சென்னை:"முல்லைப் பெரியாறு அணை தொடர்பான குழுவில் இடம்பெறுவதால் ஏற்படும் சாதக, பாதகங்களை எண்ணிப் பார்த்து தான் தி.மு.க., முடிவு எடுத்தது. இது, கோர்ட்டுக்கு எதிர்ப்பானது அல்ல' என்று சட்ட அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு பதிலளித்துள்ளார்.அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. தமிழகம், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என, சுப்ரீம் கோர்ட் 2006 பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை முடக்கும் வண்ணம் கேரள அரசு, "கேரளா பாசன மற்றும் பாதுகாப்பு திருத்தச் சட்டம் -2006' என்ற சட்டத்தை, சட்டசபையில் நிறைவேற்றியது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட் போனாராம். அந்த வழக்கை கருணாநிதி முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். 2006 மார்ச் 31ம் தேதி தமிழக அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்கு தொடர ஒரு மனுவை ஜெயலலிதா போட்டாரே தவிர, அந்த மனுவுக்கு ஒரு நம்பரை கூட வாங்க வில்லை. நம்பர் போடாத வழக்கு விசாரணைக்கே வராது.
தி.மு.க., அரசு அமைந்த பின் தான், அந்த மனுவுக்கு நம்பர் வாங்கி, அதை கோர்ட் விசாரணைக்கு தகுதியுள்ளதாக்கி, வழக்கையும் நடத்தி வருகிறோம். ஜெயலலிதா காலத்தில் இந்த முல்லைப் பெரியாறு வழக்கில் வாதாடிய அதே வக்கீலும் சேர்ந்து தான் இப்போதும் தமிழகத்துக்காக வாதாடி இருக்கின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் வக்கீல்கள் வாதம் சிறப்பாக இருக்குமாம், கருணாநிதி ஆட்சியில் சிறப்பாக இருக்காதாம். இது என்ன வாதமோ?
இவ்வழக்கை அரசியல் சாசன பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுப்பிய போது நாம் ஏன் எதிர்க்கவில்லை என்கிறார் ஜெயலலிதா. இவ்வழக்கை, எந்த பிரிவு "பெஞ்ச்' விசாரிக்க வேண்டுமென முடிவு செய்வது நீதிமன்றத்தின் உரிமை. அதை நாம் எதிர்க்க முடியாது. இவ்வழக்கு இரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை.இதில் அரசியல் சட்ட சம்பந்தப்பட்ட விவகாரங்களும் அடங்கியிருக்கிறது என்று கோர்ட் கருதினால் அதை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றும் முழு அதிகாரம் நீதிமன்றத்துக்கு தான் உண்டே தவிர அதை எதிர்ப்பதில் எந்த பயனும் இல்லை.
ஐவர் குழுவில் தமிழகம் இடம்பெறாவிட்டால் முந்தைய தீர்ப்புக்கு எதிரான கேரளாவின் சட்டத்தை தமிழக அரசு ஆதரிப்பதாக அர்த்தம் ஆகிவிடாதா?' என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.கேரள அரசு பிறப்பித்த சட்டம் சரியா, இல்லையா என்பதை ஆராய அல்ல இந்த ஐவர் குழு; மீண்டும் அணையின் பலத்தை சோதித்து பார்க்க, நீரின் உபயோகத்தை கண்டறிய என்று தான் சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது.
ஐவர் குழுவில் இடம்பெறாவிட்டால் அது எப்படி கேரள சட்டத்துக்கு ஆதரவாகி விடும்?இன்னும் சொல்லப்போனால், இந்த ஐவர் குழுவை வரவேற்றிருக்கிறார் கேரளா முதல்வர். அதுமட்டுமல்ல, இந்த குழு அமைக்கப்பட்டதால், சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்பு ரத்தாகி விட்டது என்றும், தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். இப்போது புரிகிறதா ஜெயலலிதாவுக்கு, ஐவர் குழு யாருக்கு சாதகம் என்று?
இந்திய அரசியல் சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வர், சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பை விமர்சிக்கலாமா என்றும் ஜெயலலிதா கேள்வி கேட்டிருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டில் உள்ள ஒரு பெஞ்ச் அல்ல, சுப்ரீம் கோர்ட்டே அரசியல் சட்டத்தின் பாதுகாவல் அரண் தான்.
அந்த சுப்ரீம் கோர்ட், பெரியாறு அணை பிரச்னையில் ஒரு தீர்ப்புச் சொல்லி, அதை இரண்டு முறை மீண்டும் உறுதி செய்து தீர்ப்பளித்த பின்பும், அந்தத் தீர்ப்பை முடக்கும் வகையில் கேரளா ஒரு திருத்த சட்டத்தை நிறைவேற்றி விட்டதே, அதற்கு கேரளா அரசு பெற்றிருக்கிற தண்டனை என்ன?ஒரு குழுவில் இடம் பெறுவதும், பெறாமல் இருப்பதும் நமது விருப்பம். நாட்டு நலன் கருதி, குழுவில் பெறுவதால் ஏற்படும் சாதக, பாதகங்களை எண்ணிப் பார்த்து இது நாம் எடுத்திருக்கிற முடிவு. நீதிமன்றத்துக்கு எதிர்ப்பானது அல்ல.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக, பிரதமர், கேரளா முதல்வர்களுடன் எட்டு முறைக்கு மேல் முதல்வர் கருணாநிதியே நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். ஜெயலலிதா தன் ஆட்சியில் ஒரு முறையேனும் இப்படி கலந்து உரையாடியது உண்டா?
