Advertisement
அரசியல் செய்திகள்
வீர வணக்க நாள் கூட்டத்தில் ஜெ., கலந்துகொள்ளாதது ஏன்? ஸ்டாலின் கேள்வி
ஜனவரி 27,2010,00:00  IST

Latest indian and world political news information

திருவள்ளூர் : "தனது 14வது வயதிலேயே சக பள்ளி மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு தமிழ்க் கொடி ஏந்தி போராட்டம் நடத்தியவர் தான் முதல்வர் கருணாநிதி' என, வீர வணக்க நாள் கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தி.மு.க., சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் மொழிப் போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் வீர வணக்க நாள் கூட்டங்கள் நடைபெற்றன. திருவள்ளூரில் நடந்த கூட்டத்திற்கு, தொகுதி எம்.எல்.ஏ.,வும், கட்சியின் மாவட்ட செயலருமான சிவாஜி தலைமை தாங்கினார்.கூட்டத்தில், துணை முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், "என்றுமே தியாகிகளை மறக் காத ஒரே இயக்கம் தி.மு.க., தான்.இன்றைக்கு பல கட்சிகள் வீர வணக்க நாள் கூட்டங்களை அறிவித்துள்ளன. நான் அவர்களை குறை சொல்வதற்காக சொல்லவில்லை.நம்மைப் போலவே, அ.தி.மு.க., வும் இன்று வீர வணக்க நாள் கூட்டங்களை நடத்துவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் இதுவரை அக்கட்சி சார்பாக நடத்தப்பட்ட வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்களில் ஏதாவது ஒரு கூட்டத்திலாவது ஜெயலலிதா கலந்துகொண்டுள்ளாரா? ஏன் கலந்து கொள்ளவில்லை.இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தி.மு.க., தான் போராடியது. அதற்காக சிறையிலேயே உயிர் நீத்தவர் தான் தாளமுத்து நடராசன். அவரைப் போலவே சின்னசாமி, தீரன் சிவலிங்கம், சண்முகம், சாரங்கபாணி, ஆசிரியர் வீரப்பன் என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.அவர்களது தியாகங்களை போற்றும் விதமாக தான் வீர வணக்க நாள் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தனது 14 வயதில் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே தமிழுக் காக தமிழ்க் கொடி ஏந்தி போராடியவர் தான் முதல்வர் கருணாநிதி.பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கூரை வீடுகளே இல்லாத நிலையை உருவாக்க, கலைஞர் வீட்டு வசதி திட்டம், கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் 21 லட்சம் கூரை வீடுகள் காங்கிரீட் வீடுகளாக மாற்றப்படும். முதல்கட்டமாக மூன்று லட்சம் வீடுகள் கட்டப்படும்' என்றார்.முன்னாள் அமைச்சர் சுந்தரம், முன்னாள் எம்.பி., ஆ.கிருஷ்ணசாமி,  ரங்கநாதன் எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவர் பொன்.பாண்டியன், திரு வள்ளூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் வி.எஸ்.சண்முகம், வி.ஜி.ராஜேந்திரன், காயத்ரி ஸ்ரீதரன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.அம்பத்தூர் நகராட்சி ம.தி.மு.க., கவுன்சிலர் சுப்பையா, கூளூர் ஜெயலலிதா பேரவையைச் சேர்ந்த தேவகி ராஜேந்திரன் உட்பட 200 பேர் கட்சியில் இருந்து விலகி துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க., வில் சேர்ந்தனர்.திருவள்ளூர் நகர செயலர் கா.மு. தயாநிதி நன்றி கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ஹாய் ஓமன் என்.சரவணா, உனக்கெல்லாம் ஒழுங்கா தமிழே எழுத வரல பிறகு எதுக்கு நீ எல்லாம் விமர்சனம் எழுதறே! போயி ஒன்னாம் கிளாஸ் படி. 
by r george,Coimbatore,India    27-01-2010 22:16:11 IST
 hi,
These selfish guys wont allow you people to grow if u listen to them. Tamil is necessary but not essential one. If u want to move out of TN and grow as a person learning hindi is very very important.Politicians will show example ''''In China people speak CHINESE and so they grow''''. But let these cheaters understand that in CHINA from north to south and east to west only one language and that is chinese. Like wise in INDIA in maximum states people can speak HINDI and hence reading HINDI is also a must for a TAMILIAN.Otherwise our state will be left behind in the race for development.
Finally love TAMIL, but it is essential to marry HINDI and ENGLISH
 
