Advertisement
அரசியல் செய்திகள்
புனே குண்டுவெடிப்புக்கு கண்டனம் மன்மோகனுடன் ஒபாமா பேச்சு
பிப்ரவரி 19,2010,00:00  IST

Latest indian and world political news information

புதுடில்லி:பிரதமர் மன்மோகன் சிங்கிடம், தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, 11 பேர் பலியான புனே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:



அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது அவர், புனேயில், ஜெர்மன் பேக்கரியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 11 பேர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேம்பாடு குறித்து ஆய்வு செய்ய, இருநாட்டு தலைவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர்.



மேலும், கடந்த சனிக்கிழமையன்று, புனேயில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து விசாரணை நடத்த, பெடரல் புலனாய்வு நிறுவனம் உதவி செய்யும் என, அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.



இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக தற்காலிக செய்தித் தொடர்பாளர் கார்டன் டூகுட் கூறுகையில்,"இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளை, புனே வெடிகுண்டு சம்பவம் போன்ற பயங்கரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்க, அந்நாட்டு அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ஹய் ஜாலியா இருக்கே...
ரா அமைப்பு கவனிக்க!
 
by Arun சங்கர்,Vallanadu,India    19-02-2010 22:24:28 IST
 naxals are from India supported by China. Not from Pakistan. And naxlas only act on partiular area. Not like these guys just want to kill normal local people. 
by A Jeevan Karloss,Oslo,Norway    19-02-2010 14:26:45 IST
 நக்சலைட் தாக்குதலுக்கு விசாரிப்பு இல்லை!!மண்டை குழம்புது. 
by s இபு:பாரிஸ் ,sarcelles,France    19-02-2010 00:40:58 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்