Advertisement
அரசியல் செய்திகள்
கண்விழித்து பட்ஜெட்டை தயாரிக்கிறார் மம்தா
பிப்ரவரி 19,2010,00:00  IST

Latest indian and world political news information

புதுடில்லி:புதிய ரயில்கள் மற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரயில் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவது தொடர்பாக மாநில முதல்வர்களின் கோரிக்கை உட்பட அனைத்தையும் ரயில்வே பட்ஜெட்டில் பூர்த்தி செய்ய, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, இரவு வெகு நேரம் வரை கண்விழித்து பணியாற்றுவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து, ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, தன்னை மேற்கு வங்கத்திற்கு மட்டும் ஆதரவான அமைச்சராக கருதக் கூடாது என விரும்புகிறார். அதனால், ரயில்வே பட்ஜெட்டில் பல்வேறு மாநில முதல்வர்களின் கோரிக்கையையும் சேர்ப்பது குறித்து அதிக கவனத்துடன் பணியாற்றி வருகிறார்.துரந்தோ என்ற இடைநில்லா ரயில்கள் அதிக அளவில் விடுவது, தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் போல ரயில் திட்டங்களை நிறைவேற்றுதல், ஆகியவை இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரயில்வே பட்ஜெட்டை இறுதி செய்வதற்காக, கடந்த செவ்வாயன்று, அதிகாரிகளுடன் இரவு வெகு நேரம் வரை கலந்தாலோசித்த பின், அதிகாலை 3.30 மணிக்கு ரயில் பவன் அலுவலகத்தை விட்டு சென்றார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பொது தனியார் கூட்டு முயற்சியில், ரயில் பாதைகள் அமைப்பது குறித்து, பட்ஜெட்டிற்கு முன் தொழில்துறை தலைவர்களுடன் விவாதிக்கப்படும்.அடுத்த பத்தாண்டுகளில், 20 ஆயிரம் கி.மீ., தூரம் ரயில் பாதைகள் அமைக்க, ரயில்வே விரும்புகிறது. மேலும், ரயில்வேயின் பாதுகாப்பு திட்டங்களுக்காக, அதிக நிதி ஒதுக்கீடு கோர, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை, மம்தா பானர்ஜி சந்தித்து பேசலாம் என கருதப்படுகிறது.இதற்கிடையில், மத்திய பொது பட்ஜெட்டில் ஊக்கச்சலுகைகள் திரும்ப பெறப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதனால், நாட்டின் வளர்ச்சி, பொருளாதார மந்த நிலைக்கு முந்தைய 9 சதவீதத்தை எட்டும் வரை, சுங்க வரி மற்றும் சேவை வரி போன்றவற்றை உயர்த்தக் கூடாது என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தொழிற்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனம் (பிக்கி) தலைவர் ஹர்ஷ் பதி சிங்கானியா கூறுகையில், "அரசு ஊக்கச்சலுகைகளை திரும்ப பெற்றால், வளர்ச்சி வீதம் மற்றும் தொழிற்துறை பாதிப்புக்கு உள்ளாகும்.அரசின் ஊக்கச்சலுகைகள் இன்னும் ஓராண்டுக்கு அல்லது வரும் அக்டோபர் 31ம் தேதி வரையிலாவது தொடர வேண்டும்' என்றார். மத்திய பொது பட்ஜெட், வரும் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 அமைசர் கண் விழித்து பட்ஜெட்
தயாரிக்கட்டும் தமிழகத்தை மறந்துவிடாமல் இருத்ந்தால் சரிதான்.  
by na. ஜெயபாலன் ,tamilnadu,tirunelveli-6,India    20-02-2010 14:53:38 IST
 My kind request for the railway minister, to concerntrate more priority to tirunelveli as most people in software profession hailing from tirunelveli are working in Chennai and Bangalore. Additional day time trains and more night time trains reaching and halting at tirunelveli. As Tirunelveli Station trains are less more and most priority is given to Kerala as Kerala has more sufficient and enjoying , tirunelveli is having less focus and attention. Pray madam mamthaji to have more trains starting and ending from tirunelveli 
by C Ambalavanan,Tirunelveli,India    20-02-2010 00:30:55 IST
 ஆமா சாமியோ அம்மாவுக்கு தூக்கம் வராது...கடின உழைப்பு. வாழ்த்துக்கள்.
 
by Arun sankar,Vallanadu,India    19-02-2010 22:28:08 IST
 விருத்தாசலம்-ஜெயந்கொண்டம்-கும்பகோணம்-மன்னார்குடி -திருவாரூர்-ரயில் ரோட்டை மாண்புமிகு முதல்வர் கவனிப்பாரா?  
by m thamizhmani,irumbulikkurichi,India    19-02-2010 20:48:35 IST
 சிதம்பரம்-ஜெயந்கொண்டம்-அரியலூர்- பெரம்பலூர்-ரயில் திட்டத்தை மாண்புமிகு ராஜா கவன்னிப்பர  
by m thamizhmani,irumbulikkuruchi,India    19-02-2010 20:40:16 IST
 urgent need for tamilnadu is the double line tracks in between vilupuram - tuticorin sector and further upto kanniyakumari so that more trains can be put into service and that would give very good revenue for railways.
Secondly all waste scraps may be auctioned to generate more funds.(so much of scraps are lying idle).
Thirdly shopping complexes can be built on wastelands of the railway in cities. 
by mr alagarsamy,chennai,India    19-02-2010 18:55:35 IST
 Railway minister should consider the passanger train facility between chennai to calicut to avoid the rush in ordinery compartments at any time. 
by jayan,chennai,India    19-02-2010 18:39:05 IST
 why should they plan for railway track from tiruvannamalai to bangalore. 
by P ELANGOVAN,bangalore,India    19-02-2010 16:17:36 IST
 சலுகைகளை, இலவசங்களை குறைத்து லாப நோக்கோடு தனியாருடன் செயல்பட்டால் தான் ரயில்வே வளர்ச்சியை துரித படுத்தலாம். அதிக போக்குவரத்து உருவாக்கலாம்.  
by H சுகன்,kovai,India    19-02-2010 08:06:32 IST
 மூன்று நடைமேடை உள்ள ரயில் நிலையங்களுக்கு சப்வே அமைக்க வேண்டும் . அதாவது கும்பகோணம்., தஞ்சாவூர் , மயிலாடுதுறை சிதம்பரம் ,கடலூர் , வில்லுபுரம், தாம்பரம் போன்ற ஊர்களுக்கு அவசியம் தேவை. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இதை யோசிப்பார்களா ?  
by g natarajan,kumbakonam ,India    19-02-2010 07:30:52 IST
 In behalf of the senior citizens I request to the respected Railway minister to extend the benefit of 50% concession to male citizens also as for female.
Please take action to interconnect the platforms by subways rather than the upstairs. This will help the aged people. Allow two three stops for the high speed trains. Restore the train CHENNAI-PALAKKAD-CHENNAI supper fast express. This is will easy the passenger rush. 
by Narayanan,Chennai,India    19-02-2010 06:04:07 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்