by S RAVI,hyderabad,India    27-01-2010 21:41:03 IST
 பாமர மக்களை ஏமாற்றும் நாடகம் எவ்வளவு நாள் நீடிக்கும் பார்க்கலாம்?  
by s SELVAKUMAR,Qatar,India    27-01-2010 19:42:18 IST
 Dear Friends,

Please note that Gujarat High court has declared that HINDI is not national language stating that therse is no official records about hindi is an national language. So Stalin/karunanidhi need not worry about Hindi

Please ask Stalin to make English is a medium of learning from LKG TO HIGHER STUDIES AND TAMIL ALSO ONE OF THE SUBJECT TILL THE HIGHER STUDY. THEN AFTER 20 YEARS TAMIL NADU WILL HAVE 5 CRORE ENGLISH SPEAKING TALENTS WILL COMPETE GOBALLY. ALSO RICH ONLY SPEAK ENGLISH WILL GO. ALSO EVERY ONE WILL LEARN TAMIL SIMULTENEOUSLY. 
by m தியாகராஜன்,mumbai,India    27-01-2010 19:37:14 IST
 டை என்னடா தேவை இல்லடா உன்னோட பேட்ச்சு.ஒழுங்கா தமிழ்நாடு முன்னேத்ஹுவடர்க்கு உங்க அரசியல தயவு செய்து விட்டு கொடுட்ட்திங்கான போதும் தமிழ்நாடு முன்னேறும்.அப்பா வண்டு வீரவணக்கம் சொல்லு.
 
by n saravanan,oman-muscut,India    27-01-2010 18:54:43 IST
 அன்புள்ள தமிழ் அன்பர்களே,திரு மு.க. குடும்பம் தமிழ் தமிழ் என்று சொல்லி கொண்டே நம் அனைவரையும் ஏமாற்றி வருகின்றனர்.ஹிந்தி நம் தேசிய மொழி.தமிழ் நம் தை மொழி.ஹிந்தி இல்லாமல் தமிழகத்தை தாண்டி பிழைக்க முடியாது.பெங்களுரு விமான நிலையத்தில் ஹிந்தி தெரியாமல் நான் பட்ட அவஸ்தை என்னால் மறக்கவே முடியாது.அடுத்த தலைமுறையாவது ஹிந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்று வாழ்வில் மேன்மை பெற வழிவகை செய்யுங்கள்.வாழ்க தமிழ்,வளர்க தேசியம். 
by L. பிரவீன்,singapore,Singapore    27-01-2010 18:37:24 IST
 hi mr.jopet!
i want to clear you a thing that '''' because of Mr.M.K''''s aggressive policies towards hindi, you know, we lacked quality education! Central gvt''''s policy is to open one kendriya vidyaalaya school per district and in TN we don''''t have it! He denied our rights for his own welfare! Instead of thinking like this, as an elderly man, he should actually guide us, not spoil us! In my point of view he''''s doing racialism in my country,INDIA in the name of language!'''' 
by s smsg,CHENNAI,India    27-01-2010 17:28:30 IST
 hi mr.jopet!
i want to clear you a thing that '''' because of Mr.M.K''''s aggressive policies towards hindi, you know, we lacked quality education! Central gvt''''s policy is to open one kendriya vidyaalaya school per district and in TN we don''''t have it! He denied our rights for his own welfare! Instead of thinking like this, as an elderly man, he should actually guide us, not spoil us! In my point of view he''''s doing racialism in my country,INDIA in the name of language!'''' 
by s smsg,CHENNAI,India    27-01-2010 17:17:30 IST
 Dear all,
Tamil is a language used from ancient world. We all should accept that “C.M” or D.C.M”, can’t even read or write ancient Tamil Epics, then how they development Tamil Language. M.Karuna cannot develop tamil, but he can develop thourgh tamil. In tamil epics their will be good grammar (Back bone for an Language). M.K tamil doesn’t have proper grammer in his writing.
He has good presence of mind and use the situation well, and divert the problem, he is good in politics to cheat other. He is not an open minded and straight forwarded.
Tamil language neither fall by anyone nor raise by individual , it is true.

