ஏன் அதை பார்க்கவில்லை.
சுனாமியின் பொது ஜெயாவின் செயல் நிச்சயமாக பாராட்டத்தக்கதாக இருந்தது. ஆனால் நீங்கள் சொன்ன ஜெயாவின் மகாமக கொலை, திரைப்பட நகருக்கு தன பெயர் வைத்து கொண்டது, மற்றும் பல்கலைகழகத்திற்கு வேந்தராக சூடிகொன்டது அனைத்தும் உண்மை. நீங்களும் அதைத்தானே செய்வீர்கள். மக்களுக்கு நல்லதா செய்ய போகிறீர்கள்?

 
by ரவி,TORONTO,Canada    16-01-2010 03:06:32 IST
 MK govt,in 1974,gave permission to DK''s Veeramany,to instal,Karunanidhi''s statue,on Anna Salai,while he is still alive. 
by R Karuppiah Sathiyaseelan,Kinshasha,Congo (Zaire)    16-01-2010 02:54:00 IST
 போங்கடா நீங்குளும் உங்க அரசியலும் , ஆக மொத்தமா ரெண்டு பெரும் நல்லது செய்யல.
அவன் ஆட்சியில் பத்து பேர கொன்னான் நான் ஒருத்தன தான் கொன்னேன் நு பெசுஅரங்க , வெட்கமா இல்ல. 
by ராஜேந்திரகுமார்,madurai,India    16-01-2010 02:39:43 IST
 இது தவறான விளக்கம்..உங்கள் ஆட்சியில் யார் தவறை சுட்டி காட்டினாலும்...உடனே ஜெயலலிதா ஆட்சியில் என ஆரம்பித்து விடுகிரிர்கள்..புள்ளிவிவரம் எல்லாம் சொல்கிறீர்....உங்கள் ஆட்சியில் தவறுகள் இல்லையா? நீங்கள் உங்களின் குடும்ப நலத்தை பார்க்காமல் ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே எல்லாம் செய்கிறிர்கள் என உம்மால் சொல்லமுடியுமா?

தணிக்கை குழு கேட்ட கேள்விக்கு
ஜெயலலிதா திரைபட நகர்கும் என்ன சம்மதம்? தமிழக வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட நிதியை நீங்கள் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு செலவு செய்து விட்டிர்கள்..இந்த பதில் உங்கள் அறிக்கையில் இருக்கு..அதை விட்டு உங்கள் வார்தைஜாலத்தால் மக்களை முட்டாள் ஆக்குவதை நிறுத்துங்கள்..

தணிக்க குழு அப்படி சொல்லவில்லை இப்படி தான் சொல்லி இருக்கு என...வார்த்தைகளை மாற்றி அறிக்கை விட்டால்..உண்மை பொய்யாகி விடுமா?

எம்ஜிஆர் பாடிய பாடலை அது உங்களுக்காக தான் என மாற்றி சொல்லி விட்டிர்கள்..நல்லவேளை ஜெயலலிதா
திருடாதே..பாப்பா திருடாதே....இந்த பாடல் வரிகளை பாடலை..

இந்த சூழ்நிலையில் தூங்காதே தம்பி...
தூங்காதே..சோம்பேறி என்ற பெயரை .. வாங்காதே ஏன்தான் சரி...உங்கள் வீணாப்போன யாருக்கும் பயன் அற்ற இலவசங்களால் மக்களை சோம்பேறிகள் ஆக்கியது தான் உங்கள் இந்த ஆட்சி..கேட்ட கேள்விகளை புரிந்து பதில் சொல்லுங்கள் முதலில்...அதை விட்டு முந்தியா ஆட்சி ராமாயணத்தை பாட வேணாம்..அலுத்து விட்டது..போதும்யா..  
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    16-01-2010 02:29:27 IST
 கருணாநிதி அவர்களே தொண்ணுறு ஆயிரம் கோடி கடன் இருக்கையில் இலவச திட்டம் தேவையா? கடன் வாங்கி வாங்கி தமிழ்நாட்டை கடன் நாடாக்க வேண்டுமா?

நீங்கள் தலைவர் ஆகவேண்டுமென்று தானே அது வரை திமுகவில் இல்லாத தலைவர் பதவியை உருவாக்கி நீங்களே தலைவர் ஆனீர்கள்.

ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்டு நாடே கொந்தளிப்பில் இருக்கும் போது குடும்பத்துடன் குதுகலமாக சங்கமம் கலை நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கிறீர்கள்.

அமைச்சர்கள் வேடிக்கை பார்த்ததை நாடே வீடியோ வில் பார்த்து மனம் பதைத்தது.

காலை எழுந்தவுடன் பேப்பர் படித்தால் சங்கிலி பறிப்பு, பூட்டை உடைத்து திருட்டு, கொலை, கொள்ளை என்பது அன்றாட நிஹழ்ச்சி ஆஹி விட்டது.௦௦௦௦

தவறினை யார் சுட்டிக்காட்டினாலும் திருந்தப்பாருங்கள். அதைவிட்டு விட்டு பழைய கதைகளை சொல்லி மக்களை திசை திருப்பாதீர்கள்.

