Advertisement
அரசியல் செய்திகள்
ரயில்வே திட்டங்களுக்கு எடியூரப்பா ரூ. 2,500 கோடி ஒப்புதல்
பிப்ரவரி 19,2010,00:00  IST

Latest indian and world political news information

பெங்களூரு:"அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்காக, மாநில அரசு, 2,500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும்' என்று, கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர், தலகுப்பா - ஹொன்னவார் (83 கி.மீ.,), ஷிமோகா - ஹன்ஹர் (64 கி.மீ.,), குடுச்சி - பாகல்கோட் (142 கி.மீ.,), ஒயிட்பீல்டு - கோலார்(52 கி.மீ.,), கடக் - ஹவேரி (84 கி.மீ.,), திம்கூர் - தவங்கரே (210 கி.மீ.,) ஆகிய ஆறு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.ஏற்கனவே, நான்கு மற்றும் ஆறு திட்டங்களுக்கு நிதிப்பங்கீட்டின் அடிப்படையிலும், 10 திட்டங்களுக்கு நிலம் இலவசமாக வழங்கியும், மாநில அரசும் ரயில்வேயும் பாதிப்பாதி நிதி அளிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையிலும், ஐந்து திட்டங்கள் அரசு - தனியார் பங்களிப்பிலும் நிறைவேற்றுவதற்கு எடியூரப்பா ஒப்புதல் அளித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 Here, they are only having time for cine programs and utter waste arguments (jaya-karuna) 
by s sujai,Aranthangi,India    19-02-2010 21:16:39 IST
 useless tamilnadu government 
by sv vijay,dubai,United Arab Emirates    19-02-2010 20:49:42 IST
 சிதம்பரம்-ஜெயந்கொண்டம்-அரியலூர்-பெரம்பலூர்-ரயில் திட்டத்தை மாண்புமிகு ராஜா கவனிப்பாரா 
by m thamizhmani,irumbulikkurichi,India    19-02-2010 20:30:21 IST
 தமிழ்நாடு அரசு இது வரை எந்த புதிய ரயில்வே லைன் பற்றியும் கேட்கவில்லைய?  
by S Nagarajan,Chennai,India    19-02-2010 17:01:54 IST
 கர்னாடக முதல்வர் எடியூரப்பா குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை போல செயல்படுகிறார். சினிமா நடிகர்கள், நடிகைகளை அழைத்து மாதத்துக்கு ஒரு ரெக்கார்டு டான்ஸ் ஆடுவதை ரசிக்காமல், பாராட்டு கூட்டம் நடத்தி ஜால்ராக்களின் பஜனை மழையில் நனையாமல், மகன்கள், மகள்கள், மருமகன்கள், பேரன்கள், பேத்திகள் என்று வாரிசுகளை அரசியலில் இறக்கிவிடாமல், ஒட்டு மொத்த மாநிலத்தையும் குடும்ப கம்பெனி போல நடத்தாமல் என்னய்யா அரசியல் செய்கிறீர்கள்? 
by S Dinakaran,Thanjavur,India    19-02-2010 13:56:47 IST
 perambalur is the most backward district in Tamilnadu. A new Railway Survey connecting Attur-Chidambaram via Perambalur was mooted during Lallu''s period itself. But because of the inability of our politicians and no interest from the Perambalur people that was closed without any comment. If Mr. Nepolean , our MP and Mr.Raja , son of the soil, initiate efforts, it will be a life time achievement for them and the perambalur people will never ever forget them.More over, it will uplift the entire economy of the region to a new high level. Can u look into that Mr. Nepolean and Mr. Raja ? We have a strong belief on u.I request ever one from Perambalur to work for this new line demand. If we work together , we can achieve this. 
by K MURALIDHARAN,perambalur,India    19-02-2010 11:35:40 IST
 குஜராத் மோடியை போல எடியுரப்பா சிறப்பாக செயல் படுகிறார்.

தமிழக அரசே இன்னும் எந்த இலவசம் வழங்கலாம் என்ற சிந்தனையா. தூங்கியது போதும் தமிழக வளர்ச்சி பற்றி சிந்தியுங்கள்.  
by H Nagulan,Salem,India    19-02-2010 08:13:43 IST
 நம்ப கலைஞர் இது போல் அக்கறை காட்டுவாரா ?
ariyalur - thanjavur thittam sleeping for 50 years
thanjavur - pattukottai sleeping for 50 years
mayiladuturai- villupuram like javvu mittai 4 years
thanjavur- pudukottai no news
karaikudi - madurai no news
salem - vridhachalam- trichy new train - no news
like there are so many items are pending for long period . will he take steps  
by g natarajan,kumbakonam,India    19-02-2010 07:36:45 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்