 
by Y Yuvaraj ,Chennai,India    27-01-2010 16:17:18 IST
 இப்படி எதிர் கட்சியெய் குறை சொல்லுவதை விட்டு விட்டு மக்களுக்கு நல்லது செய்ய யோசிங்க.உங்க வேலையை செய்வதில் கவனம் செலுத்துங்கள். உங்க வேலைய நீங்க பாருங்க, 
by R TAMILSELVI,coimbatore,India    27-01-2010 14:36:52 IST
 அய்யா வீர கணபதி அவர்களே,

இப்படி தமிழ் தமிழ் என்று கூறியே நாட்டை முன்னேற விட மாட்டர்கள் போல...  
by S சுரேஷ்,spain,India    27-01-2010 13:45:25 IST
 வீர கணபதி,சென்னை அவர்களே!!!! தமிழ் தேசிய மொழியாகி, Air India வில் தமிழில் அறிவிப்பு வந்தால் காவிரியும், பாலாறும் வற்றாமல் ஓடுமா. ஹிந்தி தெரியாமல் உங்களால் தமிழ் நாட்டை வீட்டு போய் பொழைக்க முடியுமா???  
by M ஸ்ரீதர் ,Erode,India    27-01-2010 12:40:52 IST
 இதை தவிர வேற வேலையே இல்லையா  
by r கணேசன்,tamilnadu,India    27-01-2010 12:10:13 IST
 யோவ் என்ன யா வீரவணக்கம் ....
நடுடின் பொருளாதரம் தைபத்தி பேச வக்கு இல்ல இதில் வீர வணக்க நாள்..

sah_sst@yahoo.com 
by s mohamed shaheed,Al-khobar,Saudi Arabia    27-01-2010 11:55:33 IST
 ''''''''தனது 14வது வயதிலேயே சக பள்ளி மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு....''''
படிக்கிற நேரத்துல ஒழுங்கா படிச்சிருந்தா...நாடு உருபுட்டு இருக்கும் . 
by k விஜய்,Hyderabad,India    27-01-2010 11:47:56 IST
 தமிழா... தமிழா பலரால் பல கட்சிகளால் சிதற பட்டு இருக்கும் நீ ஒன்று சேராதவரை ஒன்றாக ஒற்றுமையாக குரல் கொடுக்காதவரை..உன்னை அறிந்து.. உன் நிலை அறிந்து.. நீ போராடதவரை.. நீ இப்படியே எல்லோருக்கும் வாழ்க போட்டு வாழ வை...நீ அங்கேயே நில்லு..மற்றவர்கள் உன் மேல நடந்து முன்னேறட்டும்.. தமிழகத்தை பாகம் போட்டு விற்கட்டும் அயல் மாநிலதர்க்கு..அயல் நாட்டினர்க்கும்... தமிழா உன்னை நீயே என்று அறிந்துகொள்ள போகிறாய்?
வீர வணக்க நாள் என சொல்லிக்கொண்டு அங்கேயும் போய் அரசியல் பேசுவானேன்..  
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    27-01-2010 11:33:53 IST
  அய்யா தமிழ் தியாகிகளே
கத்தரிளிருந்து கேரளாவுக்கு எத்தனையோ விலை குறைந்த விமானங்கள் இருக்கு , ஆனால் சென்னைக்கு ? இதை யாரும் கேட்க்க யாரும் இல்லையே தமிழன் என்ன இளிச்சவாயனா ?. கேரளாவுக்கும் போகும் விமானம் சென்னைக்கு போவதுதில் என்ன சிரமம் ? கேரளா என்ன தனி நாடா ? தமிழன் என்ன பாவம் செய்தான் ? நிச்சயமா இதை தினமலர் உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று நம்புக்றோம் . தமிழனுக்கு இருப்பது நம்ம்பிக்கை மட்டுமே ,,,,,,,,  
by B நரேந்திர குமார் ,male,Maldives    27-01-2010 11:32:55 IST
 ayya thamizh thiyakigale
kaththarilirunthu keralavukku eththanaiyo vilai kuraintha vimaanankal irukku, aanaal chennaikku? ithai yaarum ketkka yaarum illaye thamizhan enna ilichavaayana?. keralavukkum pokum vimaanam chennaikku povathuthil enna siramam? kerala enna thani naada? thamizhan enna paavam seithan? nichchayama ithai namathu thinamalar uriya nadavadikkayai edukkum enru nambukrom. thamizhanukku iruppathu nammpikkai mattume,,,,,,,, 
by T Nilapriyan,chennai,India    27-01-2010 10:18:23 IST
 கருணாநிதி கலந்துகொள்ளாத இது போன்ற பல தேசபக்தி கூட்டங்கள் பல உள்ளன அவைகள் பற்றி ஸ்டாலின் பேச மாட்டார். ஜெயலலிதா கருணாநிதி இருவரும் இரு துருவங்கள் அரசியல் காழ்புணர்ச்சி கொண்ட அரசியல்வாதிகள் எதிர் கட்சி தலைவர்கள் எதிரிக்கட்சி தலைவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளதவரையில் தமிழ்நாட்டின் தலைவிதி மாறாது.h 
by K S,Bangalore,India    27-01-2010 10:02:04 IST
 

