Advertisement
அரசியல் செய்திகள்
11 கோடி ரூபாய் ரேஷன் அரிசி கடத்தல் : ஜெயலலிதா புகார்
மே 25,2008,00:00  IST

Latest indian and world political news information

சென்னை : "தமிழகத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகின்றன. கடந்த ஒரு ஆண்டில், 11 கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டுள்ளது' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதும், தனியாருக்கு விற்பனை செய்வதும் வாடிக்கையாகி விட்டது. பெரும்பாலான ரேஷன் கடைகளில், ஒரு கார்டுக்கு மாதம் பத்து கிலோ அரிசி மட்டும் வழங்குவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதர அத்தியாவசிய பொருட்களை பொறுத்தவரை, ஒரு சில கடைகளில் ஒருசில மாதங்கள் மட்டும் வழங்கப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.



அரசின் இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்தின் மூலம், தி.மு.க.,வினர் மட்டும் பயனடைகின்றனர். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் பெரும்பாலான பகுதி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் இருந்து, வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசியின் அளவு ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 984 குவிண்டால். இதன் மதிப்பு 11 கோடி ரூபாய். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசின் கவனத்திற்கு வராமல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஷன் அரிசி,தொடர்ந்து வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. அரிசி கடத்தல் குறித்து, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன என்பதற்காகவும், கூட்டணிக் கட்சிகள் குறை கூறுகின்றன என்பதற்காகவும், ஒரு சில இடங்களில் ஒருசிலர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.



தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூறிக் கொள்வதில் முதல்வர் முனைப்பாக இருக்கிறாரே தவிர, அந்த திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா, மக்கள் பயனடைகிறார்களா என்பதைப் பற்றி அவர் சிந்திப்பதாக தெரியவில்லை. ரேஷன் அரிசியை கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாருக்கும் மாதம் 20 கிலோ தரமான அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்