என்னதான் இலவசங்களை கொடுத்து மக்களை மயக்கினாலும் இப்படியே போனால் மக்கள் உங்களை தூக்கி எரிய தயங்க மாட்டார்கள். ஜாக்கிரதை!

எப்படி நீங்கள் பதவிக்கு வர ஜெயலலிதா தவறுகள் செய்தாரோ அதே தவறுகளை நீங்கள் செய்து மீண்டும் ஜெயலலிதா பதவிக்கு வர
வழி காட்டுகிறீர்கள்.

வாழ்த்துக்கள் 
by K நசீர்,JEDDAH,Saudi Arabia    16-01-2010 02:26:37 IST
 முதல்வர் நேர்முகமான பதில் அளிக்க வில்லை. அரசியல் ஆதாயங்களுக்கான இலவச திட்டங்களுக்கு பொது பணத்தை அள்ளி
இறைத்திருப்பதை இங்கே நியாய படுத்த முயல்கிறாரோ?
வெட்க்ககேடு! இலவச தொலைகாட்சி எவ்வகையில் வளர்ச்சியை தரும் என்று விளக்க முடியுமா. மின்சாரம் இல்லா வீடுகளிலும் இலவச தொலைகாட்சி தூங்கி கொண்டிருப்பது
தெரியாதோ?  
by V சச்சிதானந்தன்,chennai,India    16-01-2010 02:16:49 IST
 அரசாங்க சொத்த என்னவோ உங்க சொந்த பணம் மாதிரி எடுத்து இனாமா கொடுத்துட்டு இப்ப இப்படி அந்தர் பல்டி அடிக்ரீங்களே அய்யா !கலர் டிவி கொடுத்தது இருக்கட்டும் எப்ப தடை இல்ல மின்சாரம் கொடுக்க போறீங்க அய்யா??
 
by M உமாபதி,TIrupur,India    16-01-2010 01:46:49 IST
 த்து, மாத்தி மாத்தி அறிக்கை விட்டுகிட்டே இருக்குறாங்களே தவிர யாரும் உருப்படியா ஒன்னும் செய்ய காணும்.  
by தில்லாலங்கடி ,தில்லையாடி,India    16-01-2010 00:55:17 IST
 முதல்வர் அறிக்கை கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இருக்கு.மேலும் கீழும் உங்கள் ஆட்சி நடக்கும்பொழுது மத்திய தணிக்கைக் குழு உங்கள் தவறை மறைமுகமாக சுட்டிக்காட்டி இருப்பதே ஒரு பெரிய வீர தீர செயல்தான். இன்னும் உங்களை நேரடியாக நீங்கள் செய்தது தவறு என்று சொன்னால் சம்பந்த பட்ட அதிகாரி என்ன மாதரியான துயரங்களை அனுபவிப்பார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆகவே நீங்கள் செய்தவற்றை ஞாய படுத்தாதீர்கள். இதே நிலைமையில் நாடு சென்றால் கூடிய சீக்கிரம் தமிழ் நாட்டில் ஒரு ஆப்பிரிக்காவை பார்க்க வேடியதுதான். ஜெயலலிதா ஆட்சியில் திருப்தி இல்லாமல்தானே மக்கள் தி மு க விற்கு ஒட்டு போட்டார்கள்? இபோழுது ஆ தி மு க ஆட்சியே பரவா இல்லை என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு ரவுடிகளின் சாம்ராஜ்யமும் விலைவாசி உயர்வும் மக்களை ஆட்டி படைக்கிறதே? முதல்வர் எதற்கும் நேராக பதில் அளிப்பதை விட்டு விட்டு கேள்வியும் நானே பதிலும் நானே அறிக்கையில் சென்ற ஜெயலலிதா ஆட்சிகளை குறை சொல்லி தனது தவறை மறைக்க பார்த்தால் 2011ல் மக்கள் தங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். 
by R Sivakumar,Los Angeles2011,India    16-01-2010 00:46:45 IST
 ''''தமிழக அரசின் முக்கிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர், ''''டிவி'''', காஸ் அடுப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்தாண்டு மார்ச் வரை கிராமப்புறங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் பற்றி, தணிக்கை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.கிராமப்புறங்களில் குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதல் போன்ற நீர் ஆதார வசதியை மேம்படுத்துதல் மற்றும் உள் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக, ''''அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி'''' திட்டம் உள்ளது.ஆறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 120.98 கோடி ரூபாய், முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் ''''டிவி'''', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்சன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம்.
இவைகள் தமிழக, புதுச்சேரி இந்திய தணிக்கை முதன்மை அதிகாரி சங்கர் நாராயணன் தெரிவித்துள்ள கருத்துக்கள்
அநேகமாக நாராயணனும் நரேஷ் குப்தா போல் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக அஞ்சா நெஞ்சனிடம் இருந்து அறிக்கையை எதிர்பார்க்கலாம். 
by M Amanullah,Dubai,United Arab Emirates    16-01-2010 00:15:57 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்