Dear all,

First of All, It’s nothing wrong in talking about JJ and Government’s future plan and achievements for Tamilan
in such aFunction.
Some people comment like Mr. DCM & his family had done nothing to Tamil.
My dear Tamil Brothers, Please, don’t be over exaggerated and scold Mr. DCM.

JJ could talk anything in anywhere and relate DMK blindly for all incidents happening in Tamil nadu, but
Mr. DCM should talk about only Tamil in such functions. What kinds of comments are yours?
If we never remind Tamilan he would forgot all about her.
Mr. DCM and his family had done lots of things for Tamil and Tamilan.

One thing we should know. DMK never says we should only study Tamil. Whatever the language we wish to
study, we can.
But, they oppose that there shouldn’t be a compulsion for studying Hindi and the govt documentation should be
in Hindi.
Please, try not to understand Thiru.MK in wrong way.
But, imagine in our rural place, people struggle to study Tamil and write incorrectly. If you go and impose
Hindi in their studies how could they cope up?
Moreover, Tamil is the only language contains lesser Sanskrit words, that’s why initially it’s a bit difficult for
our Tamil children. But, whereas the other languages like Telugu Malayalam kanadam all have contained more
Sanskrit words and that’s why, studying Hindi is not a big deal for them.
But, Its not a big deal to study Hindi, by the time we complete our 10 or 12 year basic studies. But, it’s a very
big deal for rural children to study Hindi during their primary schooling.

DCM sir! Please, go ahead and talk about DMK achievements, as Tamilans are so forgetful.
 