பிரதமருக்கும், மத்திய நீர்வளத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கும், முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து 15 முறை கடிதங்களை முதல்வர் எழுதியிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா எழுதிய கடிதங்கள் மூன்றே மூன்று தான். இந்த லட்சணத்தில் கருணாநிதி உரிமையை விட்டு விட்டதாக அறிக்கை வேறு விடுகிறார்.இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து |
![]() ![]() |
by P Ram,Jakarta,Indonesia 24-02-2010 18:05:23 IST |
![]() ![]() |
by FG Smith,London,United Kingdom 24-02-2010 18:01:49 IST |
![]() ![]() |
by gs ganapathy,chennai,India 24-02-2010 15:22:13 IST |
![]() நீதிபதிகளைப் பற்றி தாறுமாறான விமர்சனம், தகுதியில்லாதவர்களை நீதிபதியாக்க வற்புறுத்தல், தீர்ப்புகளைப் பற்றி ஏளனப்பேச்சு இதெல்லாம் இருக்கும்வரை இதுபோன்ற இடைஞ்சல் தீர்ப்புகளை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். இட ஒதுக்கீடு விஷத்திலும், சென்னை தி.நகரில் உள்ள அனுமதிபெறாத, ஆபத்தான கட்டிடங்களை இடிக்கச்சொன்ன விஷயத்திலும், கோர்ட் உத்தரவை மதிக்காமல் சட்டம் போட்டு தடுத்தவர்கள் தி மு க வினர். மற்ற மாநிலங்கள் நதிநீர் பிரச்னையில் தீர்ப்புகளை மதிக்காமல் நடந்துகொண்டால், தட்டிக் கேட்க நமக்கு தகுதி ஏது? ![]() |
by V மணி,Chennai,India 24-02-2010 14:56:02 IST |
![]() இந்த ஐவர் குழு அணையின் ஸ்திரத் தன்மையை பற்றி சந்தேகம் எழுப்பினால் கேரளா அரசு கொண்டு வந்த சட்டம் சரி என்றாகி விடும். அது சரி இவர் முந்தைய அரசு வழக்கிற்கான நம்பர் வாங்கவில்லை என்கிறாரே... வழக்கறிங்கரான இவருக்கு தெரியாதா ... நம்பர் உடனே கிடைக்காது என்று.. இந்த கால கட்டத்தில் ஆட்சி மாறி விட்டது. அதனால் பின்பு வந்த அரசு இந்த நம்பர் வாங்கும் வேலையை செய்ய வேண்டும் என்பது. சரியான வழக்கரிங்கர்களை போட்டு இருந்தால் இந்த வழக்கு நமக்கு வெற்றி தேடித் தந்திருக்கும் என்பதே ஜெயலலிதாவின் அறிக்கை. அதை கூட புரிந்துக் கொள்ள தெரியாத இவர்களெல்லாம் நம்மை ஆள்கிறார்கள். ஒரு எதிர் கட்சி தலைவரின் அறிக்கைக்கு ஒழுங்கான பதில் தராமல் இப்படி மழுப்பலான அறிக்கை தரும் இந்த அரசின் நிலைமையை பார்த்து வேதனை படுவதை தவிர வேறு வழி மக்களுக்கு கிடையாது. ![]() |
by H நாராயணன்,Hyderabad,India 24-02-2010 13:06:31 IST |
![]() ![]() |
by G Divaharan,Tirunelveli,India 24-02-2010 09:55:49 IST |
![]() ![]() |
by m rajaram,sivaganga,India 24-02-2010 09:55:39 IST |
![]() எப்ப தான் போட்டி போட்டு மக்களுக்கு நல்லது செய்வீங்களோ? கலைஞர் இப்ப தான் துரைமுருகனுக்கு வாய தொறக்க உத்தரவு குடுத்தாரு போல இருக்கு. நீங்க ஆஸ்திரேலியால காலேஜ் கட்டுரீங்கலாமே அது உண்மையா? நம்ம தமிழ்நாடு மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு / வெளி ஒதுக்கீடு எதாவது கொடுங்க சார். உங்களை வாழ வச்ச தமிழ் மக்களுக்கு தண்ணி மட்டுமாவது கொடுங்க. ![]() |
by RK Sudhan,dubai,United Arab Emirates 24-02-2010 09:14:34 IST |
![]() ![]() |
by SD சத்,okc,ok,United States 24-02-2010 08:11:22 IST |
![]() ![]() |
by வெங்கடேசன்,Chennai,India 24-02-2010 07:21:59 IST |
![]() ![]() |
by mokka சாமீ,jawa,Indonesia 24-02-2010 07:08:35 IST |
![]() ![]() |
by N பாலகிருஷ்ணன் ,Ramnad,India 24-02-2010 06:59:53 IST |
![]() ![]() |
by P Amal,Castries,Saint Lucia 24-02-2010 04:58:38 IST |
![]() ![]() |
by I. thiruvalluvan,chennai,India 24-02-2010 04:52:25 IST |
![]() ![]() |
by R Karuppiah Sathiyaseelan,Kinshasa,Congo (Zaire) 24-02-2010 03:38:51 IST |
![]() ![]() |
by B Sivanesan,London,United Kingdom 24-02-2010 03:05:26 IST |
![]() ஆனா அந்த கூட்டத்துக்குதான் ஒரு மண்ணும் தெரியாதே! கும்மாளம் போட தோழியோட திராட்சை தோட்டத்துக்கு போக விடாம பண்ணிட்டாங்க,இப்போ கொடநாட்டுகும் போக வழி இல்லை! ![]() |
by S செந்தில் ,India,India 24-02-2010 03:03:19 IST |