by t jopet,singapore,Singapore    27-01-2010 09:54:16 IST
 Mr. karunanithi family always saying tamil tamil but they never follows, how long making us a fool let us know? 
by MP manoj,DUBAI - DUBAI INVESTMENT PARK,United Arab Emirates    27-01-2010 09:15:36 IST
 தமிழ் என்று சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டாம்  
by G Saravanakumar,Rajapalayam,India    27-01-2010 08:45:17 IST
 Initially Father plays very good role in டிராமா.Now
சன். 
by S Vinodh kumar,madurai,India    27-01-2010 08:39:42 IST
 ஜாதி , மொழி , இனம் , இதை பற்றி பேசாமல் யாராவது அரசியல் நடத்துங்கப்பா .  
by D SREETHAR,SURANDAI. TIRUNELVELI,India    27-01-2010 08:10:53 IST
 தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக முதல்வரும் துணை முதல்வரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு வரும் ஏர் இண்டியா விமானங்களிலும் தமிழக விமான நிலையங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும். உலக தமிழ் மாநாட்டுக்கு முன்பாக இவை நடைபெற தமிழக அரசு துரிதமாகச் செயல்பட்டு நடைவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்மொழிக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழாசிரியர்களுக்கும் பயன் அளிக்கும் சில சலுகைகளை தமிழக அரசு வழங்கினால் தமிழ் வாழும். வளரும். மொழியுணர்வு மிக்க திமுக அரசை விட்டால் வேறு யார் தமிழுக்குச் செய்ய இயலும்?  
by வீர கணபதி,Chennai,India    27-01-2010 07:10:22 IST
 விடுதலைப் போராட்ட வீரர்களைப் போன்றே மொழிப்போராட்ட தியாகிகளும் மதிக்கப்படவேண்டியவர்கள். பிழைப்புக்காகப் பல மொழிகளைக் கற்க வேண்டிய சூழலில் உள்ள நாம், இது போன்ற நாட்களில்தான் நமது மொழியுணர்வைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
''''செம்மொழி அந்தஸ்து'''' என்ற வெற்று ஆரவாரங்களை எழுப்பிக்கொண்டிருக்காமல் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில்பேச உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.தமிழக பள்ளிகளில் ''''தமிழும்'''' இருக்கிறது என்ற நிலையும்,கோயில்களில் ''''தமிழிலும்'''' அர்ச்சனை செய்யலாம் என்ற நிலையும் மாறி தமிழுக்கு ''''முதன்மை'''' இடம் வழங்கப்படவேண்டும்.
புலம்பெயர்ந்த தமிழருக்கு இருக்கும் தமிழ் உணர்வுகூட நமக்கு இல்லையே! என்று நாம் வெட்கப்படவேண்டும். 
by பெ. சக்திவேல் ,Dharapuram ,India    27-01-2010 05:43:59 IST
 தமிழ் தமிழ்னு கலைஞர் நாட்ட ஏமாத்ய்யது பத்தாதா நீயும்மா . 
by c murugan,namakkal,India    27-01-2010 03:22:22 IST
 தாளமுத்து நடராசன் என்பவர் ஒருவர் என்பதுபோல் பேச்சு அமைந்துள்ளது. தவறான பேச்சா? செய்தி தவறா? எனத் தெரியவில்லை. தாளமுத்து, நடராசன் ஆகிய இருவர் இந்தி எதிர்ப்புப் போரில் மாண்டனர். தமிழைப்பற்றிப் பேசி ஆட்சிக்கு வந்த திமுக வே தமிழை மறந்த பின்பு, கலைஞர் வழியில் அவர் குடும்பத்தில் ஒருவர்கூட மொழி இனப் போராட்டங்களை அறிந்த உணர்வாளர்களாக இல்லாத பொழுது, அதிமுக தலைவியிடம் எவ்வாறு உணர்வை எதிர்பாரக்க முடியும? தமிழுக்குத் தலைமை. தமிழர்க்கு முதனமை என்னும் நிலை வந்தால்தான் உலகத் தமிழர்கள் யாவரும் உரிமையுடன் வாழ இயலும்.

வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
by I. Thiruvalluvan,chennai,India    27-01-2010 02:41:43 IST
 உங்க வீர வணக்க நாள் உரையை கண்டு புரிந்தது..ஆஹா..என்ன ஒரு அக்கறையான பேச்சு..அங்கு போயும் ஜெயலலிதா பற்றிய அரசியல் விமர்சனம். இதற்க்கு பதிலாக இந்த மாதிரி கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பதே அந்த தியகிகளிக்கு செய்யும் பெரிய வணக்கமாகும்.  
by M ஸ்ரீராம்,Chennai,India    27-01-2010 00:37:17 IST
 Dear Stalin, Could you please read the agenda of the function again and lets talk only about this function. Your dad also doing the same like even in marriage function talking about AIADMK and politics. Lets behave proffesionally. 
by P Suresh,Florida,United States    27-01-2010 00:34:38 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்